பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூம்பு வடிவ அமைப்பு 277

கூம்பு வடிவ அமைப்பு வடிவக் கணிதத்தில் பலகோண அமைப்பில் அடியை யும், ஒரே உச்சியையும் உடைய முக்கோணங்களைப் பக்கங்களாகவும், நீளம், உயரம், அகலம் ஆகிய வற்றை மூவளை கூறுகளாகவும் உடைய ஒரு மூடிய அமைப்பு, பட்டைக் கூம்பு வடிவ அமைப்பு அல்லது பிரமிடுகள் எனக் குறிக்கப்படும். அடிப்பகுதி முக் கோண வடிவிலிருந்தால், அது முக்கோணக் கூம்பு என்றும், சதுரமாக இருப்பின் சதுரக் கூம்பு என்றும் அடியின் அமைப்பைக் கொண்டு கூம்பின் அமைப் பைக் கூறலாம். எகிப்திலுள்ள பிரமிடுகள் சதுர அமைப்பைச் சார்ந்தவை. கூம்பு வடிவத்தின் பக்கங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் பகுதி பக்க விளிம்பு எனப்படும். உச்சியிலிருந்து அடிப்பக்கத்திற்கு வரையும் நேர் குத்துக்கோடு குத்துயரம் எனப்படும். பக்கப் சாய்வு உயரம் பக்க விளிம்பு ச்சி குத்துயரம் அபு பரப்புகளின் கூடுதல், பக்கப்பரப்பு என்ப தாகும். அடியின் பரப்பு A யும் குத்துயரம் உம் ஆனால் இக்கூம்பு வடிவத்தின் பருமம் V - Ah ஆகும். ஒழுங்கான பலகோணத்தை அடியாகக் கொண்ட கூம்பு வடிவும் ஒழுங்கான கூம்பு வடிவ மெனக் குறிக்கப்படும். இதன் குத்துயரம், அடியின் மையப்புள்ளி வழியே செல்லும். ஒழுங்கான கூம்பு வடிவ மேற்பரப்பின் பரப்பு S=A+' S. இங்கு A என்பது அடியின் பரப்பு: P என்பது அடியின் சுற் றளவு: $ கூம்பு வடிவத்தின் சாய் உயரமாகும். கூர்திரினை 277 ஏதேனும் ஒரு தளம் கூம்பு வடிவத்தைச் சாய்வாக வெட்டினால், முனை முறிக்கப்பட்ட அமைப்புக் கிடைக்கும். அடிக்கு இணையான ஒரு தளம் கூம்பை வெட்டுவதால் உண்டாகும் பகுதி இடைப்பட்ட பகுதி ஆகும். இதன் பருமம் V= h_{A+A,+VA,A,J ; 3 A, A, இணைதளங்களால் உண்டாகும் அடிகளின் பரப்புகள் இரண்டிற்குமிடையேயுள்ள உயரம். பங்கஜம் கணேசன் கூர்திரளை இது படிவுப் பாறைகளில் ஒரு வகையாகும். படிவுப் பாறைகள் தோன்றும் விதத்தில் இரு வகையுண்டு முதலாவது, வேதியியல் வினைகளின் மூலமாகத் தோன்றும் பாறைகள், ரண்டாவது வேதியியல் வினைகளின் மூலமாக இல்லாமல் நீர், காற்று, பனி ஆகியவற்றின் மூலமாகத் தோன்றும் சலனப்பாறை கும். களாகும் T கூர்திரளை மேற்கூறியவற்றில் இரண்டாம் வகை யைச் சேர்ந்ததாகும். நீர், காற்று. பனி ஆகியவற் றால் அரித்து எடுத்து வரப்படும் வண்டல்கள் ஒரு பள்ளமான இடத்தில் சேர்கின்றன, காலப்போக்கில், இவை இறுகி, படிவுப் பாறையாகும். இந்திக் கூர் திரளையில் காணப்படும் துகள்கள் 2-256 மி.மீ அள வில் உள்ளன. கூர்திரளையில் உள்ள துகள்கள் கூரிய முனைகளைப் பெற்றுள்ளன. இக்கூரான பாறைத் துகள்கள் நுண்மணற் பரப்பில் படிந்து இறுகிவிடுகின் றன. அதாவது, கூர்மையான சிறுசிறு கற்கள் நுண் மணற்பரப்பில் பொதிந்துள்ள நிலையே கூர்திரளை (breccia) எனப்படும். இது இப்பாறைக்கே து தோற்றமாகும். உரிய கூர்திரளை போன்று தோன்றும் சலனப்பாறை கள், பாறைத் துகள்களின் அளவைப் பொறுத்துச் சிறு அலகுகளாக (texture) வகைப்படுத்தப்பட் டுள்ளன. அவை, பெருந்திரள்கள்: ரூடைட்ஸ் ( 2 மி.மீ -256 மி.மீ க்கு மேலாக) சிறுதிரள்கள்; அரினைட்ஸ் 1/16 - 2 மி.மீ); நுண்திரள்கள்: லூடைட்ஸ் (1/16 1/256 மி.மீக்குக் கீழாக) கூர்திரளை ரூடைட்ஸ் வகையைச் சேர்ந்த தாகும். இப்பாறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கனிமத் துகள்கள் காணப்படுகின்றன. குவார்ட்ஸ், செர்ட் மற்றும் பாறைத் துகளான கிரானைட், குவார்ட் ஸைட், சுண்ணாம்புப் பாறை (limestone) முதலிய பல பொருள்கள் காணப்படுகின்றன. ரூடைட்ஸ் வகையைச் சார்ந்த உருள் திரளை (conglomerate) என்ற படிவுப் பாறை கூர்திரள் பாறையிலுள்ள கனி மத் துகளையே கொண்டிருக்கும். ஆனால், கூர்