பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கூர்முள்‌ தோலிகள்‌

280 கூர்முள் தோலிகள் இவற்றின் இடையாரங்களில் 2-5 வரை இன உறுப்புகள் அமைந்துள்ள 2n வெளிக்கூட்டில் முன் களும், நுண் இடுக்கிகளும், உணர்ச்சி உறுப்புகளும், குழல் கால்களும் அமைந் துள்ளன. கண்ணாம்புத் தகடுகள் வாய்ப்புறத்திலிருந்து வாய் எதிர்ப்புறத்தை நோக்கி இருது வரிசைகளில் அமைந்துள்ளன. பல வரிசைத் துளைகள் உடைய ஐந்து நீர்ச் சுற்றுத் தொகுகி வரிசைகளும் உள்ளன. வாய் எதிர்முனையில் வரும். த்துளை வரிசைகளே நீர்கற்றுத் தொகுதி வரி சை எனப்படும். புறப்பண்புகள். மேல் கூர்முள் தோல்களின் துருவம் அரைவட்டமாகவும், கீழ்த்துருவம் தட்டை யாகவும் இருக்கும். மேல் துருவத்தில் வாய்முனையும் கீழ்த்துருவத்தில் வாய் எதிர் முனையும் உள்ளன. உடல் பகுதி முழுதும் நிறைந்து காணப்படும் முள்கள் முனைப்பகுதிகளில் குட்டையாகவும் பிற பகுதிகளில் நீண்டும் உள்ளன. கூட்டின் மேற்புறத்தில் ஐந்து இரட்டைக்குழல் கால்கள் அமைந்துள்ளன. வாய் எதிர் முனையிலுள்ள இக்குழல்கால்கள் சலன உறுப்பு களாகச் செயல்படுகின்றன. கூட்டின் நடுவில் அமைந் துள்ள வாயில் ஐந்து பற்கள் காணப்படுகின்றன. வாய்ப்புறத்தைச் சுற்றி மென்மையான வாய்சூழ் சவ்வு உள்ளது. நுண்முள்களும். வாய்புறக்குழல் கால்களும் இச்சவ்வுப் பகுதிக்கு அருகில் உள்ளன. வாய் எதிர்ப் புறத்திலுள்ள பெரிபிராக்ட் என்ற பகுதியில் நுண் முள்களும், இடுக்கிகளும் உள்ளன. சில் முள்தோலிகளின் கூடுகள் கெட்டியாக உள்ளன. ஆனால் எக்கைனோ தூரிடே போன்றவற் றில் கூடுகள் தோல் போன்று உள்ளன. ஆம்பிடஸ் எனும் பகுதி, சிலவற்றில் வட்டமாகவும் வேறு சில வற்றில் ஐங்கோண வடிவமாகவுமுள்ளது. ஆனால் ஒழுங்கான வடிவமற்ற கூர்முள் தோலிகளில் வாய் சூழ் பகுதியும், வாய்ப்பகுதியும் நடுவில் அமைந் துள்ளன. பெரும்பாலும் குழல் கால்கள், உறுப்புகளாகவும் பயன்படுகின்றன. சுவாச ஸ்பாட்டங்காய்டு போன்ற கூர்முள் தோலிகளில்

1 2. 3 கூரீமுள்தோலிகள். 4 சொலாஸ்டர் 5 6 1. ஒஃபியோகோமினா 2. பால்மைப்பல் 3 . பிரிசிங்கா 5. ஆஸ்ட்ரோபெக்டன் 6. கார்கானோசெஃபாலஸ்