282 கூரைக் கட்டுமானம்
282 கூரைக் கட்டுமானம் ஆறு சீரான வெப்பத்தில் வேக வைப்பதால் நல்ல ஓடுகளைப் பெறமுடியும். முதலில் குறை வெப்பத் துடன் தொடங்கி ஈரம் உலர்ந்த பின்னர் 800°C வெப்பம் கொடுக்க வேண்டும். இந்நிலையை மணிநேரம் தளர்த்திய பின் 1300°C வெப்பத்திற்கு உயர்த்த வேண்டும். மூன்று மணி நேரம் இதே நிலை நீடித்த பின் ஆறு மணி நேரத்தில் வெப்பத்தைத் தளர்த்த வேண்டும். மீண்டும் வெப்பத்தை கரித்து நான்கு மணி நேரம் அதே நிலையில் வைத் திருக்க வேண்டும். பின்னர் படிப்படியாக வெப்பம் குறைவதற்கு வகை செய்ய வேண்டும். மொத்தத்தில் ஓடுகளை வேக வைக்க 72 மணி நேரம் ஆகும். இறுதியில் மிகுதியாகச் சுட்ட ஓடுகளையும், வேகாத ஓடுகளையும் நீக்க வேண்டும். அதி நல்ல ஓடு என்பது கீறல்; வளைவு, சிதைவு இல்லாமல் முறையான வடிவத்தில், சரியான அளவில் முழுமையாக வேக வைக்கப்பட்ட ஓடாக இருக்கும். உறுதியான நீடித்து உழைக்கக் கூடிய ஓட்டில் தட்டினால் நல்ல ஒலி தோன்றும். அடுக்கும்போது ஒன்றோடு ஒன்று பொருந்த வேண்டும்; சீரான நிறம் இருக்க வேண்டும். குறுக்காக வெட்டினால் இறுக்கமாகச் சீரான நிறத்தில் இருக்கும். 24 மணி நேரம் நீரில் மூழ்க வைத்த பின்னர் 20% எடைக்கு மேல் நீர் உறிஞ்சக் கூடாது. ஒரு ச.செ.மீ. பரப் புக்கு 75 கி.கி அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஆற்றல் பெற்று இருக்கும். உடைக்கும் பளுவைத் தாங்கும் ஆற்றல் 1 ச.செ. மீட்டருக்கு 1.5 கி, கிராமாக அமையும். அலகாபாத் ஓடுகள். எந்திரங்களால் அழுத்தம் தரப்பட்டு அச்சின் மூலம் தயாரிக்கப்படும் இவை மிகுந்த வலிமை பெறும் வகையில் வேக வைக்கப்படு கின்றன. ஒன்றோடு ஒன்று சரியாகப் பொருந்தும் வகையில் பிடிப்பு, மேடுகள் இணைந்து இருக்கும். கூரைகளின் பல பகுதிகளில் பயன்படும் வகையில் பல வடிவங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. அலை அலையாக வளைவுள்ள ஓடுகள். கூரை களின் மீது வேயப்படும்போது அலை அலையான மடிப்புகளுடன் அவை தோற்றம் அளிக்கும். ஒன்றின் முனை மற்றொன்றில் படியுமாறு ஓடுகள் அடுக்கப் படவேண்டும். தட்டையான ஓடுகள். இவை மரச் சட்டங்களின் மீது அடுக்க ஏற்ற முறையில் துளைகளுடன் தயாரிக் கப்படுகின்றன. இவற்றைத் தளத்தில் பதிக்கவும் பயன்படுத்தலாம். ஓரங்களிலும் முனைகளிலும் படி வதற்கு வசதியாக இவற்றில் வெட்டுகள் இருக்கும். மங்களூர் ஓடுகள். அலகாபாத் ஓடுகள் போலவே ஒன்றோடு ஒன்று சரியாகப் பொருந்தும் வகையில் பிடிப்பு, மேடுகள் இவற்றுடன் இணைந்து இருக்கும். சிவப்பு நிறமான இரு வளைவுகள் கொண்ட தனி வகையான அச்சில் இவை தயாரிக்கப்படுகின்றன. ஒரு , மீ பரப்பளவிற்கு 15 ஓடுகள் தேவைப்படும். தட்டு ஓடுகள். இலேசாக வளைந்த சிறிய கன மான ஓடுகளாக இருக்கும். முதலில் தட்டையான தகடுகளாகச் செய்யப்பட்டுப் பின்னர் வளைக்கப் படும். முறைப்படி இவற்றை உலரவைத்து வேக வைக்க வேண்டும். அரை வட்ட ஓடுகள். பானைகள் வனையும் சக்கரத்தின் உதவியால் தயாரிக்கப்படும் நாட்டுப்புற ஓடுகளான இவை அரைவட்ட வடிவத்தில் 20 செ. மீ நீளத்தில் இருக்கும். முதலில் குழிவு அமையுமாறு பரப்பப்படும். பின்னர் அவற்றின் மீது குவி அரை வட்டம் அமையுமாறு கவிழ்த்து அடுக்கப்படும். வை எளிதில் உடையக் கூடியவை. ஏ. எஸ். எஸ். சேசுர் Gn Coon. R. C. Coates, et,al, Structural Analy sis, The English Language Book Society & Nelson, Great Britain. 1981. கூரைக் கட்டுமானம் வீடு, கட்டடம், அரங்கம் போன்றவற்றின் மேல் புறத்தின்மீது சுவிந்திருக்கும் கட்டமைப்பு உருவமே கூரை (roof) எனப்படும். கட்டப்படும் கூரை எந்த உருவத்தில் இருந்தாலும் அதன்மீது ஏற்றப்படும் சுமையைத் தாங்கி நிற்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். தட்பவெப்ப நிலைகளில் உறைபனி, பனிக்கட்டி இவற்றாலும் கூரைகளின் மேல் மிகுந்த கமை ஏற்படுகிறது. பெருங்காற்றாலும், வாழிடமாகப் பயன்படுத்தப்படும் மரச் சட்டகக் (wood framed structure) கட்டகங்களைக் கட்டும் பொழுது பொதுவான கூரைவகிை பயன்படு கிறது. இவ்வகைக் கட்டுமானம் கூ கூழாங்கற்களின் தொகுப்பு,மூடும் உறை ஒன்றின் மீது ஓடு பதிக்கப் பட்ட அடுக்கு ஒட்டுப்பலகை ஆகியவற்றில் முகட்டி லிருந்து வடிப்பு (eaves) வரை செல்லும் கை மரங் களின் (rafter) மீ து பொருத்தப்படுகிறது. கூரை வேய வேண்டிய பகுதியின் அகலம் ஏறக்குறைய மீட்டருக்கு அதிகப்பட்டால் மரத்தாலான கோர்வு உத்திரங்கள் (roof trusses) கைமரங்களுக்குப் பதி லாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், தாங்கு மானம் (support) கொடுக்க வேண்டியிருந்தால், கோர்வு உத்திரங்களுக்கிடையே நெடுக்குச் சட்டங் களைப் (purlins) பயன்படுத்தலாம். தொழிற்சாலைக் கட்டடங்களின் கூரைகள் இதே கட்டுமான முறையில்தான் அமைக்கப்படுகின்றன. ஆனால் கோர்வு உத்திரங்கள், நெடுவிட்டங்கள்,