பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 கூலி ஊக்கத்தொகை

286 கூலி ஊக்கத்தொகை தகைய புதிய வகைக் சுட்டகங்கள் அனைத்தும் கவின்மிகு தோற்றத்தை வழங்குவதோடு, பரப்புகளை மழை, வெயில் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றன. இக்கருதுகோள் அங்காடிகளுக்காகக் குறைந்த இடை ஆரம் கொண்ட கொடுங்கைகளின் மேலாகக் கூரைகளை அமைப்பதற்கும் 210 மி. மீட் டருக்கு மேல் இடைவெளி கொண்ட திடல்களின் பரப்புகளிலும் பயன்படும். கு உதயபாவன் நூலோதி. I. C. Syal & A. K. Goel, Reinforced Concrete Structures, II Edition, Wheeler & Co Pvt. Ltd. Allahabad, 1987, கூலி ஊக்கத் தொகை தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம், கால அளவு முறை (time rate), உற்பத்தி அளவு முறை {picce rate) என்னும் இரண்டின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. கால அளவு முறையில் ஒரு ரின் ஊதியம் அவர் எவ்வளவு நேரம் வேலை செய் தாரோ அதைக் கால/நேர ஊதியத்தைக் கொண்டு பெருக்கினால் கிடைக்கும். அதாவது மொத்த நேரம் (T)x ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கால ஊதியம் . இதைப் போல ஒருவர் எத்தனை அலகு உற்பத்தி செய்தாரோ அதை, அலகு வீதத்தை அதாவது ஓர் அலகுக்குரிய ஊதியத்தைக் கொண்டு பெருக்கினால் வரும் ஊதியமாகும். மொத்த அலகு (N)X ஓர் அலகுக்குரிய ஊதியம் (R). மேலும் தொழிலாளர்களின் செயல்திறன். அவர் களின் திறமை இவற்றை ஊக்குவிக்கும் பொருட்டும். நட்புணர்வை வளர்க்கும் பொருட்டும் உழைப்பிற் கேற்ற கூலியுடன் வழங்கப்படும் பரிசுகள் ஊக்கத் தொகையாகும். இப்பரிசுத்தொகை, கூவி ஊக்கத் தொகை (wage incentive) எனப்படும். வகைகள். கூலி ஊக்கத் தொகையைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம். நிதி ஊக்கத் தொகை கூலி ஊக்கத்தொகை பாதிநிதி ஊக்கத் நிதியிலா தாகை ஊக்கத் தொகை நிதி ஊக்கத்தொகை. தொழிலாளர்களின் செயல் திறனைப் பாராட்டும் வகையில் நிதி ஊக்கத்தொகை மிகை ஊதியம் (bonus), விடுப்புப் பயண ஈட்டுப்படி. முழு மருத்துவச் செலவு ஈட்டுச் சலுகை என்பன அடங்கும். ஊக்கத் பாதி நிதி ஊக்கத்தொகை. தொழிலாளர்களின் செயல் திறனைப் பாராட்டிப் பாதி நிதி தொகை பின்வரும் வழிகளில் வழங்கப்படும். சலுகை விலையில் தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் மதிய உணவு, தேநீர், காஃபி இவற்றுடன் குழந்தை களின் திருமணம், மேல்படிப்பு ஆகியவற்றிற்குத் தரப் படும் குறைந்த வட்டிக் கடன். ஒரு வழிப் பயண ஈட்டுப்படி, ஓய்வூதியம் முதலியன. நிதியிலா ஊக்கத்தொகை. தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அவர்களின் செயல்திறனைப் பாராட்டும் வகையிலும் உற்சாசு மூட்டும் வகையிலும் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல், வீடு, மருத்துவம், படிப்பு பொழுதுபோக்குவதற்குத் தகுந்த வசதி செய்து கொடுத்தல், பதவி உயர்விற்கு வழி வகுத்தல், பயிற்சி மற்றும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டம் வகுத்தல் ஆகிய முறைகளில் வழங்கப் படும். மேலும் ஊக்கத்தொகை பின்வரும் களிலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வழி, நேரடி ஊக்கத்தொகை. இம்முறையால் எவர் ஒருவர் தம் செயல்திறனால் நிர்வாகத்திற்கு மிகு உற்பத்தி மூலம் இலாபம் ஈட்டிக் கொடுத்துள்ளாரோ அவருக்கு மீண்டும் ஊக்கமூட்டும் வகையில் வழங்கும் நிதி நேரடியாக அவருக்கே கிடைக்குமாறு செய்வ தாகும். மறைமுக ஊக்கத்தொகை. இம்முறையால் ஒரு தொழிற்சாலையில் எந்தத் துறையினர் அல்லது பிரி வினர் திறனாலும் முயற்சியாலும் மிகு உற்பத்தி மூலம் நிர்வாகத்திற்கும், உடைமையாளர்க்கும் மிகு வருவாய் ஏற்பட உழைத்துள்ளனரோ, அவர்களைப் பாராட்டும் பொருட்டு அப்பிரிவின் தலைவர்க்கோ பிரிவின் மேற்பார்வையாளர்க்கோ ஊக்கத்தொகை வழங்கப்படும். அவ்வாறு பெற்ற ஊக்கத்தொகையை அவர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர் களுக்குக் கருத்து வேற்றுமையின்றிப் 'பிரித்துக் கொடுப்பர். கூலி ஊக்கத்தொகை வழங்கலின் குறிக்கோள்கள், கூலி ஊக்கத்தொகைமுதலாளிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் இலாபமானதாக இருக்க வேண்டும். அதிக உற்பத்திக்குத் தொழிலாளர் உறுதுணையாக இருப் பதுடன் உற்பத்தியின் விலைக் குறைப்பிற்கும் உதவி யாக இருப்பர். தொழிலாளர்களின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப வழங்கப்படும் தகுதிச் சன்மானம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள உதவுமாறு அமைய வேண்டும். ஊக்கத்தொகைத் திட்டம் தொழிலாளர்களின் கவ னத்தை ஈர்க்கும் வகையிலும் ஏற்கும் வழியிலும் அமைய வேண்டும். இத்திட்டம் தொழிலகத்திலுள்ள