பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவாசியரர்க்கார்‌ 11

பெரிய அளவில் உள்ள பெயர்ச்சியாகும். இச்சிவப்புப் பெயர்ச்சிக்குப் பேரண்டம் எக்கணமும் விரிவடைந்து கொண்டு இருப்பதே காரணம் என அறிஞர்கள் கருதுகின்றனர். து உண்மையாயின். குவாசர்கள் அதிவேகமாக ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் 9/10 அளவு புவியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன எனப் பொருளாகும். தனால் குவாசருக்கும் கண் புவிக்கும் இடையேயுள்ள தொலைவு குறைந்தது 10 ஒளி ஆண்டுகளாக, இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு தொலைவிலிருந்தும் குவாசர்கள், களுக்குத் தெரிவதால், இவை மிகவும் ஒளிமிக்கன வாக இருக்க வேண்டும் என்பதும் புலப்படுகிறது. புவியிலிருந்து காணும்போது, குவாசர்கள் மிகவும் மங்கலான புள்ளிகள் போல் தோன்று கின்றன. இவற்றின் குறுகிய கால ஒளி அளவில் காணப்படும் ஏற்றத்தாழ்விலிருந்து. குவாசர்கள் கட்டுக்கோப்பான உருவங்கள் (compact bodies) என்றும், அவற்றின் உட்பகுதியில் உள்ள சில பொருள்களின் குறுக்களவு ஓர் ஒளிநாள் அளவு இருக்கும் என்றும் கருதுகின்றனர். மங்கலாகத் தோன்றிடினும், ஒரு குவாசரிலிருந்து ரு கிடைக்கும் ஒளி அலைகளின் ஆற்றல் ஏறத்தாழ 4 × 1002 எர்க்ஸ் எனக் கணித்துள்ளனர். நூற்றுக்கணக்கான அண்டங்களிலிருந்து ஆற்றலுக்குச் சமமாகும். இந்த அளவுக்கு மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்துவதால். ஒரு குவாசரின் ரேடியோ இது வரும் எடை, சூரியனின் எடையைவிட 10 மடங்கு அதிக மாக இருக்க வேண்டும். இம்மாபெரும் ஆற்றலின் அடிப்படை அதன் தூண்டுகோல் ஆகியன இதுவரை புலனாகவில்லை. அண்டங்களின் மோ தல், பருப் பொருளை (matter) எதிர்ப் பருப்பொருள் (anti matter) அழித்தல், விண்மீன்களுக்கு இடையே ஏற் படும் மோதல், ஈர்ப்பாற்றலின் வெளிப்பாடு போன்ற பல காரணங்களை உய்ப்பினும் அறிஞர்களால் எதையும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தொலைவு. நிறமாலையின் அமைப்பு ஆகியவற்றி லிருந்து, குவாசர்கள் சூரியனைவிடப் பலகோடி மடங்கு மிகு நிறை கொண்ட வளிமக் கோளங்கள் எனக் கணித்துள்ளனர். குவாசரின் விட்டம். சூரியனின் விட்டத்தைப்போல் குறைந்தது 1000 மடங்கு மிகுதியாக இருக்கும். சூரிய மண்டலத்தையே ஒரு குவாசருக்குள் அடக்கி விடலாம், பரிமாணம் மிகுதியாக இருப்பதால், குவாசரின் சராசரி அடர்த்தி நீரின் அடர்த்திக்குச் சமமாகும். குவாசரின் மேற் பரப்பு. வெப்பமாக இருக்கும். உட்பகுதியைவிட அதிக புள்ளி விவரங்களிலிருந்து, அதிக அளவு சிவப்புப் பெயர்ச்சி கொண்ட குவாசர்கள் குறைந்த அளவு சிவப்புப்பெயர்ச்சியுள்ள குவாசர்களின் எண்ணிக்கை குவாசியார்க்கார் 11 யைவிட அதிகம் எனத் தெரியவருகிறது. எனவே, ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பேரண் டத்தில் அதிகமான குவாசர்கள் காணப்பட்டிருக்கும். இதே காலக் கட்டத்தில், பல அண்டங்கள் தோன்றி யமையால் குவாசர்களுக்கும். சில அண்டங்களின் பிறப்புக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் கின்றனர். கருது அவர்கள் கருதுவதுபோல், பேரண்டத்தின் தொலைதூர எல்லையில் காணப்படுவதே குவாசர்கள் என்றால், பேரண்டத்தின் வரலாறு, அமைப்பு ஆகியன பற்றிய பல செய்திகளை வெளிக்கொணரக் குவாசர்கள் பயன்படலாம். அவை வெளிவரும் வரை குவாசர்கள் வானத்தில் விண்மீன்கள் போலவே காட்சியளிக்கும். குவாசியார்க்கார் உணவுப்பற்றாக்குறையாலும் வை. செல்லமுத்து புரதச்சத்துக் குறை வாலும் இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தை களிடம் காணப்படும் இந்நோய், அஃப்ரிக்கா, ஐரோப் பாவில் சில இடங்கள், தென் இந்தியா ஆகியவற்றில் காணப்படுகிறது. பால் குடிப்பதை நிறுத்தியதும் குழந்தைகளுக்குத் தானிய வகை உணவைக் கொடுப் பதாலும், வறுமையாலும். ஊட்டச்சத்துக் குறை வாலும் இந்நோய் தோன்றுகிறது. சரிவிகித உணவைப் பற்றிய அறியாமையும், கொடுக்க முடியாத வறுமை யுமே இதற்கு முக்கிய காரணங்களாகும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றி, வீங்கிய காலும், பெருத்த வயிறும் கொண்டு காணப் படுவர். தோலிலும் தலைமுடியிலும் நிறமாற்றம் தோன்றக்கூடும். இவர்களிடம் உள் அடங்கிய குழி விழுந்த கண்ணும், முகம், தலைகளில் எலும்புடன் ஒட்டிய தோலும், தோலின் அடியில் கொழுப்பு இல்லாமல் உலர்ந்து நீள்சக்தி குறைந்து, துருத்திக் கொண்டுள்ள விலா எலும்புகளும், வீங்கிப் பருத்த வயிறுமே காணப்படும். உடல் குறைந்து, வெப்பநிலை ஈரல் பெருத்து மென்மையாகவும். ஓரங்கள் உருண்டும் இருப்பதால் வலியோ மஞ்சள் காமாலையோ காணப்படுவதில்லை. இவர்களை நோய்கள் எளிதில் தாக்கும். மனவளர்ச்சி குன்றியும் காணப்படுவர். பால் மருத்துவம். புரதச்சத்து போன்றவற்றைக் கொடுத்து நிறைந்த முட்டை, வர இந்நிலை மாறும். தொற்று நோய்களையும் வைட்டமின் குறைவையும் சரி செய்ய வேண்டும். சரிவிகித உணவைக் கொடுப்பதுடன் வயிற்றுப்போக்கு ஏற் படா வண்ணமும் பாதுகாக்க வேண்டும். மா.ஜெ.ஃபிரடரிக் ஜோசப்