பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூழ்ப்‌ பிரிகை 297

சு பாதையைக் காண முடியாது. ஆனால் அதே ஒளியை ஒரு கூழ்மத்தில் செலுத்தும்போது ஒளி செல்லும் வழி கண்ணுக்குப் புலப்படும். கூழ்மங்களின் துகள்கள் மூலக்கூறுகளைவிடப் பெரியவையாகையால் அவை ஒளிக்கதிரைச் சிதறடிப்பதே இதற்குக் காரணமாகும். முதலில் இது ஃபாரடே என்பாரால் கண்டுபிடிக்கப் பட்டுப் பின்னர் டிண்டால் என்பாரால் விரிவாக ஆராயப்பட்டது. எனவே து டிண்டால் விளைவு எனப்படும். பிரௌனியன் இயக்கம். மீநுண்ணோக்கியின் வழியே கூழ்மக் கரைசாலை நோக்கினால் அதிலுள்ள பிரிகைநிலைப் பொருளின் துகள்கள் நிலையற்று டைவிடாமல் அங்குமிங்குமாக வேகமாக அலைந்து கொண்டிருக்கின்றன. இதை முதன்முதலில் அறிந்து வெளிப்படுத்திய இராபர்ட் பிரௌன் என்பாரின் நினைவாகவே இவ்வியக்கத்திற்குப் பிரௌனியன் இயக்கம் எனப் பெயரிடப்பட்டது. பிரிகை ஊடக மூலக்கூறுகள் பிரிகை நிலைப்பொருளின் துணுக்கு களுடன் மோதுவதே இதற்குக் காரணம். வெப்ப நிலை அதிகரிப்பிற்கேற்ப, பிரௌனியன் இயக்கமும் மிகுதியாகிறது. மின் மின்முனைக் கவர்ச்சி, கரைசாலுள்ள துகள்கள் மின்னேற்றம் பெற்றுள்ளமையால், அவற்றினூடே மின்னோட்டத்தைச் செலுத்தும்போது அவை முனைகளை நோக்கி நகர்கின்றன. தற்கு மின் முனைக் கவர்ச்சி (electrophoresis) என்று பெயர். எடுத்துக்காட்டாக. U -வடிவக் ழாயில் ஆர்சீனியஸ் சல்ஃபைடு கூழை எடுத்துக் கொண்டு அதில் னேற்றத்தைச் செலுத்தும்போது நேர்மின்முனையில் அதன் துகள்கள் திரள்கின்றன. ஆலைத் தொழில் கங்களில் மாசு நீக்க இத்தத்துவம் பயன்படுகிறது. மின் மின்சவ்வூடு பரவல். கூழ்மத் துகள்கள் மின் புலத்தில் மின்முனைகளை நோக்கி நகர்வதைத் தடுக்கும்போது பிரிகை ஊடகத் துகள்கள் நகர வேண்டிய திசைக்கு எதிர்த்திசையில் நகர்கின்றன. இதற்கு மின்சவ்வூடு பரவல் (electro osmosis) என்று பெயர். காட்டாக ஒரு U வடிவக் குழாயில் ஆர் சீனியஸ் சல்ஃபைடை நுண்துளையுள்ள இரு சவ்வுத் திரைகளுக்கிடையில் செலுத்தி அதன் இரு புயங் களிலும் நீரிட்டு மின்சாரத்தைச் செலுத்தும்போது கரைசால் நேர்மின்முனையை நோக்கித் தடுக்கப்படு கிறது. ஆனால் பிரிகை ஊடகம் இடை த்திரையைத் தாண்டி எதிர்மின் முனையை நோக்கி மேலே நகர் கிறது. இதனால் நீரின் நிலை உயர்கிறது. களிமண்ணி லிருந்து ஈரத்தைப் போக்கவும் சாயத் தொழிலில் உலர் சாயத்தூள் தயாரிக்கவும் இம்முறை பயன்படுகிறது. திரள்தல். கூழ்நிலைக் கரைசாலில் அடங்கியுள்ள பிரிகை நிலைப்பொருளின் துகள்கள் தம். இயல்பி ளின்றும் மாறி ஒன்றோடு ஒன்றோடு ஒன்றாக ஒன்றாக இணைந்து திரண்டு வீழ்படிவாதல் திரள்தல் (coagulation) எனப் படுகிறது. இது கூழ்களை நீண்டநாள் வைத்திருட்ப கூழ்ப் பிரிகை 297 தாலோ மின்பகுளியைச் சேர்ப்பதாலோ ஏற்படு கிறது. மின்பகுளியின் மின்னேற்றம் கூழ்த் துகள்களின் மின்னேற்றத்தைச் சமப்படுத்துவதாலேயே உடனடித் திரள்தல் நிகழ்கிறது. காட்டாக. ஆர்சீனியஸ் சல்ஃ பைடு கரைசாலில் துகள்கள் எதிர்மின்னேற்றம் பெற் றுள்ளன. இதனுடன் அலுமினியம் குளோரைடு கரை சாலைக் கலந்தால் ஆர்சீனியஸ் சல்ஃபைடு வீழ்படி வாகிறது. மின்பகுளிகளைத் தனியாகக் கலக்காமல் மாறு மின்சுமை கொண்ட கூழ்க் கரைசால்களை ஒன் றோடு ஒன்றாகக் கலந்தாலும் திரள்தல் நிகழ்கிறது. கூழ்நிலைப் பாதுகாப்பு. ஜெலேட்டின், அல்புமின், ரெசின் போன்ற கரைப்பான் விரும்பும் சுரைசால் களைக் கரைப்பான் வெறுக்கும் கூழ்களுடன் சேர்ப்ப தால் வீழ்படிவாதலிலிருந்து அவற்றைத் தடுக்கலாம். கரைப்பான் விரும்பும் கூழ்களின் இத்தகைய பாது காப்புத்திறன் ஒவ்வொரு கூழுக்கும் மாறுபடுகிறது. து கூழ்ப் பாதுகாப்புத் திறன் (gold number) என்று வரையறுக்கப் படுகிறது. 10.மி.லி. தங்கக் கரை சாலுடன் 10% சோடியம் குளோரைடு கரைசலைச் சேர்க்கும்போது ஏற்படும் திரள்தலைத் தடுக்க எத்தனை மில்லிகிராம் பாதுகாப்புக் கூழ் தேவையோ அதுவே அந்தக்கரைப்பான் விரும்பும் கரைசாலின்பாது காப்புத்திறன் ஆகும். ஜெலெட்டினின் கூழ்ப் பாது காப்புத்திறன் 0. 005: முட்டை வெள்ளை-0. 08; கரு வேலம் பிசின் - 0. 10. இதிலிருந்து ஜெலேட்டினுக்கே மிகுகூழ்ப்பாதுகாப்புத் திறன் உள்ளதென அறியலாம். பயன்கள். கூழ்கள் அன்றாட வாழ்க்கையிலும், தொழில் துறையிலும் பலவிதங்களில் பயன்படு கின்றன. பால், கிரீம் போன்றவை கூழ்களா கும். தோல் பதனிடுதல், புகைப்படத் தட்டுத் தயாரித்தல், சோப்பு மூலம் அழுக்கு நீங்குதல் முதலியன கூழ்த் தன்மையைப் பொறுத்தவையேயாகும். வெள்ளிக்கூழ், தங்கக்கூழ், கால்சியக் கூழ் ஆகியவை ஊசி மருந்து களாகப் பயன்படுகின்றன. கந்தகக் கூழ், பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. ஆலைகளிலிருந்து வெளியேறும் கரிப்புகை ஒரு கூழ்நிலைப் பொருளே யாகும். இவை கூழ்களின் மின்கவர்ச்சியைப் பயன் டுத்தி அவை வெளியேறும் முன் தடுக்கின்றன. இவ்வாறே சாயக் கடைகளில் வெளியேறும் கழிவு நீரில் கூழ்ப்பொருள்கள் உள்ளன. அவற்றின் மின்னேற்றத்தை அறிந்து ஒன்று சேர்த்து அவற்றை உரப் பொருளாகப் பயன்படுத்தலாம். உடலிலுள்ள ரத்தமும் ஒரு கூழே ஆகும். காண்க, பான்மம்: டோனான் சமநிலை. கூழ்ப் பிரிகை தெய்வீகன் தக்கதொரு சல்லைப் பயன்படுத்தி ஒரு கூழ்மக் கரை சலிலுள்ள கூழ்ம நிலைமைப் பொருளைப் பிரிகை