பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 கூழைக்‌ கடா

200 கூழைக்கடா மரக்கிளைகளில் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்கின்றது. இப்பறவை பாகிஸ்தான், இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலும், நீர் வளமிக்க பகுதி களுக்கருகில் காணப்படுகின்றது. இது விரைவாகப் பறக்கும் ஆற்றலற்றது. இரவு நேரங்களில் மரத்தின் மேல் அமர்ந்து துயில் கொள்ளும். உடல் . இப்பறவை தோற்றத்தில் கழுகை விடப் பெரிய தாக இருக்கும். ஆண் பறவை சுமார் 160 செ.மீ. நீளத்துடனும் 35 செ.மீ. நீளமுள்ள அலகு டனும் இருக்கும், சிறகுகள் ஏறத்தாழ 64 செ.மீ. நீளமுடையன. வால் பகுதி 48 செ.மீ. நீள முடையது. இப்பறவை 12 கிலோவும் இதன் எலும்பு கள் 1 கிலோ எடையுமாக இருக்கும். கழுத்துப் பகுதியில் 17 முள்ளெலும்புகள் உள்ளன. இப்பறவைக்கு ஊதுகுழல் தசைகள்(syringeal muscle} ல்லை, அலகு வெளிர் நீல நிறமுடையது. அலகின் நுனி மஞ்சள் நிறமுடன் இருக்கும். மேல் அலகின் முனை கீழ்நோக்கி வளைந்திருக்கும். கீழ் அலகில் நீண்ட தொங்கும் பை இணைந்திருக்கும். அலகில் புள்ளிகளும் காணப்படும். முகத்தில் இறகுகள் இல்லை. தலையும் கழுத்தும் வெண்மையாக இருக் கும். கீழ்ப்பகுதி சாம்பல் கலந்த வெண்மையாகவும் வால் குறுகலாகவும் சதுரமாகவும் இருக்கும். பொது வாக ஆணும் பெண்ணும் உருவத்தில் ஒத்துள்ளன. மீன் இப்பறவை மீன்களை உணவாசுக் கொள்கிறது. கீழ் அலகிலிருந்து நீள்வாக்கில் தொங்கும் பை பிடிக்கும் வலை போலப் பயன்படுகிறது. வேனிற் காலத்தில் அப்பையிலிருந்து வடியும் நீர் உடலின் வெப்பத்தைத் தணிக்கப் பயன்படுகிறது. கழுத்தை S' வடிவில் வளைத்து உள்ளே இழுத்துக் கொண்டு சிறகுகளைச் சீராக அடித்துப் பறக்கும். நீள் போக் கிலும் ஒன்றன் பின் ஒன்றாகவும் பறப்பதைக் காணலாம். முற்பகல், பிற்பகல் நேரங்களில் புவி மட்டத்தின்று மேல்நோக்கிச் செல்லும் வெப்பக் காற்றில் மிதந்து உயரச் செல்லும். ஒரு பறவை ஒரு நாளில் சுமார் இரண்டு கிலோ மீன்களைத் தின்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பறவை கூட்டுறவு முறையில் மீன் பிடிப்பதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கும். சுமார் நூறு அல்லது இருநூறுபறவைகள் அரை வட்ட வடிவமாகப் பறந்து தங்கள் சிறகுகளால் மீன்களை ஒருபக்க மாகத் துரத்தும். பின்பு பின்னால் வரும் பறவைகள் சுற்றி வளைத்து மீன்கள் பக்கவாட்டில் தப்பிச் செல்ல முடியாமல் பார்த்துக் கொள்ளும், மீன்கள் கூட்டமாகத் திரண்ட பிறகு அலகைத் திறந்து அடி அலகை நீரில் நுழைத்தவாறு நீந்தும். அப்பொழுது அடி அலகில் உள்ள பையில் மீன்கள் வந்து சேரும். பின்னர் அலகை மூடி நீரை வெளிப்படுத்தி அலகினுள் சேர்ந்த மீன்களை விழுங்கும். கூழைக் கடாப் பறவைகள் மீன் கொத்தி பறவைகளைப் போல் நீரில்பாய்ந்து மீனைப் பிடிப்பதில்லை. இப்பறவைகள் பெலிகானஸ் ஒனோகுரோடேலஸ் மீன்களைப் பெருமளவில் பிடித்து உண்ணுவதால் மீனினத்திற்குப் பேரழிவு ஏற்படுகிறது. கூழைக்கடாவின் இனப்பெருக்க காலம் நவம்பர்- ஏப்ரல் ஆகும். இப்பறவை வெவ்வேறு மாதங்களில் பலவிடங்களில் கூடி செய்யும். இனப்பெருக்கம் இதன் கூடு பனைமரம், வேப்ப மரம், கருவேல மரம், புளிய மரங்களின் உச்சிக் கிளைகளில் காணப்படும். கூடுகள் பெரியவை: குச்சிகளையும், வைக்கோலையும் பயன்படுத்திக் கூடுகள் அமைக்கும். கூட்டமாகக் கூடி ஒரே பகுதியில் நெருக்கமாகக் கூடு கட்டுவதே இப் பறவைகளின் வழக்கமாகும். இப்பறவையுடன் செம் முதுகு நாரையும் (painted stork) உடன் ஒரே பகுதியில் நெருக்கமாகக் கூடமைத்தலைக் காணலாம். சில வேளைகளில் மக்கள் வாழும் பகுதி களிலும். நெடுஞ்சாலைகளிலுள்ள மரங்களிலும் கூடு கட்டும். நீர் நிலைகளில் காணப்படும் முள் மரங் களிலும் கூடுகட்டும். பெரும்பாலும் இது கூடமைக கும் இடத்தருகே மீன் வளமிக்க ரிகளைக் காணலாம். சுலந்து கூழைக் கடா ஆந்திராவிலுள்ள ஆரேடுவிலும். தமிழ் நாட்டில் திருநெல்வேலியிலும், வேடந்தாங் கலிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இராமநாதபுரம் அருகிலுள்ள பெரிய ஏரியில் எண்ணற்ற மீன் வளமிருப்பதால் அருகிலுள்ள காவனூரில் நீரில் நிற்கும் கருவேல மரங்களில் செம்முதுகு நாரை களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. கூழைக் கடாப் பறவை ஒரு சமயத்தில் மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடும். முட்டைகள் வெண்மை