கெ கெட்சால் வரலாற்றிலும், அன்றாட வாழ்விலும் நிலையான இடம்பெற்றுவிட்ட பறவைகளில் தென் அமெரிக் காவில் குவாடிமாளா பகுதியின் தேசியப் பறவை யான கெட்சால் (Quetzal) குறிப்பிடத்தக்கது. இந் நாட்டு நாணயமும் இப்பறவையின் பெயராலேயே இன்றும் குறப்பிடப்படுவதோடு, 1879 ஆம் ஆண்டி லேயே இப்பறவையின் உருவம் தபால் தலைகளில் இடம் பெற்றுவிட்டது. இப்பறவையைச் சூரியனின் அடையாளமாகக் கருதிவந்த அஸ்டக் டால்க். KOWIT . நாகரிகக் காலங்களில், இறகுகள் முளைக்கப் பெற்ற ஒரு பாம்பு வடிவத்தையே கெட்சால்கோடில் என்னும் கடவுளாக வழிப்பட்டு வந்துள்ளனர். கெட்சால் பறலையின் உடல் மேற்பகுதியில் உள்ள இறகுகளும், நீளமான வால் இறகுகளும் பொன் னிறம் கலந்த பச்சையாகத் தோன்றும். அலகின் அடிப்பகுதியிலிருந்து கழுத்து வரை சிலிர்த்து நிற்கும் இறகுகள் தலைப்பகுதியை அழகு செய்யும். பெண் பறவைக்கு இத்தகைய தலை அலங்காரமும் நீண்ட வால் இறகுகளும் காணப்படுவதில்லை. முற்காலத்தில் மதத்தலைவர்களும், உயர்குடிப் பிறப்பினரும் கெட்சால் பறவையின் நீண்ட வால் இறகுகளை அலங்கரித்துக்கொள்ளும் வழக்கத்தைத் தமக்கு மட்டுமே உரியதாகப் பாதுகாத்து வந்ததால், குடிமக்கள் வால் இறகுகளை வைத்திருப்பதும், பயன் படுத்துவதும் மிகக் கொடிய குற்றமாகக் சுருதப் பட்டு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. கௌரவச் சின்னமாகக் கருதப்பட்ட வால் இறகு களை ஆண்டிற்கு ஒரு முறை சேசுரித்துக்கொள்வ தற்காகவே மாண்டெசூமா என்னும் இடத்திலிருந்த ஓர் அரண்மனைத் தோட்டத்தில் இப்பறவைகள் வளர்க்கப்பட்டு வந்தமைக்கான குறிப்பு உள்ளது. மெக்சிகோவின் தென் பகுதியிலிருந்து பனாமா வரை அடர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் இ பறவை இனப்பெருக்கம் செய்யாத காலங்களில் மட்டும் சிறு கூட்டமாகக் கூடித் திரியும். தனித்துத் பாரோமேக்ரஸ் மோதினோ திரியும்போது அவ்வப்போது குரல்கொடுத்து இணைப் பறவைகளுடன் தொடர்புகொள்வதும் உண்டு. இப் பறவை இனத்தில் பெடைகளை விட ஆண்பறவை களே மிகுதி, மார்ச்- ஜூலை வரையுள்ள இனப் பெருக்கக் காலத்தில் மட்டுமே இவை ணைகளாகச் சேர்ந்து திரிகின்றன. மெக்சிகோவின் தென்பகுதியில் வாழ்பவை ஆண்டில் ஒரே முறையும், காஸ்டரிக்கா ப பகுதியில் வாழ்பவை இருமுறையும் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. முட்டையிடுவதற்காசு இப் பறவைகள் நரையிலிருந்து 4-20 அடி உயரத்தில் காணப்படும் பட்டுப்போன மரக்கிளைகளில் ஆணும் பெண்ணுமாகக் கூடி 2 அடி ஆழமுள்ள பொந்து ஒன்றைக் குடைந்து கொள்ளும். அவ்வப்போது மரங்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை