304 கெட்டியாக்கல்
304 கெட்டியாக்கல் வை கொத்திகள் பயன்படுத்திய பொந்தையும் பயன்படுத்திக் கொள்வதுண்டு. அவற்றுள் இடப் படும் இரண்டு முட்டைகள் வெளிறிய நீல நிறத்தில் 30-35 மி.மீ குறுக்களவுடையவை. இவற்றை இரவு, உச்சி வெயில் நேரங்களில் பெண்பறவையும், காலை, பிற்பகல் நேரங்களில் ஆண்பறவையுமாக மாறிமாறி 17 அல்லது 18 நாள் அடைகாக்கின்றன. அப்போது இப்பொந்திலிருந்து வால் இறகுகளை வெளியே தொங்கவிட்டுக்கொள்ள வசதியாக தனியே ஒரு துளை அமைக்கப்படுவதாகவே முற்காலத்தில் நம்பப் பட்டது. ஆனால், அடைகாக்கும் ஆண்பறவையின் நீண்ட வால் இறகுகளின் பெரும்பகுதி மரப் பொந்திற்குள்ளேயே வைத்துக் கொள்ளப்படும். முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் இற கில்லா ரோஜா நிறத்தோலுடன் காணப்படும். எட்டு நாளுக்குப் பின்னரே அவற்றின் கண்கள் திறக்கும். பிறந்து ஓரிரு நாளில் முழுக்க முழுக்கப் பூச்சி களையும், பலவகைப் பழங்கள், தவளை, பல்லி, நத்தை ஆகிய கலப்பு உணவையும், முழுவளர்ச்சி பெற்ற பின் பழங்களை மட்டும் இரையாகக் கொள் கின்றன. முட்டையிலிருந்து வெளிப்பட்ட இரண்டாம் வாரத்தில் தலைப் பகுதியைத் தவிர உடல் முழுதும் அடர்த்தியான இறகுகள் முளைத்துவிடும். ஆண் குஞ்சுகளின் இறகுகள் 3 ஆண்டுகளுக்குப் பின்னரே முழுவளர்ச்சியடையும். பெரும்பாலும் கெட்சால் பறவைக் குஞ்சுகள் பிறந்து 23-30 நாளில் கூட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும் மேலும் சில காலம் பெற்றோரின் அருகிலேயே வளரும். வால் ஸ்பெயின் நாட்டினர் 1517 ஆம் ஆண்டை ஒட்டிக் குவாடிமாளாப் பகுதிக்குள் துழைந்தபோது கெட்சால் பறவைகளும் பெருமளவில் கொல்லப் பட்டமையால் அவை அற்றுப்போயின எனக் கரு தப்பட்டது. ஆனால், 1832 ஆம் ஆண்டில் இப் பறவைகளின் வாழிடங்கள் மீண்டும் கண்டறியப் பட்டன. மயா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குக் காரண மாகக் கருதப்படும் ஸ்பெயின் நாட்டுப் படை யெடுப்பின்போது ஏறத்தாழ 30.000 மயா இன மக்கள் கொன்று குளிக்கப்பட்டனர். குற்றமற்ற இம் மக்கள் வீணே கொல்லப்பட்டதற்குச் சான்றளிக்கும் வகையில் பெரும்பான்மையான செட்சால் பறவைகள் வானுலகத்திலிருந்து புவிக்கு வந்து இறந்து கிடந்தவர் களின் உடல்களைத் தம் இறக்கைகளை விரித்து மூடிக் காத்தவாறு அமர்ந்திருந்த காரணத்தாலேயே இப்பறவைகளின் உடல் அடிப்பகுதி இன்றும் இரத்தக் கறை மாறாமல் சிவந்த நிறத்திலேயே உள்ளதாக அந்நாட்டுப் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். விலங்கியலில் ஃபாரோமாக்ரஸ் மொசினோ (Pharomachrus mocino) எனக் குறிப்பிடப்படும் கெட் சால் பறவை டிரோகோனிஃபார்மிஸ் என்னும் வரிசையைச் சார்ந்தது. இவ்வரிசையிலுள்ள டிரோ வகைகளை னங்களின் கோனிடி என்னும் ஒரே குடும்பம் 7 உள்ளடக்கியது. அவற்றைச் சேர்ந்த 34 பெரும்பகுதியும் பொதுவாகவே வெப்ப மண்டலப் பகுதிகளில், குறிப்பாகத் தென் அமெரிக்கப் பகுதியில், அடர்ந்த காடுகளுக்குள் நிலைத்து வாழ்கின்றன. இக்குடும்பத்தைச் சேர்ந்ததும், ஏறத்தாழ மைனாவின் அளவில் 16 செ.மீ. நீளமான வாலைக் கொண்டது . மேற்குத் மலையில் மாகிய தீக்காக்கை என்னும் ஓர் இனம் கர்நாடகா, தமிழ்நாடு. கேரள மாநிலங்களின் தொடர்ச்சி மலை சார்ந்த காடுகளில் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படும். எஸ்.ஏ. செல்லப்பா கெட்டியாக்கல் சிதறிய நிலையில் திண்மத் துகள்கள் உள்ளடங்கிய கரைசலைப் படிதல் (sedimentation) வாயிலாகச் செறிவூட்டும் முறைக்குக் கெட்டியாக்கல் (thickening) எனப் பெயர். பொதுவாக இம்முறையில் ஈடுபடுத்தப் படும் கலவையின் செறிவு மிகக் கூடுதலாக இருக்கும். கெட்டியாக்கிகள் ஈடு முறையிலோ தொடர் முறை யிலோ செயல்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு அளவுள்ள கலத்திலிருந்து பெரும அளவுக்குக் கெட் படி டிப்படுத்துதல் நிகழ்த்தப்படவேண்டுமாயின். தலின் விரைவு கூடுதலாக்கப்பட வேண்டும். மின் பகுளிகள் சிறு அளவில் கலக்கப்பட்டால், படிதலின் விரைவு கூடுதவாகும். கூழ்மநிலையிலுள்ள துகள்கள் வீழ்படிவாதல் இம்முறையால் விரைவாகிறது. சிறிய துகள்கள் பெரும் எண்ணிக்கையில் இணைந்து பெரிய துகள்களாக மாறி வீழ்படியும் வாய்ப்பினை, கலவை யைச் சூடுபடுத்தி அதன் வாயிலாக நீர்மத்தின் பாகுத்தன்மையைக் (viscosity) குறைத்தும் பெருக்க லாம். ஒரு கலக்கியைப் புகுத்தியும் இதே விளைவு களை உருவாக்கலாம். ஈடு முறைக் கெட்டிப்படுத்தும் கருவி கூம்பு வடி விலான அடிப்பகுதியைக் கொண்ட உருளைத் தொட்டியாகும். படிதல் தேவையான அளவு நிகழ்ந்த பின்பு, கெட்டியாக்கப்பட்ட சேற்றையொத்த நீர்மம் அடிப்பகுதி வழியாகவும் தெளிந்த நீர்மம் தொட்டி யின் மேல் பகுதி வழியாகவும் அகற்றப்படும். தொடர் இயக்கக் கெட்டியாக்கல் அமைப்பிற்கு டார் கெட்டியாக்கி எனப்பெயர். இது குறுக்களவு கூடுதலான, ஆழம் குறைந்த, சமதள அடிப்பகுதி கொண்ட தொட்டியாகும். கெட்டியாக்கப்பட வேண்டிய கலவைத் தொட்டியின் மையப் பகுதியில் (நீர்மப் பரப்புக்குச் சுமார் 1 மீ கீழே) நீர்மத்தைப் பெரிதும் கலக்கிவிடாதவாறு செலுத்தப்படுகிறது. கெட்டியாக்கப்பட்ட நீர்மம் தொட்டியின் அடிப்பகுதி யிலுள்ள வெளியேற்றுங்குழாய்களின் வாயிலாக வேறு