பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெண்டை மீன்கள்‌ 307

கெண்டை மீன்கள் 307 முறைகளைத் தோற்றுவிக்கவும் தேவை ஏற்படுகிறது. இதை நிறைவேற்றத் துணைச் சுவாச உறுப்புகள் இவற்றில் உருவாகியுள்ளன. சேற்றுக் கெண்டை, தென்னிந்தியாவில் மிகுதி யாகக் காணப்படும் சேற்றுக்கெண்டை (Etroplus suratensis) உவர் நீரிலேயே வாழும். இம்மீனின் உடல்மீது கரும்பச்சை வண்ணச் செதில்கள் உள்ளன. இவற்றின்மேல் முத்துப் போன்ற வெண்புள்ளிகள் அமைந்திருக்கும். உடலில் அடுத்தடுத்து அமைந் துள்ள செங்குத்துக் கரும் பட்டைகள் இம்மீனின் சிறப்பமைப்பாகும். 4 4 செ.மீ. நீளமுடைய இம் மீன்களின் முதுகுத் துடுப்புப் பின்பகுதியில் போன்ற வட்டப்புள்ளிகள் காணப்படும். கண் சேற்றுக் கெண்டை மீன் இழைப்பாசிகளையே பெரிதும் உண்ணும். பெருந்தாவரங்களையும், மிதவை உயிரிகளையுங்கூட உண்ணும். இம்மீன் களின் இனப்பெருக்க உச்சப் பருவம் டிசம்பர்-பிப்ரவரி மாதமாகும். ஆண்மீன்கள் பெண்களைவிடப் பெரி பவை. இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் ஆணும் பெண்ணுமாக இரட்டையாக நீரில் நீந்தி ஆழமற்ற நீர்ப்பகுதிகளில் தமக்கேற்ற இடங்களைத் தேர்ந் தெடுத்துக் கொள்கின்றன. இம்மீன் முட்டைகள் 3-5 நாள் வரை பெற்றோரால் கவனத்துடன் காக்கப் படும். பின்னர் வெளிவரும் இளவுயிரிகளையும் பேணிக் காக்கின்றன. இம்மீன்கள் சிறிய கூரிய எலும்பு களைப் பெற்றுள்ளமையாலும், சுவை மிகுந்துள்ளமை யாலும் பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. சேல்கெண்டை (Labeo fimbriatus) முன் முகப் பகுதி மழுங்கியும், ஓரளவு பெருத்தும். சிறு புழைகளைக் கொண்டும் காணப்படும். உதடுகள் தடித்துத் தொடர்ச்சியுற்றும், மேலும் கீழும் ஓர் உள் மடிப்பும் பெற்றுள்ளன. இரு தாடைகளிலும் குருத் தெலும்பு அடுக்கு உண்டு, முதுகுத் துடுப்பு முன் முனையருகிலேயே காணப்படும். மார்புத் துடுப்பு. தலையை ஒத்த நீளமுடையது. வால் துடுப்பு ஆழ்ந்த பிளவுடையது. வெண்கெண்டை வெண்கெண்டை உடலின் இரு பக்கங் களும், வயிற்றுப் பரப்பும் வெண்மையாக உள்ளன. சேல் கெண்டை அ.க.9-20 அ மோரான் கெண்டை