பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 கெப்ளர்‌ விதிகள்‌ (இயற்பியல்‌)

308 கெப்ளர் விதிகள் (இயற்பியல்) துடுப்புகள் கருநிறத்தவை. இம்மீன் 47 செ.மீ. வளரக் கூடியது. இம்மீன்கள் உணவாகப் பயன்பட்டாலும் எலும்பு மிகுந்து காணப்படுகின்றன. வெண்கெண்டை மீன்கள் (Cirinha cirrhosa) தென்னிந்தியாவில் காவிரியாற்றில் பெரும்பான்மை யாகக் காணப்படுகின்றன. இம்மீனுக்குச் சிறிய தலையும்,மழுங்கிய முன் முகமும், மெல்லிய உதடு களும் உண்டு. நெளிவு மிகுந்த முதுகுத் துடுப்பு 14-15 ஆரைகளைப் பெற்றிருக்கும். வெள்ளிநிற உடலும், செந்நிறச் செதில்களும் காணப்படுகின் றன. இச்செம்மை வயிற்றுப் பரப்பில் இல்லை. துடுப்புகள் சாம்பல் நிறத்தவை. நீருக்கடியில் மண்ணோடு கலந்துள்ள உணவுப் பொருள்களையே உண்ணுகின்றன. இம்மீன்கள் 12 செ.மீ. வரை வளரும். மோரான் கெண்டை மீனின் (Megalops cypri- noides) உடல் பெரும் செதில்களால் மூடப்பட்டிருக் கும். கீழ்த்தாடை சற்றுப் பெரியது. கண்கள் பெரிய வாகவும், தெளிவாகவும் காணப்படும். முதுகுத் துடுப் பின் இறுதி ஆரை நீண்டுள்ளது. வால் துடுப்பில் ஆழ்ந்த பிளவு உண்டு. மோரான் கெண்டையின் முதுகுப்பகுதி நீலமும் பச்சையும் கலந்த வண்ண முடையது. இம்மீனுக்கு இறால், சிறுமீன் முதலியன உணவாகின்றன. ஏறக்குறைய 60 செ.மீ. வளரும் இம்மீன் சிறந்த உணவாகும். முகத்திலும், கண்களுக்கருகிலும் ஒரு கூழ் போன்ற பொருள் உண்டு. சற்று வளைந்த முதுகும், ஒற்றை முதுகுத் துடுப்பும் உள்ளன. வால் துடுப்புப் பெரிதா கவும், ஆழ்பிளவுபட்டும் காணப்படும். சேற்றுக் கெண்டை பால்கெண்டை மிதவை உயிரிகளையும் கடல் பாசிகளையுமே உட்கொள்ளும். இளவுயிரிகள் ஆறு, கழிமுகம் இவற்றை அடைகின்றன. வளர்ந்த மீன்கள் கடலில் வாழ்கின்றன. இம்மீன்கள் வேகமாக நீந்தும் இயல்புடையவை. 1.5 மீ.வளரும் இவை நீரினின்று மேலெழுந்து துள்ளும் பழக்கம் கொண்டுள்ளமையால் நீர்ப்பரப்பின்மேல் திரைகளைப் போன்ற வலை விரித்து இவற்றைப் பிடிக்கின்றனர். இதுவும் ஒரு சிறந்த உணவு மீனாகும். அர. காலதியாகரா சன் துள்ளுகெண்டை பால்கெண்டை என்றும் குறிப்பிடப்படும் துள்ளுகெண்டையின் (Chanos chanos) உடல் சிறிய வழவழப்பான செதில்களால் மூடப்பட்டி ருக்கும். சிறிய வாய் பற்களற்றுக் காணப்படும். முன் கெப்ளர் விதிகள் (இயற்பியல்) இவை கோள்களின் இயக்கத்தைக் குறித்து ஜோகன்ஸ் கெப்ளர் எனும் ஜெர்மானிய வானியலார் நெறிப் படுத்தித் தந்த விதிகளாகும். சூரியக் குடும்பத்தைப் பற்றி அறியும் முயற்சிகள் நெடுங்காலமாக நடை பெற்று வந்துள்ளன. தாலமி கி.மு.100 ஆம் ஆண்டில் வெளியிட்ட கொள்கை புவி மையக கொள்கை எனப்படும். இதன் மூலம் பேரண்டத்தின் மையம் யுவியாகும். இயக்கமின்றி நிலையாக இருக்கும் புவியை மையயாகக் கொண்டு சூரியன் முதலான உடுக்களும் செவ்வாய், புதன் முதலிய கோள்களும் சிக்கலான பாதைகளில் வலம் வரு கின்றன.