கெப்ளர் விதிகள் (இயற்பியல்) 309
அக்காலக் கிரேக்க க அறிஞர் அரிஸ்டார்கஸ் என்பார் சூரியனை மையமாகக் கொண்டு புவி முதலான கோள்கள் வலம் வருகின்றன என்ற சூரிய மையக் கொள்கையை வெளியிட்டார். ஆயினும் க்கொள்கை பல காலம் ஏற்கப்படாமலே இருந்தது. டாலமியின் கொள்கை கி. பி. 1546 ஆம் ஆண்டில் போலந்து நாட்டைச் சார்ந்த நிகோலஸ் கோபர்நிக்கஸ் என்பாரால் மறுத்துரைக்கப்பட்டது. இவரின் சூரிய மையக் கொள்கை வல்லுநர்களால் ஆராயப்பட்டது. இம்முயற்சிகளுள் குறிப்பிடத்தக்கது டென்மார்க் நாட்டைச் சார்ந்த டைகோ பிரஹே என்பாருடையதாகும். இவரின் ஆய்வு விவரங்கள் அனைத்தையும் இவர் மாணவர் கெப்ளர் பயன் படுத்திக் கோள் இயக்கம் பற்றி மூன்று விதிகளை வகுத்துத் தந்தார். இம்மூன்றும் கோள்கள் இயக்கம் பற்றிய கெப்ளர் விதிகள் எனப்பெறும். முதல் விதி (நீள்வட்டப்பாதை விதி). கோள்கள் யாவும் நீள்வட்டப்பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இம்முதல் விதியைப் படம் 1 இல் காணலாம். நீள்வட்டத்தின் இரு குளியங்களுள் (F., F.) ஒன்றில் சூரியன் இருக்க, கோள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதிலிருந்து ஒரு கோளுக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு மாறிக்கொண்டேயிருக்கும் என்பதும் அதற்கு ஒரு சிறும மதிப்பும் பெரும மதிப்பும் உள்ளன என்பதும் தெரிகிறது. கோள் சூரியனுக்கு மிக கெப்ளர் விதிகள் (இயற்பியல்) 309 நெருங்கி இருக்கக்கூடிய இருக்கக்கூடிய நிலையான A என்பது அண்மை நிலை (perigee) எனவும் மிகத் தொலைவில் இருக்கக்கூடிய B என்பது சேய்மை நிலை (apogee) எனவும் குறிப்பிடப்படும். A சூரியன் படம் 1 கோள் B இரண்டாம் விதி (பரப்பு விதி). சூரியனையும் கோளையும் இணைக்கும் கோடு சமகால டைவெளி களில் சம பரப்புகளைக் கடந்துசெல்லும். இவ்விதியின் கூற்றைப் படம் 2 இல் காணலாம். படத்தில் S என்பது சூரியனைக் குறிக்கும். கோள் a எனும் நிலையிலிருந்து h க்குச் செல்வதற்கு ஆகும் நேரமும் cஇலிருந்து dக்குச் செல்ல ஆகும் நேரமும் சமமெனக் கோள் அட்டவனை 1 சுற்று நேரம் ஆண்டுகள் சராசரி சூரியத் தொலைவு மில்லியன் கி.மீ T +3 புதன் 0. 241 57.91 2. 991 வெள்ளி 0.615 104.21 2. 985 புவி 1.000 149. 60 2. 987 செவ்வாய் 1. 881 227.94 2. 988 வியாழன் 11. 862 778. 30 2. 985 சனி 29. 158 1427.00 2. 986 யுரேனஸ் 84. 015 2869.00 நெப்ட்டியூன் 164. 788 4498.00 2.990 2. 984 புளூட்டோ 248, 400 5900. 00 3. 004