பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவாண்டம்‌ 13

பிளீஸ்டோசின் காலம். பிளீஸ்டோசின் காலம் ஏறத் தாழ இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தது. என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் ஆண்டு களுக்கு இக்கால வரையறை நீடித்தது. இக்கால வரை யறையுள் நான்கு அல்லது ஐந்துமுறை உறைபனிப்பட லங்கள் ஏற்பட்டன எனக் கருதப்படுகிறது. வெப்பம் மிகவும் குறைவதால் துருவங்களிலிருந்து நிலநடுக் கோட்டை நோக்கிப் பனிப்படலம் படர்வதும், மீண்டும் வெப்பம் மிகும்போது பனிப்படலம் உருகித் துருவங் களை நோக்கிக் குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்துள் ளன என்பதற்குப் புதை படிவச் சான்றுகள் உள்ளன. இவ்வாறு பனிபடர்ந்த பருவம் ஒவ்வொன்றும் உறை பனிக்காலம் அல்லது பனிபடர்காலம் எனப்படும். அவற் றிற்கு இடைப்பட்ட பருவங்கள் உறைபனி வெளிக் காலங்கள் ஆகும். இந்த இடைவெளிக்காலங் களில் மித வெப்பம் அல்லது மிகுவெப்பம் இருந்திருக் கலாம் எனக் கருதப்படுகிறது. எரிமலை வெடிப்புகள் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும். பிளீஸ்டோசின் தொடக்க முதலே பல எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவ்வாறு உறை பனிக்காலங்களும், உறை பனி இடைவெளிக்காலங்களும் மாறி மாறி ஏற்பட்ட மையால், தாவரங்களும் விலங்குகளும் சூழ்நிலை மாறு தல்களுக்கு இலக்காயின என்றும் அறியப்பட்டுள்ளது. ம். டை உறைபனிக்காலம் தொடங்கியபோது யூரேசியா விலிருந்து பெரும்பான்மையான விலங்குகள் தெற்கு நோக்கிச் சென்றிருக்கக் கூடும் என்றும் அவற்றில் நீர்யானை, காண்டாமிருகம், கழுதைப்புலி போன்றவை அடுத்த உறைபனி இடைவெளிக்காலங் களில் மீண்டும் அப்பகுதிக்கே திரும்பியிருக்கக்கூடும் என்றும், மற்றவை திரும்பிவாராமல் தெற்கு ஆசியா மற்றும் தென் ஆஃப்ரிக்காவிலேயே தங்கியிருக்கக்கூடு மென்றும் கருதப்படுகிறது. அவ்வாறு தங்கியவற்றில், பெரிய வாலில்லாக் குரங்குகள், லெமூர், ஆண்டி லோப், செர்கோபித்தீகஸ், குரங்கு போன்றவை இன்றும் அங்கு உயிர் வாழ்கின்றன. பிளீஸ்டோசின் இறுதியில் மீண்டும் வெப்பநிலை மிகக் குறைந்ததால், இமயமலை, வட ஐரோப்பா, வடஅமெரிக்கா. ஆல்ப்ஸ் மலை, அண்டார்க்டிகா ஆகியவற்றில் பனி படர்ந்து உறைந்தது எனக் கருதப்படுகிறது. பிளீஸ்டோசின் விலங்கினம். பிளீஸ்டோசின் காலத்தில் இன்று வாழும் விலங்கினம் அனைத்தும் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப் பாக, பாலூட்டிகளின் படிமலர்ச்சி காரணமாக, அனைத்துப் பாலூட்டி வகைகளும் காணப்பட்டன. இவை குளிர்பகுதி வாழ்க்கைக்கேற்ற பல தகவமைப்பு களைப் பெற்றிருந்தன. மிகத் தடித்த உடல் தோல், அடர்த்தியான மயிர் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பிளீஸ்டோசின் காலத்தில் யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் வாழ்ந்த பாலூட்டிகளான மிகப்பெரிய மான்கள்,யானைகள், பீவர்கள், தென் அமெரிக்காவின் கொறித்து உண்ணும் பாலூட்டிகள், ஆஸ்திரேலியா வின் கங்காருகள், மடகாஸ்கரின் லெமூர்கள் ஆகியவை குவாண்டம் 13 குறிப்பிடத்தக்கவை. காண்டாமிருகம், எலாஸ்மோ தீரியம் போன்ற பாலூட்டிகள் மிகக் குளிர்ந்த சூழ் நிலையில் வாழ்ந்திருந்தன எனினும் பெரும்பான்மை யானவை மிதவெப்ப அல்லது மிகு வெப்பநிலையை விரும்பி வாழ்ந்தன எனக் கருதப்படுகிறது. பிளீஸ்டோசின் காலத்தில்தான் சில பாலூட்டி வகைகளின் அழிவும் சிலவற்றின் தோற்றமும் நிகழ்ந் துள்ளன. பிளீஸ்டோசின் காலத்தில் வாழ்ந்த குதிரைகளின் அழிவு, காண்டாமிருகம், நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி ஆகியவற்றின் எண்ணிக்கைக் குறைவு குறிப்பிடத்தக்கவை. இன்று காணப்படும் குதிரை னம், யானை இனம், மனித இனம் தோன்றியமை மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். மனித இனத்தின் பிறப்பிடம் யூரேசிய - ஆஃப்ரிக்கப் பகுதி களில்தான் என்பதற்கும், மனித இனத்தின் நட மாட் டம் பிளீஸ்டோசின் காலத்தில் இப்பகுதிகளில் மட் டுமே இருந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. தற்காலம். மனித இன நாகரிக வளர்ச்சி ஏற் பட்டது. குவாடர்னரியின் இரண்டாம் காலவரை யறையேயாகும். பிளீஸ்டோசின் காலத்தின் முடி விலோ. தற்காலத் தொடக்கத்திலோ பல்வேறு பாலூட்டி வகைகள் அழிந்தன என்று அறியப்பட் டுள்ளது. முட்டையிடும் மிகப்பெரிய பாலூட்டிகள். மெட்டாதீரியா எனப்படும் கங்காருபோன்ற பாலூட்டி கள், தென் அமெரிக்காவின் குளம்புடைய பாலூட்டி கள், நில வாழ் சோம்பன்கள், பல்வேறு இனக் குரங்குகள், வாலில்லாக் குரங்குகள், சில குதிரை யானை னங்கள், வட அமெரிக்க டபீர்கள். ஒட்ட கங்கள், யூரேசியாவின் காண்டாமிருகம், நீர்யானை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவற் றின் அழிவு உறைபனியாலோ நோய்களாலோ ஏற் பட்டது அன்று என்றும் மனித இனத்தின் பரவுதலும் விலங்குகளை அழிக்கும் மனித முயற்சியுமே காரணம் என்றும் கருதப்படுகிறது. மனித இனம் முதன் முதலில் ஆஸ்திரேலியாவை எப்போது அடைந்தது என்பது புலப்படவில்லை. எனினும் பிளீஸ்டோசின் காலத்திற்குப் பிறகுதான் அமெரிக்காவை அடைந் திருக்கக் கூடும் என்பது புலனாகிறது. குவாண்டம் - எம்.சுப்ரமணியம் அலை அல்லது புலம் ஒன்றில் ஏற்படும் கிளர்ச்சி களைக் குவாண்டம் (quantum) என்னும் சொல் விவரிக்கும். புலத்தில் ஏற்படும் கிளர்ச்சி அல்லது மின்காந்த அலைகள், ஒலி அலைகள் என்பன அலைப் பண்புடையனவாம். ஆனால் இவற்றைத் துகள்களாகக் கருத வேண்டிய சூழல்களும் உள்ளன என்பதை அறிவியலார் உணர்ந்தனர். காட்டாக கரும்பொருள் கதிர்வீச்சின் ஆற்றல் பகிர்வை ஆய்ந்த போது கதிர்வீச்சாற்றலைத் தொடர்ச்சியாகப் பாயும் அலைகளாகக் கருதிப் பெறப்பட்ட முடிவுகள் நடைமுறை ஆய்வு முடிவுகளோடு ஒத்திருக்கவில்லை.