பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெய்கர்‌ முல்லர்‌ எண்ணி 315

வளிமம், type), குழல் வகை (tube type) என இருவகை உண்டு. அவை மின்முனைகளின் அமைப்பில் மட்டுமே வேறுபட்டுள்ளன. முள் வகை எண்ணியில் நேர் மின்வாய் (படம் 1) ஒரு நீண்ட ஊசியாக இருக்கும் அல்லது முனையில் சிறு கோளம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பியாக இருக்கும். அதில் வளி அழுத்தத்தில் நிரப்பப்படும், மின்முனைகளுக்கு இடையில் வலிமையான மின்புலம் நிறுவப்படுகிறது. எதிர்மின்வாயில் சேரும் மின்னூட்டம் ஒரு பெரிய கசிவு மின்தடை வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் மின்னிறக்கம் நின்று கருவி அடுத்து வரும் துகளை ஏற்க ஆயத்தமாகிவிடும் கெய்கர் முல்லர் எண்ணி 315 தகடு பொருத்தப்பட்டு அதன் ஊடாகப் பீட்டாக் கதிர்கள் நுழையுமாறு செய்யப்படும். புரோட் டான்கள் ஆல்ஃபாத் துகள்கள் போன்ற நிலை மிக்க துகள்களைத் துலக்குகிற கருவியில் குழலின் சுவர்கள் மெல்லிய தகடுகளாலானவை. அவற்றில் வளி அழுத் தத்தில் வளிமம் நிரப்பப்படும். நியூட்ரான்களைத் துலக்கும் குழல் வகை எண்ணியில் ஹைட்ரஜன் வளிமம் நிரப்பப்பட்டிருக்கும். நியூட்ரான்களின் மோதலால் துரத்தப்படும் புரோட்டான்கள் மின்னி றக்கத்தை உண்டாக்கும். குழலை வெள்ளியால் அமைத்தால் நியூட்ரான்கள் வெள்ளியில் கதிரியக் கத்தைத் தூண்டி அதிலிருந்து எலெக்ட்ரான்களை வெளிப்படுத்தும் குழல் வகை எண்ணி முள் வகை எண்ணியைவிடக் குறைந்த நேரத்தில் மின்னிறக் கத்தை நிறுத்தி விடும். அதில் மின்முனைகளுக்கு இடையிலுள்ள பகுதி முழுதும் அயனியாக்கம் நடை பெறும். இதன் உணர்வு நுட்பம் அதிகமாயிருப்பதால் அதிக நெடுக்கமுள்ள மின்னழுத்தம் கிடைக்கிறது. அது எளிதாக மின்னிறக்கத்தால் குலைவதில்லை. துடிப்புகளின் எண்ணிக்கை 16 14 12 10 8 6 படம் 2. குழல் வகை எண்ணி அதன் குழல் வகை எண்ணியில் (படம் 2) பித்தளை அல்வது நிக்கலால் ஆன வெளி உருளையும் அச்சில் ஒரு மெல்லிய டங்ஸ்டன் கம்பியும் இருக்கும். குழலுக்குள் காற்று அல்லது ஹைட்ரஜன் அல்லது ஆர்கான் அல்லது ஒரு வளிமக் கலவை குறைந்த அழுத்தத்தில் நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக மின்முனைகளுக்கு இடையே நிறுவ வேண்டிய மின் னழுத்த வேறுபாடு குறைவதுடன் மின்னிறக்கமும் விரைவாக நிறுத்தப்படும். இரண்டு மின்முனைகளுக்கும் இடையில் ஒரு வலிமிக்க மின்புலம் நிறுவப்படுகிறது. காமாக் கதிர்களைத் துலக்கப் பயன்படுகிற குழல் வகை எண்ணிகளில் குழல் 1-3 மி, மீ. வரை தடிமனுள்ள உலோகத்தால் ஆனதாக இருக்கும். குழலின் சுவர்களிலிருந்து விடுவிக்கப்படுகிற இரண் டாம் நிலை எலெக்ட்ரான்கள் மின்னிறக்கத்தை உண்டாக்குகின்றன. பீட்டாக் கதிர்களைத் துலக்கும் கெய்கர் எண்ணியில் ஒரு மெல்லிய அலுமினியத் 0 810 870 930 990 1050 1110 மின்னழுத்தம் படம் 3 முதலில் ஒரு படித்தரமான தோற்றுவாயைப் பயன்படுத்தி வெல்வேறு மின்னழுத்த வேறுபாடுகளில் பதிவாகும் துடிப்புகளின் எண்ணிக்கை கண்டுபிடிக்கப் படும். மின்னழுத்த வேறுபாட்டிற்கும், துடிப்புகளின் எண்ணிக்கைக்கும் இடை யில் ஒரு வரைபடம்(படம் 3) வரைந்தால், குறிப்பிட்ட சிறும மின்னழுத்த வேறு பாட்டிலேயே துடிப்புகள் பதிவாவது தெரியும். அது செயல் தொடக்க மின்னழுத்தம் (threshold voltage) எனப்படும். பிறகு துடிப்புகளின் எண்ணிக்கை