பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெராட்ரிஃபார்மிஸ்‌ 319

இடை சங்கிலித் தொடர்போல் இணைந்து காணப்படும். இச்சங்கிலித் தொடர், குற்றர்சின் (b-axis) பாக்கம் நீட்சியடைந்து காணப்படும். இச்சங்கிலிகள் யிடையே சோடியம் Na+ அணுவாலும், நீர்மம் மற்றும் ஆக்ஸிஜன் அணுப்பிணைப்பாலும் பிணைந்து காணப்படுகின்றன. கெராட்ரிஃபார்மிஸ் 319 அர்ஜென்ட்டினாவில் சால்ட்டா பகுதிகளில் போராக்ஸ் படிவுகளுக்குக் கீழ் இவை கிடைக் கின்றன. உலகில் உயர்வகைப் போரேட்கள் உ ற் பத்தியாகும் நாடுகளில் வடஅமெரிக்கா, அர்ஜென்ட் டினா, துருக்கி முதலியவை முதலிடம் பெறுகின்றன. இது போரேட்டின் மிக முக்கிய தாதுவாகும். சு.சந்திரசேகர் நூலோதி. A.N. Winchell, H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Ltd., New Delhi, 1967. MIT GOT கொனைட் கனிமத் தோற்றம் ஊதுகுழல் ஆய்வு முறையில் உருகித் தூய்மை கண்ணாடி போன்று திரட்சியடைந்த உருண்டைகளைக் கொடுக்கும். இதன் கடினத் தன்மை 3; அடர்த்தி 1.953 ஆகும். ஒளி ஊடுருவக் கூடியது; முத்து மற்றும் பளிங்கு மிளிர்வு கொண்டு காணப்படும். குளிர்ந்த நீரில் மெதுவாகக் கரையும் தன்மையுடையது. ஒளியியல் பண்புகள். இக்கனிமம் ஈரச்சு எதிரொளி (--} சுழற்றும் தன்மை உடையது. இதன் ஒளியியல் அச்சுத் தளம் குறுயிணை வடிவப் பக்கத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இக்கனிமத்தின் ஒளிவிலகல் எண் விரை வொளி அச்சுக்கு (ஏ) 1.488 ஆகவும், மெது ஒளி அச்சுக்கு ( a ) 1.454 ஆகவும், டை ஒளி அச்சுக்கு (9) 1.472 ஆகவும் உள்ளது. இதன் ஒளி அச்சுக் கோணம் (2v) 80 ஆகும். பரவல். இது சுவிஃபோர்னியாவில் காணப்படும் மோஜவ் பாலைவனத்தில் கெர்மர் போரேட் மாவட்டத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. போராக்ஸ் என்ற கனிமத்திற்கு அடுத்து இரண்டாம் போராக்ஸ் உட்கூறு கொண்டது. பிற வகைப் போரேட் கனிமமான யுலெக்சைட், கொலிமனைட் முதலிய கனிமங்களுடன் டெர்ஷியரி காலப் பாறை களுடன் கலந்து காணப்படுகிறது. போராக்ஸ் கனி மங்கள் அதிக வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் உருகி மீண்டும் படிகமாகிக் கெர்னைட் படிவுகளாக மாறுகின்றன. கெராட்ரிஃபார்மிஸ் . நிலநடுக்கோட்டுப் பகுதி முதல் ஆர்ட்டிக் சமவெளி வரை நீர் தேங்கிய குளங்கள், குட்டைகள், ஆறுகள் மணற்பாங்கான பகுதிகள் வை கெராட்ரிஃபார்மிஸ் வரிசைப் பறவைகளின் வாழிடங்களாகும். இவ் வரிசையில் தாமரைக்கோழி, உள்ளான்.மூக்கான். கடற்காக்கை, ஆலா ஆகிய இனங்கள் அடங்கும். இவ்வரிசையில் 260 சிற்றினப்பறவைகள் உள்ளன. இவ்வரிசையிலுள்ள பறவைகளில் மிகச்சிறிய, பெரிய அளவான பல பறவைகள் உள்ளன. பறவைகளுக்குச் நம் கால்களும் நீளமாக உள்ளன. றதகளும் மேலும் சிறகுகளில் I I இறகு எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. ஃபர் குல எலும்புVவடிவமாக உள்ளது. கடலோரங்களிலும், ஆற்றுக் கழிமுகங்களிலும் உள் நாட்டுக் குளங்குட்டைகளிலும், நீரோடைகளிலும் பரவலாகக் காணப்படும். அலகுகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. சிறப்பாகப் பறக்கும் திறன் உடைய இப்பறவைகள் பெரும்பாலும் வலசை போகும் (migration) பழக்கம் உடையவை. சில பறவைகள் 25,000-35,000 கி.மீ வரை வலசை போகும் திறன் உடையவை என அறியப்பட்டுள்ளது. இவ்வரிசைப் பறவைகள் பெரும்பாலும் தரையி லேயே முட்டையிட்டாலும் சில, மரங்களில் கூடு கட்டியும் முட்டையிடுகின்றன. முட்டைகள் அளவில் பெரியனவாகலே உள்ளன. கூடுகள் நான்கு இலை களைச் சேர்த்துத் தைத்தாற் போன்று அமைக்கப் பட்டுள்ளமையால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அடைகாத்தலை ஆண், பெண் இரண்டுமே பகிர்ந்து கொள்கின்றன. சிறு புழுக்கள், பூச்சிகள் இவற்றின் இள உயிரிகள், நத்தைகள், சில சமயங்களில் சிறு அளவான தானியங்கள் ஆகிய வற்றை உணவாக உட்கொள்கின்றன. இவை குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை கானிடே ஹைமாட்டாபோடிடே, கெராட்டிடே, கெராடிரிடினே. ஸ்கோலோபிளராபைனே, ரோஸ், டிரானுடே, ரெக்கர்விரோஸ்டிடே, கிளரியேலிடே லாரிடே, டிராமானிடே, புருஷினிடே ஆகும். 12 சக்