320 கெராட்ரிஃபார்மிஸ்
320 கெராட்ரிஃபார்மிஸ் தாமரைக்கோழி கௌதாரியின் அளவு இருக்கும். வாலின்றி 31 செ.மீ. நீளம், அலகு ஈயநிறம், முனை பழுப்பு, கால்கள் பசுமை, விழிப்படலம் ஆழ்ந்த நிலங்கலந்த பசுமை. இனப்பெருக்க காலத்தில் முகமும் முன் கழுத்தும் வெள்ளை நிறம், பின்கழுத்து, பொன் நிறமான மஞ்சள், உடலின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் கருந்தவிட்டு நிறம், அரிவாள் போன்ற வளைவு ஆகியவை இவற்றின் பண்பும் அமைப்பும் ஆகும். கால் விரல்கள் நீண்டவை. ஆணைவிடப் பெண் உருவில் சற்றுப் பெரியது. இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் நீண்ட வால் இருக்காது. இந்தியா முழுதும் சுமார் 1000 மீ. உயரமுள்ள மலைப் பகுதிகளில் இவற்றைக் காணலாம். மிக நீண்டு வளர்ந்துள்ள கால்விரல்களின் உதவியால் குளங் களிலும் ஏரிகளிலும் வளர்ந்துள்ள தாமரை, அல்லி ஆகியவற்றின் மிதக்கும் இலைகள் மீது நடந்து சென்று இரைதேடிக் கொண்டிருக்கும். நீர்த் தாவரங் களின் விதைகள், வேர்கள், நீரில் வாழும் புழு, பூச்சி கள் வற்றின் உணவாகும். ஜூன்-செப்டம்பர் வரை மழை பெய்யத் தொடங்கிய இனப்பெருக்க காலத்தில் பச்சை முட்டைகளை கலந்த பழுப்பான நான்கு இடுகின்றன. ஆணே அடைகாக்கும். அடை காக்கும் காலம் 28 நாள். பெண் முட்டையிட்டவுடன் அடை காத்துக் குஞ்சுகளைப் பேணும் பொறுப்பை ஆணிடம் விட்டுவிட்டு வேறு ஆண் பறவையின் துணை நாடிச் செல்லும் இயல்புடையது எனக் கூறப்படுகிறது. உப்புக்கொத்திகள். உள்ளான்கள். தங்கள் பிறப் பிடமாகிய வடமண்டலப் பகுதிகளில் குளிர்காலம் தொடங்குவதால் உப்புக்கொத்திகள், உள்ளான்கள் ஆகியவை வெப்ப மண்டலப் பகுதிகளை நோக்கி வலசை செல்கின்றன. குளிர்காலத்தில் வலசைவரும் இப்பறவைகளில் சில இமயமலைப் பகுதியிலிருந்தும், திபேத் பீட பூமியிலிருந்தும், பாமீர் மலைப்பகுதி யிலிருந்தும் வருபவை. சில மத்திய ஆசியாவிலிருந்து வருகின்றன. இவை அளவில் காடை, கௌதாரியை விடச் சிறியனவே. சேற்றிலும், மணலிலும் புதைந்து ரைதேட ஏற்ற வகையில் இவற்றின் அலகு சிறுத்து நீண்டு கூர்மையாக அமைந்திருக்கும். தமிழ் நாட்டில் குளிர்காலத்தில் கோடிக்கரையில் இக்குடும் பத்தைச்சேர்ந்த பெரும்பாலான பறவைகளைக் காண லாம். தென்னிந்தியாவில் வேறு எங்கும் காண முடி யாத உள்ளினங்கள் சிலவற்றையும் பெரிய குதிரைமலை மூக்கான். காணலாம். இது பெரிய, வீட்டுக் கோழி அளவு இருக்கும். சுமார் 58 செ.மீ. நீளமுடையது. அலகுகள் பழுப்பு நிறம்: கால்கள் நீலங்கலந்த சாம்பல் நிறம்; இதன் அலகு நீண்டு கீழ் நோக்கி வளைந்திருக்கும். உடலின் மேற்பகுதி மணல் பழுப்பான நிறத்தில் ஒரே சீரான செம்மஞ்சள் கோடுகளோடு விளங்கும். மார்பும் வயிறும் வெண்மை, கறுப்புக்கோடுகளோடு போது வெண்மையான இருக்கும். பறக்கும் பின் முதுகும் பிட்டமும் தெளிவாகத் தெரியும். இவற்றை இந்தியா முழுதும் காணலாம். குறிப்பாகக் கடற்கரைப் படுகைகளிலும். உப்பங்கழிகளிலும் காணலாம். செப்டம்பரில் மத்திய ஆசியாவிலிருந்து வலசை வரத் தொடங்கி ஏப்ரலில் திரும்புகின்றன. மெட்டோபிடியஸ் இண்டிகஸ் ரோஸ்ட்ராடுலா பெங்காலென்சிஸ் நியூமெனியஸ் ஆர்குவேட்டா