பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெரோட்டின்கள்‌ 321

கால் கள்கிலேடி. கௌதாரியைவிட அளவில் பெரியது. சுமார் 41 செ.மீ. நீளம் இருக்கும். அலகும் களும் மஞ்சள் நிறம்; நீண்ட மூட்டுகள் சற்றுப் பருத் திருக்கும். கண்கள் பெரியவாக உருண்டு காணப்படும். உடலின் மேற்பகுதி கருங்கோடுகளோடு கூடிய மணல் பழுப்பாக இருக்கும். இந்தியா முழுதும் ஆங்காங்கு சமவெளிகளிலும், மலைகளில் 1000 மீட்டர் உயரக் வரையும் காணலாம். பெரும்பாலும் காலை, மாலை, அந்திகளிலும் வெளிப்பட்டு இரை தேடும். இணை யாகவோ 5 6 வரை சிறு கூட்டமாகவோ திரியும். குளிர் காலத்தில் 50 வரை கூட்டமாகக் காண லாம். புழு பூச்சிகள், ஊர்வன, விதைகள் முதலியன இவற்றின் உணவு. இனப்பெருக்கக் காலம் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை, கற்கள் நிறைந்த குழிப் புதர் களின் ஓரத்திலோ மண்மேட்டின் ஓரத்திலோ இரண்டு முட்டைகளை இடும். இவை வெளிர் மஞ்சள் நிறத் தில் சிவப்புக் கறையோடு காணப்படும். கடற்காக்கைகள், ஆலாக்கள். கடற்காக்கை சுமார் 50 செ.மீ நீளமிருக்கும். அலகு மஞ்சள் நிறம்: கால்கள் ஆரஞ்சு மஞ்சள் நிறம்; தலை, கழுத்து, உடலின் கீழ்ப்பகுதி ஆகியன வெண்மையாக இருக்கும். 1 உண வற்றை இந்தியா முழுதும் காணலாம். குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் எப்பொழுதும் வை கூட்ட மாகவே காணப்படும். நீரில் மிதக்கும் கழிவு வுப்பண்டம் இவற்றைப் பறந்து பாய்ந்து கல்வியோ, நீரில் அமர்ந்தோ தின்னக் காணலாம். இனப்பெருக் கம் இந்தியாவிற்கு வெளியே நடைபெறும். ஆலா, புறாவைவிட அளவில் சற்றுச் சிறியது. சுமார் 35 செ.மீ. நீளமிருக்கும். அலகு நல்ல சிவப்பு நிறம். கால்கள் வெளிர் சிவப்புநிறம். குனிர்காலத்தில் அலகு கறுப்பாக மாறும். சற்றே பிளவுபட்ட வாலும் வாலைவிட நீண்டு செல்லும் இறகுகளும் காணப் படும். உடலின் மேற்பகுதி வெளிர் சாம்பல் நிறம்; கீழ்ப்பகுதி வெண்மை நிறம். கோடையில் தலை முழுதும் கறுப்புத்தொப்பி அணிந்தது போலக் கறுப் பாகக் காட்சிதரும். வயிறு கறுப்பு நிறமாக மாறும். குளிர் காலத்தில் மிகுந்த எண்ணிக்கையில் இந்தியா முழுதும் காணலாம். உள்நாட்டு ஏரி, நீர் நிறைந்த வயல், கடற்கரைப்படுகை, ஆற்றுக் கழிமுகம் ஆகிய வற்றின் மீது பறந்து திரியக் காணலாம். மீன், நண்டு. தவளை தட்டாம் பூச்சி, வெட்டுக்கிளி முதலியன உணவாகும். கெரோட்டின்கள் இரத்தினசபாபதி வை பயிரினங்களிலும் விலங்கினங்களிலும் பரவ வாக மிகுந்துள்ள மஞ்சள் அல்லது சிவப்பு நிறமிகள். லைகளின் பசுமைக்குக் காரணமான பச்சையத் அ. க. 9 21 SP யூரிக் கெரோட்டின்கள் 321 துடன் எப்போதும் சேர்ந்திருப்பவை கெரோட் டின்கள் (carotenes) ஆகும். பச்சையம் இடம் பெறாத பூசணங்களின் வண்ணத்திற்குக் கெரோட்டின் மட்டுமே காரணமாகிறது. இவை கொழுப்பு எண்ணெய்களில் கரையக்கூடியவை. அடர் செல்ஃப் அமிலத்துடனும், குளோரோஃபார்மில் கரைந்த ஆன்ட்டிமனி டிரைகுளோரைடுடனும் இவை ஆழ்ந்த நீலநிறத்தைத் தருகின்றன. கார்ல்-பிரைஸ் வினையைப் பயன்படுத்தி, கெரோட்டின்களை அளவறி பகுப்பாய்வு செய்யலாம். கெரோட்டின்கள் ஹைட் ரோகார்பன்களாகும். அவற்றின் மூலக்கூறு வாய்பாடு பெரும்பாலும் C H.8 ஆகும். இவற்றுக்கு டெட்ரா டெர்ப்பீன்கள் என்றும் பாலியீன்கள் என்றும் பொதுப் பெயரிடலாம். இவற்றின் ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்புகள் ஒரு நீள் சங்கிலியாக உருப்பெறு கின்றன. எக்ஸ்கதிர்ப் பகுப்பாய்விலிருந்து கெரோட் டின்களின் இரட்டைப் பிணைப்புகள் யாவும் ஒன்றுக் கொன்று மாறுதிசையில் அமைந்துள்ளன. 40 முதன்முதலாகக் கெரோட்டின்கள் காரட் கிழங்கி லிருந்து 1831 இல் வாக்கன்ரோடர் என்பாரால் பிரித்தெடுக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட இவ்வாறு வினைப் பொருளைச் சிறிதளவு அயோடினுடன் படுத்திக் கெரோட்டின் டைஅயோடைடு எனும் படிக நிலைப் பொருளைத் தயாரித்தனர். இதனைப் பின்னர் படிகமாக்கல் முறையால் இரு கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே சோடியம் தயோசல்ஃபேட்டுடன் வினைப்படுத்தினால், மீண்டும் ஒத்த கெரோட்டின்கள் பெறப்படுகின்றன. நிறச் சாரல் பிரிகை (chromatography) முறை மூலம் பிரிப்பு நிகழ்த்தினால், கெரோட்டின் (ஊதா நிறப் -187°C, படிகங்கள், உருகுநிலை தளமுனைவு ஒளியை வலப்புறம் திருப்பவல்லது), நீ கெரோட் டின்கள் (சிவப்புநிறப் படிகங்கள், உருகுநிலை- 188°C. ஒளிசுழற்சித் திறனற்றது) கெரோட்டின்கள் 08- (ஆழ்ந்த சிவப்புப் படிகங்கள், உருகுநிலை-154°C ஒளி சுழற்சித் திறனற்றது) ஆகியன கிட்டுகின்றன. மூன்று கெரோட்டின்களுமே இயற்கையில் கிடைக் கின்றன. ஆனால் தோற்றுவாயைப் பொறுத்து இவற்றின் சதவீதம் மாறும். காரட்டுகளில் 15% ஆல்ஃபாவும், 85% பீட்டாவும், 0.1% காமாவும் உள்ளன.கெரோட்டின்களை வணிக அளவில் தயா ரிப்பதற்கு ஏற்ற பயிர்கள் காரட்டும், அல்ஃபால்ஃபா புல்லும் ஆகும். கெரோட்டின்கள் காற்று, வெப்பம், அமிலம், காரம் ஆகியவற்றல் தாக்குமுறுகின்றன. பீட்டா-கெரோட்டினின் வடிவமைப்பு. பிளாட்டி னத்தை வினையூக்கியாக்கி, நீ கெரோட்டினை ஹைட்ரஜனேற்றம் செய்தால் பெர்ஹைட்ரோ 8 கெரோட்டின் எனும் சேர்மம் கிடைக்கிறது. இதன் மூலக்கூறு வாய்பாடு CH; ஆனால், B கெரோட்டினில் 11 இரட்டைப் பிணைப்புகள் இருந் தாக வேண்டும் என்று தெரிகிறது. பெர்ஹைட்ரோ .