பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெழுத்தி மீன்கள்‌ 331

ய பங்காசியஸ். பங்காசியஸ் (pangasius) என்னும் இனத்தைச் சேர்ந்த கெழுத்தி 2.5 மீ. வரை வளரக் கூடியது.பங்காசியனோடான் ஜிகாஸ் (Pangasianodon gigas) முக்கிய உணவு மீன்களில் ஒன்று. தாவரங் களையே உணவாக அருந்துவதால் ஏனைய செழுத்தி மீன்களை விட இவை வேறுபட்டவையாகும். இவை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. சிறிய மீன்களில் பற்கள் காணப்பட்டாலும் முதிய மீன்களில் பற்களே இல்லை. கிழக்கு இந்தியாவின் பெரிய ஆறுகளில் வசித்துக் கொண்டு மழைக் காலங்களில் வை நெடும் பயணம் மேற்கொள்கின்றன. இப்பயணங் கெழுத்தி மீன்கள் 331 களில் இவை சீனாவின் டாலி ஏரியில் சென்று முட்டை இடுகின்றன. வெளிக்காற்றைச் சுவாசிக்கும் கெழுத்தி மீன்கள். வாழ்வதற்குத் தகுதியற்ற சிறிய நீர் நிலைகளில் வாழும் சில கெழுத்தி மீன்கள் வெளியிலுள்ள ஆக்சி ஜனைச் சுவாசிப்பதற்கு ஒரு புதிய அமைப்பைப் பெற்றுள்ளன. அவற்றின் செதில் அறையின் மேற் புறத்தில் சுவாசத் துணையுறுப்பு (supplementary res- piratory apparatus) ஒன்றை ஆக்சிஜனைச் சுவாசிப் பதற்காகப் பெற்றுள்ளன. கிளேரியஸ் என்னும் மீன் ஆரியல் சனாசினெஸ் காலிக்கோரல் பைமேக்லேட்டஸ்