பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கேஃபின்‌

344 கேஃபின் மான பகுதியில் காரத்தன்மை மிக்க பாறைக் குழம்பு உறையும்போது பெரிய துகள்களைக் கொண்ட பாறைகளாக உண்டாகும். மிகு காரப் பாறைகளு டன் சேர்ந்து காணப்படும் இவை, பாறைக் குழம்பு உறையும்போது, பகுத்துப் படிகமாவதால் அடுக்குப் பாறைத் தொகுதியாகத் தோன்றுகின்றன. . ப. வெங்கட்ராமன் நூலோதி. N.L, Sharma and K.S.V. Ram, Introduction to India's Economic Minerals, Dhun- bad Publishers, Dhanbad, 1964. கேஃபின் உலகின் பலபகுதியிலும், நீண்டகாலமாகவே சிலசெடி களின் விதை அல்லது இலைகளிலிருந்து தயாரிக்கப் படும் பானம் மனிதரால் பயன்படுத்தப்பட்டு கிறது. அவற்றின் வழி உடல் தளர்ச்சி, மனத்தளர்ச்சி களைப் போக்கிப் புத்துணர்ச்சி பெறுவர். H CH, HN CH,N CH,N H சாந்தின் CH, HN CH, கேஃபின் CH, CH₁ தியோஃபிலின் தியோபுரோமின் வரு சாந்தின் அணுச்சேர்க்கை அடிப்படையில், மெத்தில் இணைப்புகள் சேர்ந்துள்ளன. கேஃபின் ( caffeine) தியோஃபிலின், தியோபுரோமின் ஆகிய சில இவை அனைத்துமே மூளை நரம்பு மண்டலத் திற்குப் புத்துணர்வூட்டும்; இதயத் தசைகளை நன்கு கருங்க வைக்கும்; சிறுநீரகத்தைத் தூண்டி, சிறு நீரை மிகுதியாக வெளிப்படுத்தும்; சுவாசக் குழாய் களை விரிய வைத்துச் சுவாசிப்பதை எளிமைப்படுத் தும். எனினும் இவற்றின் இயக்க வேகத்தில் மாறு பாடுகள் உண்டு. எ.கா.சுவாசக் குழாய்களை விரிய வைப்பதிலும், சிறுநீரைப் பெருக்குவதிலும் மூளை நரம்பு உடல் தசைகளைப் புத்துணர்வூட்டுவதிலும் தியோஃபிலின் சிறந்தது. மூளைநரம்பு மண்டலம். தூக்க மயக்கத்தைப் போக்கி, மனச்சோர்வை அகற்றிச் சீராகச் சிந்தனை செய்ய உதவும் கேஃபின், உணர்வுகளை விரைவில் உட்கவரச் செய்து, அதற்கேற்ப உள்ளத்தையும் உடலையும் சிறப்பாகவும், சீராகவும் இயக்கும். முகுளம் (medulla) என்னும் மூளைப் பகுதியில் சுவாச இயக்க மையம் அமைந்துள்ளது. இது பல காரணங்களால் தளரும்போது சுவாச இயக்கம் நின்று போகக்கூடும். அந்நிலையில் கேஃபின் வகைப் பொருள்களே இதைத் தூண்டி மீண்டும் சீராகச் சுவாசிக்கச் செய்கின்றன. இதய இயக்கம், நரம்பு மண்டலத்தைச் சீராக இயக்குமளவு இதய இயக்கத்தைக் கேஃபினால் அவ்வளவு சீராக இயக்க இயலுவதில்லை. ஆனால் அதைவிட இதய இயக்கத்திற்குத் தியோஃபிலின் சிறந் தது. கேட்டகாலமைன்களோடு இணைந்து இயங்கி. இதயத்தசை நார்களை நன்கு சுருங்க வைக்கும்; தமனிகளை விரிவடைய வைக்கும்; இவ்வழி மந்தமான இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும்; கேட்டகால மைன்களின் உற்பத்தியையும் உயர்த்தும். உடலில் மிகையான சிரை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இவ்வழுத்தம் குறைய, இதயம் மேலும் சிறப்பாக இயங்கும். சுவாச இயக்கம். கேஃபின் சுவாச இயக்க மையத்தைத் தூண்டும்போது சுவாசக் குழாய்களை விரிவடையச்செய்து, ஆஸ்துமாவைத் தணிக்கும். இவ்வகையில் கேஃபினைவிடத் தியோஃபிலின் சிறந் தது. வயிறு. கேஃபின் கலந்த பானத்தை அளவோடு உட்கொண்டால் செரிமான அமிலத்தைச் சற்றே அதிகமாக்கி, உணவு செரிக்க உதவும். ஆனால் அளவு கடந்தும் அடிக்கடியும் சாப்பிடும்போது, வயிற்றில் புண் உண்டாகக்கூடும். இவற்றை மாத்திரையாகத் தரும்போது, தேவையாயின் அமில எதிர் மருந்தைக் கொடுக்கலாம்.