பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேலிஃபார்மிஸ்‌ 351

கேவிஃபார்மிஸ் 351 ஏதாவதொரு குழியில் புல்லால் மென்மையாகக் கூடு கட்டி அதில் முட்டையிடும். வெளிர் மஞ்சள் நிற முட்டைகள் 3 5 வரை இடும். பெண்மயில் அடை காக்கும். அடைகாக்கும் காலம் 28 நாள். ஆம் ஆண்டில் இந்திய தேசியப் பறவையாக மயிலை இந்திய அரசு அறிவித்தது. 1963 காணலாம். கௌதாரியும், காடையும். வேட்டைக்காரர் மிக விரும்பி வேட்டையாடும் பறவைகள் கௌதாரியும். காடை டயுமே ஆகும். இவை காடுகளிலும், புதர் களிலும், புல்வெளிகளிலும் மறைந்து தரையோடு தரையாக ஒட்டி ஓடி ஒளியும். விளை நிலங்களில் அறுவடையின்போது இப்பறவையைக் தானியங்களையும், புவ்விதைகளையும் முக்கிய உணவாகக் கொள்ளும் இப்பறவைகள் சிறு கற்களை யும். மணலையும் ஓரளவு உட்கொள்கின்றன. எப் பொழுதும் சிறு கூட்டமாகத் திரியும் இ வைவேட்டைக் காரர்கள் ஆரவார முழக்கம் செய்து துரத்தும்போது எழுந்து பறந்தாலும், சிறிதுதொலைவு பறந்தவுடன் மீண்டும் தரையில் இறங்கி ஓடிப் புதர்களில் மறைந்து கொள்ளவே விரும்பும். தரையிலேயே 8 முட்டை கள் இடும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்தவுடன் தாய்ப்பறவையைத்தொடர்ந்து பறக்கும். காட்டுக்கோழி. இது வீட்டுச்சேவல் அள விருக்கும். ஆண் சுமார் 70 செ.மீ. நீளமும் பெண் 45 செ.மீ நீளமும் இருக்கும். அலகு செம்பு நிறமாகவும் கால்கள் பழுப்புக் கலந்த மஞ்சளாகவும் து இருக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஆண்பறவை யின் உடலின் மேற்பகுதி வெண்கோடுகளோடு கூடிய ஆழ்ந்த சாம்பல் நிறமாக இருக்கும். ஊதா நிறங்கலந்த கறுத்த இறக்கைகளும் அரிவாள் போல் வளைந்து நீண்ட சுறுப்புவாலும் இதனை அடையாளம் காட்டும். கழுத்தைச் சுற்றிப் பெரிய தூவிகளையும், முன் உடலில் பளபளக்கும் ஆரஞ்சு நிறத்தில் அரக்கினை ஒத்த புள்ளிகளையும் கோடு களையும் பெற்றிருக்கும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் கழுத்தில் தூவிகள் இரா. பெண் பறவை யின் உச்சந்தலையும், கழுத்தும் புள்ளிகளோடு கூடிய பழுப்பு நிறங் கொண்டிருக்கும். இறக்கையில் வரிவரி கோடுகள் காணப்படும். வட இந்தியாவில் அபுமலை முதல் கோதாவரி ஆறு வரையிலும், வறண்ட காடுகளிலும், பசுங்காடுகளிலும், மலைகளி லும் இப்பறவையைக் காணலாம். தொட்ட பெட்டா ஆனைமலை போன்ற மிக உயர்த்த மலைச்சிகரங் களிலும் காணப்படும். 4 முதல் 5 வரையான கூட்டமாகக் காலை மாலை நேரங்களில் புதர்களி லிருந்து வெளிப்பட்டு இரைதேடும். தானியம், புல், முளை, கிழங்கு, பழம், புழு, பூச்சி, கறையான், சிறுபாம்பு முதலியன இதன் உணவாகும். யான் சிறு சுண்டாங்கோழி. இது அளவில் கௌதாரியை விடப் பெரியது. நன்கு வளர்ந்த வீட்டுக் கோழியின் அளவில் முக்கால் பங்கு இருக்கும் (36செ.மீ). இதன் அலகு இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். ஆண் பாவேன் கிரிஸ்டேட்டஸ்