பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 கேலியம்‌

356 கேலியம் ஆக்சிஜனேற்ற சூழ்நிலையில் குவார்ட்ஸையும் இது நனைப்பதில்லை. கேவியம் அணுக்கள், அலுமினியப் படிவங்களினூடே ஊடுருவும் தன்மையுடையன. அலுமினியத் தகடொன்றின் மீது கேலியத் துண்டால் கோடு வரைந்தால், கோடிட்ட பகுதிகளில் அலு மினியத் தகடு நொறுங்குகிறது. கேலியத் திண்மம் திசையொவ்வாப் (anistropic) பண்பு கொண்டது. மின்னியல் பண்புகள். நீள் விரிவுக் குணகம், ஒளி விலகல் எண் ஆகியவற்றின் மதிப்பு மூன்று அச்சு களிலும் வெவ்வேறாக இருக்கும். சாதாரண நீர்மக் கேவியமும், மிகக் குளிர்விக்கப் பட்ட நீர்மக் கேலியமும் ஒரே அமைப்புடையவை. அணுக்கள் சேர்ந்து படிகக்கரு உருவாவதற்கான வாய்ப்புகள் வெப்பநிலையைப் பொறுத்துள்ளன. மிகச் சிறிய அளவில் கேலியம் ஆக்சைடோ. படிகக் குறைபாடுகளோ தோன்றினால் மிக விரைவில் கேலியப் படிகங்களின் வளர்ச்சி நிகழும். கேலியத்தின் இயற்பியல் பண்புகள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன. மிகத் தாழ்ந்த வெப்பநிலையில் கேலியம் நொறுங்கும் தன்மை பெறுகிறது. பிற உலோகங் களைப் போலல்லாமல், நீரைப் போலவும் அச்சு உலோகத்தைப் போலவும், நீர்ம நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது விரிவடைகிறது. இப்பண்பும். அறை வெப்பநிலைக்கு அருகில் அமைந் துள்ள அதன் உறைநிலையும் ரப்பர், நெகிழி போன்ற மீள்தன்மை கொண்ட பொருள்களான கலன்களில் மட்டுமே கேலியத்தைச் சேமிக்க வேண்டிய கட்டாயத் தேவையை உருவாக்குகின்றன. மீள் தன்மையற்ற விறைப்பான கலன்களில் அடைத்து வைத்தால், வெப்பநிலை ஏற்றத் தாழ்வுகளுக்குத் தக்கவாறு சுருங்கி விரிந்து கவனை உடைத்துவிடக் கூடும் அல்லது கலனின் உட்சுவரிலுள்ள பொருள்கள் கேலி யத்தில் கலந்து மாசுறச் செய்துவிடும். வேதிப் பண்புகள். வேதிப் பண்புகளில் கேலியம் அலுமினியத்தை ஒத்தது. அலுமினியத்தைப் போன்றே அமிலத் தன்மை, காரத் தன்மை இரண்டும் ஒருங்கே அமையப் பெற்றது. எனினும், அலுமினியத்தை விடச் சற்றுக் கூடுதலான அமிலப் பண்பு கொண்டது. எடுத்துக்காட்டாக, சோடியம் கேலேட் கரைசல் சோடியம் அலுமினேட் கரைசலைவிட நிலைத்தன்மை மிக்கது. கேலியத்தின் வணிக அளவின் தயாரிப்பில் ப்பண்பு வேறுபாடு பயன்படுகிறது. சாதாரணமாக, அலுமினியம், கேலியம் இரண்டுமே +3 ஆக்சிஜனேற்ற எண் கொண்டவை. இரண்டுமே இணையான வாய் பாடுள்ள ஆக்சைடுகள், ஹைட்ராக்சைடுகள் மற்றும் பிற உறுப்புகளைத் தருகின்றன. ஆனால் சிறு வேறு பாடுகளும் உள்ளன. கேலியம் ஆக்சைடு (கேலியா ) ஒரு படிக நீருடனும், அலுமினியம் ஆக்சைடு (அலுமினா ) ஒற்றைப் படிக நீர், மூன்று படிக நீர் ஆகிய இரு அமைப்பிலும் உண்டாகின்றன. அலு மினியம், கேலியம் இரண்டுமே படிகாரங்களையும் கரிம உலோகச் சேர்மங்களையும் தோற்றுவிக்கின்றன. 500°C இல் சூடுபடுத்தும்போது கேலியம் காற்றில் எரிகிறது. கொதிநீருடன் விரைவாகவும்,குளிர்ந்த நீருடன் மெதுவாகவும் வினையுறுகிறது. கேலிய உப்புகள் நிறமற்றவை. உப்புகளைத் தூய்மைப்படுத்துவதைவிடக் கேலிய உலோகத்தைத் தூய்மைப்படுத்துவது எளிதாகையால், கேலியத்தின் உப்புகள் உலோகத்திலிருந்து நேரடியாகத் தயாரிக் கப்படுகின்றன. பென்சீன், கார்பன் டெட்ராகுளோ ரைடு, ஈதர் போன்ற கரிமக் கரைப்பான்களில் கேவியம் டிரைகுளோரைடு கரைகிறது. கரிம நீர்மங் களில் கேலியம் குளோரைடுக்குக் கரைதிறன் மிகுந் திருப்பது அவ்வுப்பை வினையூக்கியாகப் பயன்படுத்து வதற்குத் தூண்டுகோலாக உள்ளது. எஃகில் மிக மிக நுண்ணிய அளவில் இடம் பெறும் கேலியத்தை அளவறிவதற்கு, டெட்ராமெத் தில் அம்மோனியம் உப்புகளுடன் அணைவுச் சேர்ம மாக்கி, நிறநிரல் இயல் பகுப்பாய்வு நிகழ்த்துதல் தகுந்த முறையாகும். எஃகு மாதிரிப் பொருளை அமிலத்தில் கரைத்து ஃபீனைல் ஃபுளோரோன் எனும் வேதிப்பொருள் சேர்த்து, ஸெஃபீரமின் எனும் பொரு ளுடன் அணைவுச் சேர்மமாக்கி இதன் மூலமாக நிறத்தைக் கூடுதலாக்கி) வண்ணப் பகுப்பாய்வுக்குட் படுத்தலாம். கேலியத்தின் தளப்பொருள்களாகப் பெரிலியம் ஆக்சைடும், அலுமினியம் ஆக்சைடும் பயனாகின்றன. என்றாலும், 1000° C க்கு மேற்பட்ட வெப்பநிலையில் செராமிக்குகளுக்கும் கேவியத்துக்கும் இடையே வினை நிகழ்ந்துவிடும். சேவியம் அசெட்டைல் டிரைஃபுளூரோ -B- டைசீட்டோன், கேலியம் பென்சாயில் டிரைஃப்ளூரோ அசெட்டோனேட்-3 - டைகீட்டோன் ஆகிய கொடுக் கிணைப்புச் சேர்மங்கள் (chelates) 1 மி. மீ. அழுத் தத்தில் முறையே சுமார் 767°C இலும், 110°C லும் பதங்கமாகின்றன. பின்னப் பதங்கமாதல் முறை மூலம் கேலியத்தைத் தூய்மைப்படுத்துதல் இதனால் எளிதாகிறது. இணைதிறன் மூன்று கொண்ட கேலியம் 6M ஹைட்ரோ குளோரிக் அரிலக் கரைசலிலிருந்து நீ டைகுளோரோ டைஎத் தில் ஈதர் என்ற கரைப்பானில் ஈர்த்துப் பிரிக்கலாம். கேலிய யத்துடன் இணைகிறன் + 3 கொண்ட மும், தங்கமும் கரிமக் கரைப்பானில் சுரைகின்றன எனினும், ஏனைய தனிமங்கள் எவையும் நீரியக் கரைசலிலிருந்து கரிம அடுக்குக்குத் தாவுவதில்லை. தா லிய கேலியத்துடன் மாசுப் பொருளாக இடம் பெறும் இண்டியம், இரும்பு, ஆன்ட்டிமனி ஆகிய உலோகங்கள் குளோரைடு கரைசலிலிருந்து டை ஐசோபுரோப்பைல் ஈதர் என்ற நீர்மத்தைப் பயன்