பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கேலியம்‌

360 கேலியம் அட்டவணை 2 குறைகடத்தியின் குறியீடு/ வாய்பாடு கிளர்வு ஆற்றல் eV அறை வெப்ப நிலையில் பெரும நகர்திறன் பெரும வெப்ப ருகு (செ.மீ/நொடி)/வோல்ட்/செ.மீ) எலெக்ட்ரான் மின்துளைகள் நிலை லை வரம்பு °C °C Ge 0.7 3900 1900 100 936 Si 1.3 1500 500 250 1420. GaSb 0.7 5000 1000 702 GaAs 1.43 8500 400 450 1240 GaP 2.35 130 70 1000 1470 கண்ணாடியுடன் ஒட்டுவதையும் விளக்கு அணைந்த வுடன் குளிர்விக்கப்படுகையில் கேட்மியத்தின் சுருக்கம் கண்ணாடியை உடைப்பதையும் தடுத்து நிறுத்தலாம். உயர் அழுத்தப் பாதரச விளக்குக்குச் சிறிது கேலியம் அயோடைடைச் சேர்த்தால், விளக்கின் சதிர்வீச்சு அடர்த்தி 400-420 nm(108மீ) வரம்பில் உயருகிறது. எந்திர இயக்கத்தை மின் துடிப்புகளாக (pulses} மாற்றும் அமைப்பில் கேலியம் ஆர்செனைடு (GaAs) பயன்படுகிறது. கேலியம் ஆர்செனைடின் பண்புகள் அட்டவணை 2 இல் தொகுக்கப்பட்டுள்ளன. நகர்த்த வல்ல கீற்றணி (grating: ஒன்றை ஒளி உமிழும் கேலியம் ஆர்செனைடு டையோடிற்கும் (diode), ஒளி உணரும் கேலியம் ஆர்சினைடு தகட்டுக்கும் இடையே புகுத்த வேண்டும். ஒரு சவ்வு மூலமாக ஓர் எந்திர அமைப்புக்கு இணைத்தால் இயக்கம் ஒளி உணரும் டையோடு மீது விழும் ஒளியைப் பண்படுத்துகிறது. குறை வெப்பநிலையில் பயன்படும் மின்தடை வகை வெப்பநிலை அளவி களில் கேலியம் பயனாகிறது. அதன் தொகுப்பு முறையில் மீகடத்திகளைத் தயாரிப் பதற்கு நுண்துளை மலிந்த வனேடியம் அல்லது டான்டலத்தினாலான தளத்தில் அறை வெப்பநிலை யில் நீர்மநிலைக் கேலியம் ஹைட்ரைடை ஊள ஊற்றிச் சூடுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்கையில் V, Ga, Ta,Ga ஆகிய சேர்மங்கள் தோன்றுகின்றன. வனேடி யத்தைத் தூய செம்பினால் சூழ வைத்துக் கோவைப் பொ பாருளை உருவாக்கி, அதனுள் V,Ga, எனும் வாய் பாடு கொண்ட சேர்மத்தின் தூளை நிரப்பி மீகடத் தும் அமைப்புகளை உருவாக்கலாம். இக்கோவைப் பொருளை எந்திர வழியில் மெல்லிய கம்பியாக நீட்டிச் சூடுபடுத்தினால் மீகடத்திகள் தோன்றுகின் றன. இங்கு V,Ga, எனும் சேர்மம் வனேடியத்துடன் வினைப்பட்டு V.Ga எனும் சேர்மமாக மாறுகிறது. எளியமின்கல வகை ஒன்றில் திண்மநிலை மின் பகுளியாகப் பயனாகும் லாந்தனம் கால்சியம் அலு மினேட் படிகத்தில் அலுமினியம் அயனியைக் குரோமியத்தாலோ கேலியத்தாலோ பதிலீடு செய்ய லாம். இப்படிகத்தின் ஒரு புறப்பரப்பு ஆக்சிஜன் வளிமத்துடன் தொடர்புற்றிருக்கும். இதற்கு ஆக் சிஜன் மின்முனை எனப்பெயர். மற்றொரு புறப் பரப்பு ஹைட்ரஜன் வளிமத்துடன் தொடர்பு கொண்டிருக்கும், இது ஹைட்ரஜன் மின்முனையாகும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தத்தக்க சில செயல் களில் கேலியம் நேர் மின்முனையாகப் பயன்படுகிறது. இங்கு, கார உலோகம் அல்லது கார-மண் உலோகத் தின் உப்பு உருக்கிய நிலையில் மின்பகுளியாக உள்ளது. இவ்வுப்பின் நேர் மின் அயனியைக் கொண்ட உலோகம் உருகிய நிலையில் எதிர் மின் முனையாகப் பயன்படுகிறது. உருகிய நிலையிலுள்ள மின்முனைகளிலிருந்து மின்பகுளியை ஒரு நுண்துளை மலிந்த சவ்வு பிரிக்கிறது. இரு நீர்ம மின்முனைகளும் விரவல் இயக்கத்தால் தொடர்பு கொண்டுள்ளன. தனால் விளாவப்பட்ட அல்லது அகற்றப்பட்ட உலோகங்களைத் தூய உலோகங்களால் அவ்வப் போது பதிலீடு செய்தல் வேண்டும். விரவல் முறை யால் ஒன்றோடொன்று கலந்துவிட்ட உலோகங் களை வாலைவடித்தல் மூலம் பிரித்துப் பெறலாம். எனவே இம்மின்கலம் தொடர்ச்சியாகப் பயன்படுத்து வதற்கு ஏற்றது; குறைவானது; அதிக ஆற் றவை விரைவாக அளிக்கவல்லது. அடர்த்தி குறை வாக உள்ளமையால், கேலியம் பிஸ்மத்தையும் பாதரசத்தையும்விட இத்துறையில் சிறந்ததாகும். 30 எடை கேலியம் நச்சுத்தன்மை அற்றது. கேலியத்தின் ID.. (எலிகளுக்கும், முயல்களுக்கும்) மதிப்பு 100 மி.கி/கி.கி ஆகும். வேறுசில உலோகங்களுடன் கலக் கும்போது, அவற்றின் நச்சுத் தன்மையையும் குறைத்துவிடும். எ.கா. எலிகளின் உடலில் நிக்கல்