368 கேள்திறன் அளவி
368 கேள்திறன் அளவி மரப்பொந்துகளிலுமே வாழக்கூடியவை. இவை மரப் பொந்துகளின் உட்புறம் மிகத் திறமையாக நுழைந்து நடுமரத்துக்கு நன்கு ஏறக்கூடியவை. இவ்வின மான்கள் விடியலிலும் அந்தி மாலையிலும் உணவு தேடத் தம் மறைவிடங்களை விட்டு வெளியே வரு கின்றன. அபாயம் நேரிடும் எனத் தெரிந்தால் ஆடாமல் அசையாமல் நின்று விடும். ஆண் மான்கள் தனித்தே வாழ்கின்றன; இனப் பெருக்க காலமாகிய குளிர் காலங்களில் பெண்மான் களோடு இணைந்து காணப்படும். இம்மான்களின் இனப்பெருக்க முறைகள் சரியாக அறியப்படவில்லை. இரண்டு குட்டிகளையீன்று மறைவிடங்களில் பெண் மான்கள் மிகக் கவனமாகக் குட்டிகளைப் பேணிப் பாதுகாக்கின்றன. இவ்வினமான்களைப் போல இரண்டு சிறப்பினங்கள் மலேசிய நாட்டில் காணப்படு கின்றன. கோவி. இராமசுவாமி கேள்திறன் அளவி கேள்திறன் கருவிகளில் (audiometer) ஒரே பெட்டியில் இரண்டு கேள்திறன் அளவீட்டு அமைப்புகள் உள்ளன. அவை தனித்தனியாக இயங்கக் கூடியவை, அவற்றில் உள்ள ஒலிவகைத் தேர்வுக் குமிழைச் சுழற்றித் தூய ஒலி, பேச்சொலி, மறைப்பு ஓசை, அமைதி என்ற நான்கு வகை ஒலி நிலைகளை உண்டாக்க முடியும். இவை மின்னாற்றலால் இயங்குகின்றன. ஒற்றைச் செவி அல்லது இரட்டைச் செவி ஆய்வு முறைகளில் காது வழி ஒலி உணர்வையும், எலும்பு வழி ஒலி உணர்வையும் அவை சோதிக்க உதவுகின்றன. ஒரு தலைப்பட்டையில் பொருந்தக்கூடிய வகையில் அமைந்த ஒரு சிவப்பு நிற ஒலி ஏற்பி. ஒரு நீல நிற ஒலி ஏ ற்பி, ஓர் எலும்பு வழி ஒளி கடத்தி, எலும்பு அதிர்வி (vibrator), ஓர் ஒலி வாங்கி ஆகியவை கேள்திறன் அளவியின் துணைக் கருவி களாக இருக்கும். கேள்திறன் இழப்புக் குமிழ்.சிவப்பு நிற மெலி தாக்கி இணைப்பி (switch) 10-100 டெசிபெல் வரை 5 டெசிபெல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட சிவப்பு நிற அளவுகோலின் மேலும், -10 முதல் + f0 டெசிபெல் வரை 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மஞ்சள் நிற அளவு கோலின் மேலும் நகரும். சிவப்பு நிற அளவுகோல் காதுவழி ஒலி உணர்வையும். மஞ்சள் நிற அளவுகோல் எலும்பு வழி ஒலி உணர்வை யும் அளவிடும். இந்த ணைப்பி வல அல்லது இடக் காதின் கேள்திறன் கோடுகளைப் பதிவு செய்ய மட்டுமே பயன்படுகிறது. செறிவுக் குமிழ். இது - 10 முதல் + 100 டெசி பெல் வரை அளவு குறிக்கப்பட்ட பச்சை நிற அளவு கோலின் மேல் நகரும். இது ஒலியை மறைப்பதற்கு அல்லது பேச்சொலிச் செறிவைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும். ஆனாலும் இரட்டைச் செவிச் சோதனைகளின்போது ஒலிகளைச் செலுத்தவும் கட்டுப்படுத்தவும் இது பயன்படும். தூய ஒலி இணைப்பி . 11 பிரிவுகளாக அளவு குறிக்கப்பட்ட ஓர் அளவு கோலின் மேல் நகரும் இந்த இணைப்பி 125 Hz 12,000 Hz வரையான திர்வெண்களில் தூய ஒலிகளைச் செலுத்தும். அத்துடன் இது காதுவழி அல்லது எலும்பு வழி ஒலி கடத்தல்களுக்கான பெருமச் செறிவுகளையும் கட்டுப்படுத்துகிறது. அதன் அளவுகோல் முகப்பில் மூன்று நிறங்களில் அளவீடுகள் குறிக்கப்பட்டிருக்கும். கருநிறக் குறியீடுகள் காதுவழி ஒலி கடத்தலுக்கான பெருமச் செறிவுகளையும், மஞ்சள் நிறக் குறியீடுகள் எலும்பு வழி ஒலி கடத்தலுக்கான பெருமச் செறிவு களையும் அளவிடும். இந்த இணைப்பி தூய ஒலி செலுத்துஞ் சோதனையின்போது மட்டுமே செயல் படும். சிவப்பு நிற ஒலிவகைத் தேர்வி. இந்த இணைப்பி தூய ஒலி, பேச்சு, அமைதி, ஓசை என்ற நான்கு ஒலி வகைகளைச் சிவப்பு வழி மெலிதாக்கிக்கு (atte nuator) அனுப்பும். நீல நிற ஒலி வகைத் தேர்வி. இது மேற் கூறிய நான்கு ஒலி வகைகளை நீல வழி மெலிதாக்கிக்கு அனுப்புகிறது. தடுப்பான் இணைப்பி, இது தூய ஒலி அலை யியற்றிச் சுற்றில் ஓர் உறுப்பாகும். சிவப்பு நிறமுள்ள இதை அமுக்கினால் காதொலியன்களிலிருந்து வெளிப் படும் ஒலி படிப்படியாக மங்கி மறைந்து போகும். இதை உயர்த்தினால் ஒலி மீண்டும் தோன்றிப் படிப் படியாக வளரும். இவ்வாறு மறையவும், வளரவும் ஆகும் நேரத் தாமதம் ஒலியின் அதிர்வெண்ணிற்கு ஏற்றபடி 0.1-2 நொடி வரை இருக்கும். சமநிலைச் சோதனை இணைப்பி. இது நீல நிற மான அமுக்கு இணைப்பி இதை அழுத்தினால் ஒலி ஒரு வழியிலிருந்து இன்னொரு வழிக்கு மாற்றிச் செலுத்தப்படும். இரட்டைச் செவிச் சோதனைகளின் போ து செவிகளின் கேள்திறன்களை ஒப்பிடும்போதும் பேச்சொலிக் கேள்திறன் சோதனைகளின் போதும் து உதவியாக இருக்கும். காற்று எலும்பு இணைப்பி. காற்று - எலும்பு எனக் குறியிடப்பட்ட ஒரு சிறிய கருநிறக் குமிழ் சிவப்பு வழியைக் காது வழிக் கடத்தலுக்கோ. எலும்பு வழிக் கடத்தலுக்கோ ஏற்றதாக மாற்று கிறது. காற்று என்ற குறியீட்டுக்கு நேராக அதைத் திருப்பி லைத்தால் சிவப்பு நிறக் காதொலியனுக்கு ஆற்றல் செலுத்தப்பட்டு அது இயங்கத் தொடங்கும்.