பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்திறன்‌ அளவி 371

கேள்திறன் இழப்பு -டெசிபெல்லில் 10 20 301 40 50 60 70 80 90 காதுவழி உணர்வு மறைப்பு ஓசையுடன் காது வழி உணர்வு எலும்பு வழி உணர்வு வலக்காது A டக்காது X கேள்திறன் இழப்பு - டெசிபெல்லில் 20 30 40 50 60 70 80 90 கேள்திறன் அளவி 371 மறைப்பு ஓசையுடன் எலும்பு வழி உணர்வு D 125 250 500 1000 2000 4000 8000 அதிர்வெண் சுற்று / நொடியில் காதுவழி உணர்வு எலும்பு வழி உணர்வு படம் 2. இயல்பான கேள்திறன் உள்ளவரின் கேள்திறன் வரைபடம் செறிவுகளிலும் செவியுணர் தொடக்க அளவுகளைக் கண்டுபிடிக்கலாம். இடப்பக்கச் செவிக்குப் பின்னுள்ள எலும்பில் எலும்பு வழி ஒலி உணர்வை ஆய்வு செய்ய ஆய்வுக் குரியவர் எலும்பு ஒலிகடத்தியை இடச் செவிக்குப் பின்னும், சிவப்பு நிறக் காதொலியனை இடச் செவி யிலும் நீல நிறக் காதொலியனை வலச் செவியிலும் அணிகிறார். பின்னர் மேற்கூறியவாறு ஆய்வு செய்யப்படுகிறது. பேச்சொலியின் கேள்திறன் ஆய்வு. செவி ஒலி யுணர்வு ஆய்வுக்காகக் கேள்திறன் அளவியை ஆயத் தம் செய்ய முதலில் அதிர்வெண் தேர்விக் குமிழை 1000 HZ அளவீட்டில் வைக்கவேண்டும். கேள்திறன் இழப்புக் கட்டுப்பாட்டுக் குமிழை 50 டெசிபெல் லுக்கு நேராகத் திருப்ப வேண்டும். சிவப்பு நிற ஒலி வகைத் தேர்வியைத் தூய ஒலிக்கு நேராகவும். காற்று - எலும்பு இணைப்பியைக் காற்றுக்கு நேராக அ.க.9-24 அ 125 250 500 1000 2000 4000 8000 ர்வெண் சுற்று நொடியில் காது வழிக் கடத்தல் எலும்பு வழிக்கடத்தல் படம் 3. வெளிக்காதில் கோளாறு உள்ள வரின் கேள்திறன் வரைபடம் வும் நீலநிற ஒலிவகைத் தேர்வியை அமைதிக்கு நேராகவும் திருப்பி வைத்துக் காதொலியனில் ஒலி கேட்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்துச் சிவப்பு நிற ஒலிவகைத் தேர்வியை அமைதி நிலைக்குத் திருப்பி நீல ஒலிவகைத் தேர்வி யைத் தூய ஒலி நிலைக்குத் திருப்பி நீல நிறக் காதொலியனில் ஒலி கேட்கிறதா என்று சோதிக்க வேண்டும். இப்போது சிவப்பு வழி, நீல வழி இரண்டும் ஒற்றைச் செவி ஒலியுணர்வை ஆய்வு செய்ய ஆயத்த நிலையில் இருக்கும். பின்னர் எல்லாக் குமிழ்களை யும் மேலே கூறிய நிலைகளில் திருப்பி வைத்துக் கொண்டு இரண்டு ஒலிவகைத் தேர்விகளையும் ஒலி நிலையில் திருப்பி வைத்து இரண்டு காதொலி யன்களிலும் ஒலி கேட்கிற றதா எனச் சோதிக்க வேண்டும். துய எலும்பு வழி ஒலியுணர்வு அளவை ஆய்வு செய்ய எல்லாக் குமிழ்களையும் மேற்கூறிய நிலைகளிலேயே