பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்‌ திறனியல்‌ 375

நரம்பியக் குறை. இக்குறை பொதுவாக வயது முதிர்ந்தோரில் காணப்படும். உட்செவிக் கேடுகளில் நரம்பிழைகள் பாதிக்கப்படலாம். இக்குறை கண் டோரில் புறச்செவியும், நடுச்செவியும் சரிவர இருக்கும்; உட்செவி, கேள்நரம்பு. சுருள்வளை நரம்பு மற்றும் மூளையில் ஏதேனும் கோளாறு இருப்பதால், அவர்களின் கேள்வித்திறன் குறைகிறது. இவ்வகைக் குறைவுடையோரில், ஒலி குறை வாகக் கேட்கப்படுவதோடன்றி, தெளிவற்றும், மருவியும் உணரப்படும். எதிரில் இருப்பவர் பேசும் சொற்கள் சரியாகக் கேட்கப்படுவதுமில்லை. மாறாக, சொன்ன சொற்களுக்குப் பதிலாக வேறு சொற்களைச் சொன்னதாகவும் எண்ணப்படும். எனவே, இவருக்கு ஒலியை அதிகப்படுத்துவதால் பயனில்லை. மிகு ஒளியால், மேலும் சிறிது மருவியும் அது புரிந்து கொள்ளப்படலாம். தம்முடைய குரலையே இவரால் சரியாகப் புரிந்தோ தெரிந்தோ சொல்ல முடியாததால், இவருடைய பேச்சு தெளிவின் றியும், சொற்கள் பழுதுபட்டும் அமையலாம். கேள்விச் சோதனைகள் கேள்திறன் கூர்மையைப் பலவகையான சோதனைகளின் மூலம் கணிக்கவியலும். குரல்முறைச் சோதனைகள். ஓர் அமைதியான அறையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். நோயாளி யின் காது ஓரிரு அடித்தொலைவில் இருக்க, ஒருவர் இதனை நிகழ்த்த வேண்டும். முதலில் மிக மெல்லிய முணுமுணுப்பு பின்னர் சற்றே உரத்த முணுமுணுப்பு. அதற்குப் பின் இன்னும் சற்றுக் கூடிய ஒலியில் முணுமுணுப்பு என இவ்வகையில் அவர் சொல்வதை எந்த அளவுநோயாளியால் அறிந்துகொள்ளமுடிகிறது. எனக் கணிக்க வேண்டும். முணுமுணுப்புக் குரலை அவரால் கேட்க இயலாவிடின் பேசக்கூடிய வகையி வான குரலில் கூறுவதையேனும் அவரால் கேட்க முடி கின்றதா எனச் சோதிக்க வேண்டும். இல்லையென் றால், மிக உரத்த குரலில் பேசிச் சோதிக்க வேண்டும். எந்த நிலையில் நோயாளியின் கேள்திறன் எல்வை உள்ளது எனக் கணிப்பது இம்முறை. இரு செவிக்கும் தனித்தனியாகக் கணிப்பு நடத்த வேண்டும். இசைக் கவட்டுச்சோதனைகள் (tuning fork tests). குரல்முறைச் சோதனைகளால் வளிக் கடத்துகையை மட்டுமே கணிக்க முடியும். எலும்புக் கடத்துகை யையும் சேர்த்துக் கணிக்க இசைக் கவடுகளைப் பயன்படுத்துதல் நன்மை தரும். இசைக் கவட்டுச் சோதனைகளில் ரின்னி சோதனையென்றும் (Rinnes test), வீபர் சோதனையென்றும் (Weber's test) இரு முறைகளுண்டு. ரின்னி சோதளை, இச்சோதனையில் முதலில் குறையற்ற செவி சோதிக்கப்படும். அதிரும் இசைக் கவடு, முதலில் நோயாளியின் செவிக்கு எதிராகப் கேள் திறனியல் 375 பிடிக்கப்படும். இசைக் கவட்டின் அதிர்வுகள், ஒலிய லைகளை ஏற்படுத்திச் செவியால் உணரப்படுகின்றன. இசைக் கவட்டின் ஒலியலைகள் செவியால் அறியப் படுகின்றனவா எனக் கணித்தபின், அதே செவிமடலின் அதிர் இசைக்கவடு, பின்புறமுள்ள மாஸ்டாய்டு புடைப்பில் (mastoid process) பொருத்தப் படும். மீண்டும் அதிர்வலைகளின் ஒலி கேட்கப்படு கிறதா எனக் கணிக்கப்படும். இதில் முதலாவது வளிக்கடத்துகை எலும்புக் மூலமும், பின்னது கடத்துகை மூலமும் உணரப்படுகின்றன. எந்த ஒலி அதிகமாக உணரப்படுகிறது எனவும் நோயாளியிடம் கேட்டறிய வேண்டும். நடுச்செவியில் குறையிருப்பினும், கடத்துகைக் குறை ஏற்பட்டிருப்பினும் வளிக்கடத்துகை குறைந்து, எலும்புக் கடத்துகையே கேள்திறனைக் கொடுக்கும். எனவே முதல் ஒலியினும், இரண்டாம் ஒலி பெரி தாகக் கேட்கப்படும். நரம்பியக் குறை இருப்பின். ரு ஒலிகளுமே குறைவாகக் கேட்கும். கேள்விக் குறை எதுவுமில்லாத செவியில் இரண்டாம் ஒலியை விட முதலொலி நன்கு உணரப்படுகிறது. குறையற்ற செவியில் சோதனை நடத்தியபின், குறைவுற்ற செவி யிலும் அடுத்துச் சோதனை நிகழ்த்தப்படுகிறது. இச் சோதனையின் மூலம் கடத்துகைக் குறைகள் கண்டறியப்படலாம். வீபர் சோதனை. இதில் இசைக் கவடு அதிர்வுடன் நோயாளியின் நெற்றி மையத்தில் பொருத்தப்படு கிறது. அதிர்வலைகளால் உருவாக்கப்படும் ஒலி, எப் பக்கத்துச் செவியால் அதிகம் உணரப்படுகிறது என்ப தையே கணிக்க வேண்டும். கடத்துகைக் குறையிருப் பின், குறையுள்ள பக்கத்திலே ஒலியுணர்வு பெரிதாக விருக்கும். நரம்பியக் குறையிருப்பின், குறைவற்ற பக்கத்தில் ஒலியுணர்வு பெரிதாகவிருக்கும். கேள் அளப்பு முறையிலும் (audiometric methods) செவி யக்கத்தையும், கேள்திறன் கூர்மையையும் கணக் கிடலாம். சுதா சேஷய்யன் கேள் திறனியல் உணரக் ஒலியைக் காது உணர்கிற திறனே கேள்திறன் (audio. metry) எனப்படும். ஓர் ஒலியின் அதிர்வெண்ணையும், செறிவையும் பொறுத்தே, அந்த ஒலியை கூடிய திறன் அமைகிறது. காதினால் உணரத் தொடங்கும் அளவில் உள்ள ஒலியின் செறிவு கேள் திறன் உணர்தொடக்கம் (threshold of audibility) எனப்படுகிறது. இந்த அளவுக்கு மேற்பட்ட செறிவுகள் கொண்ட எல்லா ஒலிகளையும் காதினால் உணர முடியும். ஆனாலும் ஓர் அளவுக்கு மேல் ஒலிச்செறிவு மிகுதியானால் காதுக்கு வலியும் துன்பமும் ஏற்படும்.