376 கேள் திறனியல்
376 கேள் திறனியல் அளவாகக் இந்த உணர் தொடக்க அளவுகள் அதிர் வெண்ணைப் பொறுத்து மாறும். 3500 Hz என்ற அதிர்வெண்ணில் சதுர மீட்டருக்கு 80,000 நியூட்டன் என்ற சராசரி இருமடியின் மூல அளவில் (R.M.S) அழுத்த வீச்சுக் கொண்ட ஒலியின் செறிவு சிறும உணர் தொடக்க கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இதைவிடக் குறைவான செறிவுள்ள ஒலி யைக் கேட்கிற திறனைப் பெற்றாலும், அதனால் பயன் எதுவும் ஏற்படாது. ஏனெனில் அப்போது காற்றின் மூலக்கூறுகள் தம் வெப்ப ஆற்றலின் காரண மாசு எழுப்பும் ஒலிகளும் காதில் விழத் துன்பம் ஏற் படும். 1000 Hz என்ற அதிர்வெண்ணுள்ள ஒலியில் காது போல காது உணரக்கூடிய சிறுமச் செறிவின் அளவைப் 10 மடங்கு மிகுதியான செறிவு. உணரக்கூடிய பெருமச் செறிவு ஆகும். காதுக்கு ஒரு நியூட்டன்/ சதுர மீட்டர் என்ற சராசரி இருட்டி மூவ ஒலி அழுத்தத்தில் சுமார் 20-20,000 Hz வரை யான அதிர்வெண்ணுள்ள ஒலிகளை உணரும் திறன் ஒலிச் செறிவு மிகுதியாகவோ குறைவாகவோ ஆகும்போது இந்த நெடுக்கம் குறைகிறது. ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த நெடுக்கம் குறை றது. பெருமமான அல்லது மிகக் குறைந்த அதிர் வெண் கொண்டவற்றைத் தவிர, ஏனைய ஒலிகளின் செறிவில் ஏற்படுகிற, உணரக்கூடிய சிறும மாற்றத் திற்கும், தொடக்கச் செறிவுக்கும் இடையில் உள்ள தகவு ஒரு மாறிலி என்று நட்சன் என்பார் கண்டு பிடித்துள்ளார். அதிர்வெண்ணில் ஏற்படும் மாற் றத்தை உணர்வதிலும் இத்தகைய மாறிலியான தகவு உறவு உள்ளது. 20-20.000 Hz என்ற அதிர் வெண் நெடுக்கம் கேள் வரம்பு எனப்படும். இந்த நெடுக்கத்திற்குள் அமைகிற அதிர்வெண்கள் கேள் அதிர்வெண்கள் எனப்படும். தொலைத் தொடர்புக் கருவிகளில் 300-3,400 Hz அதிர்வெண்ணுள்ள பேச்சு ஒலிகளே எளிதில் உணரக்கூடியவை. நெடுக்கம் பேச்சொலி நெடுக்கம் எனப்படுகிறது. ந்த மனிதரின் கேள்திறன் இழப்புக்கும், அதா வது டெசிபெல்களில் உணர்தொடக்கச் செறிவின் அளவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், அதிர்வெண் னுக்கும் இடையில் வரையப்படும் வரைபடம் கேள் திறன் வரைவு எனப்படுகிறது. வவகையான வரை ங்களின் உதவியால் ஒருவரின் செவிட்டுத் தன்மை யின் முழு அளவையும், வெவ்வேறு அதிர்வெண்களில் அவரின் கேள்திறன் இழப்பையும் கண்டுபிடிக்க முடியும். இத்திகைய வரைபடங்களில் நலமான காழின் கேள்திரன் உணர்தொடக்க அளவுகளையும் ஒலி உணர்ச்சியின் தொடச்சு அளவுகளைக் காட்டும். கோடுகளையும் சேர்த்து வரைந்து கொள்வது ஏற் டையது, ஓசையால் ஏற்படுகிற கேள்திறன் இழப் பைக் காட்டும் கோடு, ஓசையால் மனிதருக்கு ஏற் டூம் பாதிப்பை விளக்கும். ஓசையின் பல்வேறு அதிர் பகுப்பாய்வு செய்வதைவிட து வெண்களைப் மேலான பயன் தரும். இத்தகைய கேள்திறன் ஆய்வுகளுக்குத் தேவைப் படுகிற தூய அதிர்வெண் ஒலிகளை, விருப்பமான செறிவுகளில் வெளிப்படுத்துகிற கருலிக்குக் கேள் திறன் அளவி என்று பெயர். அந்த ஒலி ஒரு காதொலியன் (earphone) மூலம் வெளியாகும். செவிட்டுத் தன்மையாலோ, ஓசை மறைப்பதாலோ ஏற்படுகிற கேள்திறன் இழப்பை அளவிட இது உதவும். பொதுவாக இக்கருவிகளில் வால்வு. அல்லது திரிதடையம் (transistor) அமைந்த அலையியற்றிகள் இருக்கும். அவற்றின் அதிர்வெண்ணைக் கேள்திறன் வரம்புக்குள் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். அதிலுள்ள ஓர் அமைப்பின் உதவியால் ஒலியின் செறிவைத் தேவையான அளவுகளில் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதை இயக்கும் குமிழில் டெசிபெல்களில் அளவு குறிக்கப்பட்ட ஒரு வட்ட அளவுகோல் பொருத்தப்பட்டிருக்கும். ஆய்வு செய்யப் படுகிற மனிதர் காதில் விழுகிற ஒலியின் செறிவை உணர்தொடக்க அளவுக்குக் குறைக்கும்போது, அளவு கோல் காட்டுகிற அளவீடு டெசிபெல்களில் கேள்திறன் இழப்புக்குச் சமமாகும். அவரின் கேள்திறன் இழப்பை அளவிடும்போது காதொலி யன், காதின்மேல் ஒட்டி வைக்கப்படும் ஓசை காரண பாக ஏற்படும் ஒலி மறைப்பை அளவிடும்போது காதொவியன் காதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலை வில் வைக்கப்பட்டு, ஓசை முழங்கும்போது காதின் ஒலி உணர்தொடக்கச் செறிவு கண்டு பிடிக்கப்படும். இது முன்காதுப் பகுதியில் ஏற்படுகிற கொளாறுகள் அல்லது அடைப்புகள் காரணமாகவோ செவிப்பறை, காதின் உள் எலும்புகள், நத்தைக் குழல் போன்ற உறுப்புகளில் உள்ள குறைகள் காரணமாகவோ தோன்றுகிற கடத்தல் செவிட்டுத்தன்மையை (COn- ductivity deafness) அளவிட உதவும். நத்தைக்குழல் எலும்பிலிருந்து மூளைக்குச் செல்கிற கேள் நரம்பு களில் குறை ஏற்படுவதால் தோன்றும் செவிட்டுத் தன்மை புலன் உணர்வுச் செவிட்டுத்தன்மை (percep- tive deafness ) எனப்படும். இத்தகைய குறையுள்ளவர் களுக்குக் கேள்திறன் அளவீடுகளை எடுக்கும்போது ஓர் அதிரும் இசைச்சுவையைக் மடலுக்குப் பின்புறமுள்ள மண்டை ஓட்டுப் பகுதியில் அழுத்திப் பரிசோதிக்க வேண்டும். இது எலும்பு வழிக் தல் முறை (hone condvction) எனப்படும். காது கடத் கொள்கையளவில் ஓர் யல்பான மனிதர் 16Hz-16KHz வரை அதிர்வெண்ணுள்ள ஒலிகளைக் கேட்க முடியும். ஒரு மரமேடையில் எறும்பு ஊர்கிற போது உண்டாகிற மங்கிய உரப்புள்ள ஒலியைக் கூட அவரால் உணர முடியும் . ஒரு 50 குதிரைத் திறன் கொண்ட எந்திரச் சங்கிலிருந்து வெளிப் படுகிற, ஏறத்தாழ 140 டெசிபெல் உரப்பு உள்ள