பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேனலை 377

கோலை 377 ஒலியின் அழுத்தத்தையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியும். மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளை உண்டாக்கக் கூடிய ஒரு கருவியை ஓர் லட்சியக் கேள்திறன் அளவி எனக் கூறலாம். ஆனால் நோய் மூல ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிற கேள்திறன் அளவிகள் இயல் பான மனிதர்களிலும், பல அளவுகளில் செவிட்டுத் தன்மை கொண்டவர்களிலும் உள்ள கேள்திறன் குறைபாடுகளைக் கண்டறிய உதவுகின்றன. இக் கருவிகள் 125 Hz - 12K Hz வரையான அதிர்வெண் களும் 10 முதல் + 100 டெசிபெல் வரை உரப்பு களும் கொண்ட ஒலிகளை உண்டாக்குகின்றன. கே என். ராமச்சந்திரன் கேள் பொறி காது கேளாதவர்கள் பயன்படுத்தும் ஒரு மின் னணுவியல் சுருவி கேள் பொறி(hearing aid) ஆகும். இப்பொறியில் காது கேளாதவர்கள் பொருத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறு ஒலி பெருக்கியும், ஒலியை வாங்கி- யின் அலைகளாக மாற்றி மிகைப் படுத்தும் மிகைப்பியும் உள்ளன கேட்பலை மிகைப் படுத்தி சிறு ஒலி பெருக்கிக்கு வேண்டிய மின் திறனைக் கொடுப்பதால், காது கேளாதவர் ஒலி பெருக்கியைக் காதில் பொருத்திக் கொள்ளும்பொழுது நன்றாகக் கேட்க முடியும். இக்கருவி ஒரு சிறு மின் கலத்தின் உதவியால் மின்னாற்றல் பெற்று இயங்கு கிறது. மின்கலம், கேட்பலை மிகைப்பி, ஒலிவாங்கி (microphone) ஆகியவற்றைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு சிறு ஒலி பெருக்கியை மட்டும் காதில் பொருத்தி, ஒலி பெருக்கி.யெச் சிறு மின் கடத்தி மூலமாகக் கேட்பலை மிகைப்பியுடன் இணைத்து விடலாம். காது அரை குறையாகக் கேட்பவர்க்கு இது மிகவும் பயனுள்ள கருவியாகும். முழுதும் காது கேளாதவர்க்கு இது பயன்படாது. மின்னணு அவியல் திண்ம நிலைக் கருவிகள் மிகச் சிறியனவாகக் கிடைப் பதாலும், ஒருங்கிணைந்த மின்னணுவியல் சுற்று களால் (integrated circuits) ஆக்கப்பட்டுள்ளமை யாலும். கேட்பலை மிகைப்பிகள் மிகச்சிறிய வடிவிலும், குறைந்த மின்னாற்றலிலும் இயங்கும். எனவே கேள்பொறிகள் மிகச் சிறியன வாகக் கிடைக்கின்றன. கேளலை அளவு க.அர.பழனிச்சாமி செவியால் உணரக்கூடிய ஒலி அலைகள் கேளலைகள் (audio) எனப்படும். அதிர்வுகளால் ஒலி அலைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்ட அனைத்து ஒலி அலைகளையும் செவியால் உணரமுடியாது. அதிர்வெண் 1-19 Hz வரையுள்ள ஒலி அலைகளைக் கீழ் ஒலி அலைகள் (infrasonic waves) என்றும் 20- 20.000Hz வரையுள்ள ஒலி அலைகளைக் கேளலை கள் என்றும் 20,000 Hz மேலுள்ள ஒலி அலைகளை மேல் ஒலி அலைகள் (ultrasonic waves) என்றும் ஒலி அலைகளை மூன்று நெடுக்கங்களாகப் பிரிப்பர். 0°C (32°F அல்லது 273 K) வெப்பநிலையில் காற்று ஊடகத்தில் ஒலி அலைகளின் திசைவேகம் 330 மீட்டர் நொடி. இதன் அளவு அழுத்தத்தைப் பொறுத்து மாறாது; வெப்பநிலையைப் பொறுத்து மாறும். ஒலியின் திசை வேகத்தை v=n, என்னும் சமன்பாட்டின் மூலம் அறியலாம். II என்பது ஒலியின் அதிர்வெண்ணையும், 1 என்பது ஒலி அலையின் அலைநீளத்தையும் குறிக்கும். கேளலைகள் அலை நீளம் 16.5-19.0165 மீ இருக்கும். கீழ் ஒலியின் அலை நீளம் 16.5 மீட்டருக்கு மிகுதியாகவும் மேல் ஒலியின் அவை நீளம் 0.0165 மீட்டருக்குக் குறைவாகவும் இருக்கும். செவியால் குறைபாடில்லாத செவியுடையவர் 20-20.000. Hz வரையுள்ள ஒலி அலைகளை உணர முடியும், கீழ் அலைகளையும் மேல் ஒலி அலைகலையும் உணரமுடியாது. 20-20.000 Hz வரை யுள்ள ஒலி அலை நெடுக்கத்தைச் செவியுணர் வரம்பு அல்லது கேளலை வரம்பு என்பர். இந்நெடுக்கத்தின் அளவு செவியின் குறைபாட்டைர் பொறுத்து மனிதனுக்கு மனிதன் மாறுபடும். மேலும் கேளலை வரம்பின் அளவு மனிதனின் வயதிற்கேற்ப மாறுபடும். தன்மையுடையது. 20 வயதுடையவரின் கேளலை யின் மேல்வரம்பு 20,000 Hz ஆகவும் 35வயதுடை யவரின் கேளலையின் மேல்வரம்பு 16,000Hz ஆகவும் 47 வயதுடையவரின் மேல் வரம்பு | 13,000 Hz ஆகவும் இருக்கும் எனக் கண்டறியப்பட்டது. பது மிகுதியாக, கேளலையின் மேல்வரம்பு குறைந்து கொண்டே வரும். இசை அலைகளின் அதிர் வெண் 40-4000 Hz வரையுள்ளது. வய வ வரை யால் சதுரமீட்டருக்கு 10 வாட் முதல் 1 வாட் ஒளிச்செறிவுள்ள (sound intensity ) உணரக்கூடிய ஒலி அலைகளைச் செவியால் உணரமுடியும். செவி ஒலி அலையின் சிறும அளவு செறிவு சதுரமீட்டருக்கு 10~13 வாட் அளவாகும். குறைந்த செறிவுடைய ஒலி அலைகளுக்குச் செவியின் உணர்திறன் மிகுதியாயுள்ளது. ଭୂ அலையின் செறிவு மாற்றத்தைவிட அதிர்வெண் மாற்றத்திற்குச் செவியின் உணர்திறன் மிகுதி. கேளலைகள் பரவும் திசைக்குச் செங்குத்தாக ஒரு சதுரமீட்டர் பரப்பு வழியே செல்லும் ஒலி அலை ஆற்றலின் அளவு ஒலியின் செறிவு எனப்படும். ஒலி