பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேளா ஒலிகள்‌ 379

முடியும். என்பர். இதற்குக் கேள்வரம்பு (audibie limit) எனப்பெயர். 20,000 Hzக்கு மேல் அதிர்வெண்ணுள்ள ஒ ஒலிகளைக் கேளா ஒலி அல்லது மீயொலி வெளவால், கடல் பன்றி,நாய், பூனை முதலிய விலங்குகளால் மிக உயர் சுருதியுள்ள ஒலிகளையும் கேட்க முடியும். மேலை நாடுகளில் நாய்களை அழைப்பதற்கு நாய்ச்சீழ்க்கை (dog's whistle) என்னும் ஒலியைப் பயன்படுத்துகின்றனர். அந்த ஊதலின் ஒலி ஆடுமாடுகளுக்குக் கேட்பதில்லை; நாய்களுக்கு மட்டுமே கேட்கும். இயற்கையில் வௌவால், கடல் பன்றி போன்ற விலங்குகளும், கொசு போன்ற பூச்சிகளும் கேளா ஒலிகளை உண்டாக்குவதுடன், பயன்படுத்தவும் செய்கின்றன. நவீன அறிவியல் இத்தகைய உயர் சுருதி ஒலி களுக்குப் பற்பல பயன்களைக் கண்டுபிடித் துள்ளது. நொடிக்கு 8-10 வட்சம் ஹெர்ட்சு களுக்கு மேல் அதிர்வெண்ணுள்ள ஒலிகள் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன. piezo-electric அழுத்தமின் விளைவு (piezo - electric effect). குவார்ட்ஸ் போன்ற படிகங்களை ஒரு குறிப்பிட்ட திசையில் அழுத்தினாலோ இழுத்தாலோ அதற்குச் செங்குத்துத் திசையில் மின்னூட்டம் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு அழுத்த மின் விளைவு என்று பெயர். இதைப்போன்று படிகத்தில் ஒரு தளத்தில் திசை மாறு மின்னழுத்தங்களைச் செலுத்தினால் அதற்குச் செங்கத்துத் தலத்தில் படிகம் நீளவும் சுருங்கவும் செய்யும். ஓர் அலையியற்றியின் மூலம் (oscillator) மீ உயர்திசை மாறு மின்னழுத்தத்தைத் தோற்றுவிக்க முடியும். இவற்றைப் படிகங்களின் மேல் செலுத்தும் போது படிசுங்கள் பல முறை அதிர்ந்து முனைகளி லிருந்து கேளா ஒலி அதிர்வுகள் வெளிப்படுகின்றன. மின் அச்சுத் திசையில் மாறு மின்னழுத்தத்தைச் செலுத்தினால் எந்திரவியல் அச்சு என்ற திசையில் படிகத்தின் நீட்சிகளும் சுருக்கங்களும் ஏற்பட்டுப் படிகம் அதிர்வடைகிறது. அலைவு மின்னழுத்தத்தின் அதிர்வெண்ணும் படிகத்தின் இயலதிர்வெண்ணும் சமமாகும்போது ஒத்ததிர்வு (resonance) ஏற்பட்டுப் படிகம் பெரும வீச்சுடன் அதிர்வடைகிறது. இவ்வாறு உயர் அதிர்வெண் அலைவுகளை உண்டாக்கலாம். சில மில்லிமீட்டர் தடிமனும் 2 அல்லது 3 சதுர சென்டிமீட்டர் பரப்புமுள்ள ஒரு குவார்ட்ஸ் படிகத்தை எடுத்து அதன் ஒரு முகம் ஒளி அச்சுக்கு (optic axis) இணையாகவும் ஏனைய முகங்கள் மின் அச்சுக்கும் எந்திரவியல் அச்சுக்கும் இணையாகவும் இருக்கும்படியாகச் செதுக்க வேண்டும். அது இரண்டு மெலிந்த உலோகத் தகடுகளுக் க்கிடையில் வைக்கப் படுகிறது. ஒரு தகடு ஒரு டிரையோடின் கிரிட்டுடனும் (grid) ஏனையது நேர்மின் முனைத் தட்டுடனும் இணைக்கப்படும். நேர்மின் முனைத் தட்டுச் சுற்றில் F L கேளா ஒலிகள் II. ] படம் 1. படிக அலைவின்சுற்று - வெற்றிடக்குழல் படிகம் R R 379 படம் 2. படிக அலைவின்சுற்று திரிதடையம் ஒரு L C தொட்டிச் சுற்று உள்ளது. அது உயர் மின்னழுத்தம் வழங்கு முனையின் நேர்முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். உயர் அதிர்வெண் மின்னோட்டங்கள் உயர் மின்னழுத்தம் வழங்கு முனை வழியாகச் செல்லாவண்ணம் தடுக்க அதற்கு ணையாக ஒரு மின்தேக்கி (C1) இணைக்சுப்படும். வ்வாறு C என்னும் மின்தேக்கியைச் சரிப்படுத்தி L-C இணைப்பின் அதிர்வெண், படிகத்தின் இயலதிர் வெண்ணுக்குச் சமமாகுமாறு செய்யப்படுகிறது. உண்டாக்கப்படும் மாறு மின்னழுத்தம். உலோகத் தகடுகள் மூலம் செலுத்தப்படும்போது அதே அதிர்வெண்ணுடன் படிகம் அதிர்வடைந்து கேளா ஒலிகளைத் தோற்று விக்கும். படிகத்தின் மேல்