பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குவாண்டம்‌ ஒளியியல்‌

20 குவாண்டம் ஒளியியல் முழு எண்களாகும். இதுவே முதன்மைக் குவாண்டம் எண். இது ஆற்றலைக் குறிப்பிடுவதோடு எலெக்ட்ரான் அணுக்கருவைச்சுற்றி எந்தெந்தப் பாதைகளில் வலம் வரக்கூடும் என்பதையும் அறுதியிடு கிறது. மேற்கூறியது. அணுக்கருவைச் சுற்றிவரும் எலெக்ட்ரான் போன்ற நிலையில் இருக்கும் எந்த வொரு மின்துகள்களுக்கும் பொருந்தும். அலைச் சமன்பாடு எலெக்ட்ரான் ஆற்றலுக்கு மட்டும் மதிப்பு களைத் தருவதில்லை. எலெக்ட்ரான் பெறக்கூடிய உந்தங்களின் மதிப்புகளையும் தரும். உந்தத்தின் மதிப்பு ஆகும். இங்கே, L என்பது கோண உந்தத்தின் குவாண்டம் எண் ஆகும். இதன் மதிப்பு 0, 2, 3, (n-1) ஆகும்.மேலும் எலெக்ட்ரான் ஓர் உள்ளார்ந்த தற்சுழற்சிக் கோண உந்தத்தையும் பெற்றிருக்கும். இதன் மதிப்பு S=1 ஆகும். Lh அணுவில் கட்டுண்ட எலெக்ட்ரான் மட்டுமன்றி எந்தவொரு மின்துகளுக்கும் உள்ளார்ந்த தற்சுழற்சிக் கோண உந்தமுண்டு. இது ஆகும்.இங்குS என்பது Sh 2TT தற்சுழற்சிக் கோண உந்த குவாண்டம் எண். இதன் மதிப்பு S= 0.41.3/2... ஆகும். கோண உந்தம் குவாண்டப்படுத்தப்பட்ட திசையின் அளவானதால் இதற்கு ஒரு திசையையும் சேர்த்ததுச் சொல்வது உண்டு. புறத்தேயிருந்து செயல்படுத்தும் ஒரு காந்தம் புலத்தின் திசையே ஒப்புத் திசையாகக் கொள்ளப் படும். இதை Z அச்சு என்றால் இந்த அச்சின் மீது L இன் கூறுகளைக் காண வேண்டும். L இன் எந்தெந்தத் திசைகளுக்கு Z அச்சின் மீதான L இன் கூறு, முழு எண் மதிப்புகளாக உள்ளனவோ அத் திசைகளே L இருக்கக்கூடிய திசைகளாம். இதைக் குறிக்கப் பயன்படும் குவாண்டம் எண் காந்தச் கூற்றுப் பாதைக் கோண உந்தக் குவாண்டம் எண் (M) எனப்படும். ஒரு குறிப்பிட்ட L மதிப்புக்கு ML என்பது - L, L+1, -1, 0, + 1....... (L-1), L ஆக இருக்கும். இவ்வாறே S இன் Z அச்சுக் கூறுகள் ms என்பன காந்தத் தற்சுழற்சி குவாண்டம் எண் எனப்படும், ஒரு குறிப்பிட்ட $ மதிப்புக்கு இருக்கக்கூடிய m மதிப்புகளாவன -S, -$41, 0 (S-1), S., இவ்விரு குவாண்டம் எண்களும் ஒரு குறிப்பிட்ட i,L,S மதிப்புகளுடைய அமைப்பின் ஆற்றல் காந்தப் புலத்தில் எவ்வாறு மாறும் என்பதை அறிய உதவும். ஒன்றுக்கு மேற்பட்ட எலெக்ட்ரான் ஓர் அமைப் பில் இருக்குமானால் அப்போது அதன் சமச்சீரைக் குறிக்க மொத்தக்கோண உந்தக்குவாண்ட jஎன்ற எண்ணையும் மொத்தக்காத்தக் குவாண்ட M என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். எல்லா எலெக்ட் ரான்களின் கோண உந்தக்குவாண்டம் எண்களின் திசையன் கூடுதல் J ஆகும்: அவ்வாறே எல்லா ms. ML ஆகியவற்றின் திசையன் கூடுதல் M ஆகும். ச. சம்பத் குவாண்டம் எண் (ஒத்த சுழற்சி) காண்க: குவாண்டம் எண்கள் குவாண்டம் எண் (காந்த) காண்க: குவாண்டம் வேதியியல் குவாண்டம் எண் (கோண உந்த) காண்க: குவாண்டம் எண்கள் குவாண்டம் எண் (சுழற்சி) காண்க: குவாண்டம் எண்கள் குவாண்டம் எண் (முதன்மையான) காண்க: குவாண்டம் எண்கள் குவாண்டம் ஒளியியல் பொருள்களின் மிகச்சிறிய பகுதியான அணுவுடன் ஒளி மோதும்போது ஏற்படும் நிகழ்வுகளை ஆராய்ந்து விளக்கம் பகுதி குவாண்டம் ஒளியியல் எனப்படும். குவாண்டம் கொள்கையின்படி ஒளியானது சிறுசிறு ஆற்றல் முடிச்சுகளாக ஆற்றலைப்பெற்றுள்ளது. ஒளி உமிழப்படும் போதும், ஓரிடத்திலிருந்து பிறி தோர் இடத்திற்குச் செல்லும்போதும் அதனுடைய ஆற்றல், ஆற்றல் முடிச்சுகளாக வெளியிடப்படுகிறது. இந்த ஆற்றல் முடிச்சுகள் எனப்படும். குவாண்டா (quanta)