கேனரிப் ப்றவைகள் 483
விக்கப்பட்டன. இவ்வினப்பெருக்கத்தின் விளை வாகப் பல வண்ணங்களில் பறவைகள் உருவாக்கப் பட்டன. இப்பறவைகள் சிறிய கொண்டையுடை யலை. பச்சை நிறமுடைய சிறு குருவிகளுடனும், மேலும் வின்னெட், சிஸ்கின். சிட்ரில் குருவி, புல் குருவி ஆகியவற்றுடனும் கலப்பினப் பெருக்கம் செய்யப்பட்டு அவற்றின் வழி வந்த இவை வீடுகளில் வளர்க்கப்பட்டுப் பழக்கப்படுகின்றன. ரோலர் கேனரி என்னும் பறவை, வீடுகளில் அவற்றின் குரலுக்காக மட்டும் வளர்க்கப்படுகிறது. இத்தகைய வீட்டுப் பறவைகள் 1.5-2 கி.கி. எடையுடையவை. (பாசர் எயிலிட்ட பாசர் டொமஸ்டிகஸ் உறிபானியோலென்ஸ் மஸ்கஸ் பாசம் பழக்கவழக்கங்கள். கேனரிப்பறவைகள் அடர்ந்த புதர்ச் செடிகளிலும் மரங்களிலும் வாழ்கின்றன. இ முதயை பழத்தோட்டங்களில் தங்கும் இயல்புடையவை. மக்களுக்கு நன்கு அறி முகமான பாடும் பறவைகளாக இவை கருதப் படுகின்றன. இவற்றின் பாட்டைக் கொண்டே இவை எங்குள்ளன என்பதை அறிய முடியும். காடு களில் வாழும் இப்பறவை இனத்தின் பாடல் வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளின் பாட்டைப் போன்றே ருந்தாலும் சில நேரங்களில் குரல் சற்றுக் கடுமை யாகவும் இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் கேனரிப் பறவைகள் சில நேரங்களில் மனிதனுடைய பேச்சை யும், பிற பறவைகளின் பாட்டையும் போலியாக வெளிப்படுத்தும். மேலும், பறவை வளர்ப்போர் கேனரிப்பறவைகளை ஆசிரியர்கள் போலப் பயன் படுத்தி இவற்றின் மூலம் பிற பறவைகளைப் பழக்கு கின்றனர். கேனரிப் பறவைகள் 383 உணவு. கேனரிப் பறவைகள் பழம், செடிகளின் லை, சிறு விதை ஆகியவற்றை உணவாக உட் காள்கின்றன. இருப்பிடம். காட்டில் வாழ்கின்ற இவை மரங் களின் உயர்ந்த கிளைகளில் கூடுகட்டுகின்றன. பெண் பறவையே கூடுகட்டும் வேலை செய்கிறது. பெண் பறவை கூடுகட்டும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூட்டிற்கான பொருள்களைச் சேகரித்துக் கூடுகட்டு கிறது. ஆண் பறவை இப்பணியில் ஓரளவு பெண் பறவைக்கு உதவி செய்யும். இவற்றின் கூடு வட்ட மான தட்டு வடிவில் இருக்கும். இக்கூடு புல், வேர், சிறுகுச்சி, இலை ஆகியவற்றால் கட்டப்படுகிறது. மேலும் கூட்டின் அடிப்பரப்பு இறகு, முடி போன்ற வற்றால் மென்மையாக்கப்படுகிறது. இனப்பெருக்கம். வீடு கட்டும் பணி முட்டை யிடுவதற்கு நான்கு நாளுக்கு முன்னதாக முனைப் புடன் நடைபெறும். ஒவ்வொரு பெண் பறவையும் 1-6 முட்டைகள் வரை இடும். ஒரு பெண் பறவை சராசரியாக மூன்று முட்டைகள் இடும். ஒரு முட்டை யிடுவதற்கும் அடுத்த முட்டையிடுதற்கும் இடையில் 24 மணி நேரம் இடைவெளியுள்ளது. முட்டை மங்கிய நீல நிறம் உடையது. முட்டைகள் பொரிந்து 14 நாளில் குஞ்சுகள் வெளி வருகின்றன. புதிதாக வெளிவந்த சிறு குஞ்சுகள் 7 நாள் வரை கண் திறப்பதில்லை. குஞ்சுகளின் வயிற்றுப் பகுதி தொடக் கத்தில் பெரியதாக இருக்கும். ஆனால் சேமிக்கப் பட்ட கருவுணவு (yolk) வளரும் குஞ்சுகளால் பயன் படுத்தப்படுவதால் வயிறு பின்னர் சிறியதாக மாறி விடும். இளம் பறவைகள் 3 வாரங்களில் கூட்டை விட்டு வெளி வரத் தொடங்கும். சிறகுகள் 100-120 நாளில் முழு வளர்ச்சி அடைகின்றன. 36 நாளில் அவை தனித்து வாழ்கின்றன. கேளரிப்பறவையின் வரலாறு. கேளரிப் பறவைகள் வளர்க்கப்படுவதற்காக ஐரோப்பியாவிற்கு எடுத்து வரப்பட்டன என்பதைத் தெளிவாகக் கூற முடிய வில்லை. ஆனால் கி.பி.1555- 1588க்கு உட்பட்ட காலக் கட்டத்தில் இவை ஐரோப்பாவிற்குச் கொண்டு வரப்பட்டிருக்கலாம். இங்கிலாந்தில் முதன் முதலாக 1576 இல் இப்பறவைகளுக்குக் கேனரிப் பறவை என்று பெயர் வைக்கப்பட்டது. ஏனெனில் இவை அத்தீவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. இவ்வாறு இவை ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப் படவில்லை என்றால், இப்பறவையினம் அழிந்து போயிருக்கக் கூடும். முதன் முதலாக ஐரோப்பாவில் ஜெர்மன் அரசு மாளிகையில்தான் வை வளர்க்கப் பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டன என்றொரு குறிப்பும் உண்டு. ஏ.நடராஜன் நூலோதி, 0.L. Jr. Austin. Birds of the world, Handlyn Publishing Group Ltd., New York, 1970.