கைரேட்டர் 395
கைரேட்டர் 395 மெனாஸ்பாய்டுகளுடன் (menaspoids) சேர்ந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மீன் களும் ரம்ப மீன்களைப் போலவே தட்டையான தலையையும், தோல் தகடுகளையும், முதுகுத் துடுப்பு களையும் பெற்றிருந்தன. ஆனால் ஜுராசியக் காலத் தொடக்கத்தில் மெனாஸ்பாய்டுகளை மைரா காந்த்தாய்டுகள் இடமாற்றம் செய்து வளரத் தொடங்கின. இந்த மைராகாந்த்தாய்டுகளில் சுபாலம் சிறிதாக்கப்பட்டிருந்தது. முதுகுத் துடுப்புகளின் ஓரத்தில் முள்கள் காணப்பட்டன. ரம்ப மீன்களைப் போன்றுள்ளது. க்கால தற்கால ரம்ப மீன்கள் ஜுராசியக் காலத்தின் இடையில் தோன்றியவையாகும். பக்கவாட்டில் அழுத் தப்பட்ட தலை, தலை நீட்சி (rostrum) மேலும் எத்மாய்டல் வாய்க்கால் (ethmoidal canal) போன்ற வற்றைப் பெற்றுக் காணப்படுகின்றன. தோல் தகடுகள் (dermal plates) தலையில் மறைந்து முதுகுத் துடுப்புகள் முள்களுடனும் காணப்படுகின்றன. இடுப் புத் துடுப்புகள் பெரியனவாகவும் வால், துடுப்புகள் கூராகவும் ஈட்டி போன்றும் காணப்படும். உடல் முழுதும் தகட்டுச் செதில்களால் (placoid) மூடப் பட்டிருக்கும். இது ஒரு பால் உயிரினம். இப்போதுள்ள ரம்ப மீன்கள் மூன்று குடும்பங்க ளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கைமேரிடே (chimaeridae), ரைனோகைமரிடே (rhinochimaeridae), காலோரின் கிடே (callorhinchidae) ஆகும். இதில் மூன்றாம் வகையை ஏனைய இரண்டிலிருந்தும் எளி தாகத் தலை நீட்சி அமைப்பால் பிரித்தறியலாம். இது வரையில் ரம்ப மீன்களில் 28 வகை கண்டறியப் பட்டுள்ளன. பெரும்பாலானவை மெல்லுடலிகள், ஓடுடைக் கணுக்காலிகள், சிறிய மீன்கள் ண்டு வாழ்கின்றன. கையெழுத்துப் படிமம் இவற்றை அ.சிவானந்தம் நகல் ஒருவருடைய கையெழுத்தை அப்படியே எடுத்துப் பயன்படுத்துவது கையெழுத்துப் படிமம் (facsimile) எனப்படும். கையெழுத்துப் படியைத் தந்தி மூலமாக அனுப்பும் முறைக்குக் கையெழுத்துப் படிமத் தந்தி எனப்பெயர். இவ்வகையான தந்தி மூலமாகப் படங்களையும், அச்சிடப்பட்ட பக்கங் களையும், கையினால் எழுதப்பட்ட பக்கங்களையும் தொலை இடங்களுக்கு அனுப்பலாம். உள்ளது உள்ளவாறே அச்சிடவும் பயன்படுத்தலாம். பொது வாக, கையெழுத்துப் படிமம் எனப்படுவது கையால் எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்டவற்றை உள்ள வாறு நகல் எடுத்து, பல நகல்கள் பெறப் பயன்படும் ஒரு முறையாகும். கையெழுத்துப் படிமங்கள் அலுவலகங்களில் பெரிதும் பயன்படுகின்றன. க.அர. பழனிச்சாமி கைரேட்டர் து ஒரு நேர்போக்குள்ள, அசையா நிலையுள்ள இரண்டு இரட்டை முனைகள் கொண்ட மின் சுற்று ஆகும். அதனூடாக மின்னோட்டம் கடத்தப்படும் போது ஒரு திசைக்கு உள்ளதைவிட எதிர்த்திசைக்கு அரை அலை நீளம் அதிகமாக அமையும்படி அதன் மின்னோட்டம் பாயும்போது மட்டும் குறிப்பலை யின் முனைப் பண்பைத் (polarity) தலைகீழாக ஆக்கிவிடுகிறது. இத்தகைய மின்சுற்றில் இரண்டு உள்ளிடு முனைகளும் இரண்டு வெளியிடு முனை களும் அமைந்திருக்கும். இக்கருவி தலைகீழாக்சல் தேற்றத்தை (Theorem of reciprocity) மீறுகிறது. எனவே கைரேட்டர் (gyrator) ஒரு புதுமையான கருவி ஆகும். 1950 ஆம் ஆண்டின் தொடக்க காலம் வரை ருவாக்கப்பட்ட எல்லா நேர்போக்குள்ள, அசையா நிலையுள்ள மின்னோட்ட வலையமைப்புகளும் தலை கீழாக்கல் தேற்றத்திற்குக் கீழ்ப்படியுமாறு இருந்தன. இன்று தலைகீழாக்கல் தேற்றத்திற்குக் கீழ்ப்படியாத பல் வகையான மின்னோட்ட வலையமைப்புகள் நுண்ணலை அதிர்வெண்களைப் பயன்படுத்துகிற கருவிகளில் பரவலாகப் பயன்படுகின்றன. குறிப் பலைப் பாய்லின் திசையைக் கட்டுப்படுத்தவும், விலக்கி வைக்கவும் இத்தகைய கருவிகள் உதவு கின்றன. இவற்றில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப் படுவது சுழற்றி எனப்படுகிற வலையமைப்பு ஆகும். இது மூன்று இரட்டை முனைகள் கொண்ட, தலை கீழாகாத வலையமைப்பு, அலையின் பரப்பையும் அலை வாங்கியையும் ஒரே உணர்சட்டத்தில் இணைக்க உதவுகிறது. குறுக்கீடு சிறும அளவி விருக்கும் வகையிலும், பரப்பப்படுகிற அல்லது கப்படுகிற குறிப்பலைகளின் திறனில் சிறிது கூட இழப்பு ஏற்படாத வகையிலும் இந்த ணைப்பைச் செய்ய முடியும். தலைகீழாகுந்தன்மை. தேற்றத்தைப் பல ஏற் தலைகீழாகுந்தன்மைத் வடிவங்களில் கூறலாம். இல் காட்டப் ரட்டை முனை ஆயினும் குறிப்பாக, படம் பட்டுள்ளதைப் போன்ற கொண்ட நுண்ணலை வலையமைப்புக்குப் பொருத்த மான வடிவத்தில் கூறப்படுவது எளிமையாக இருக்கும். . இங்கு d என்பது ஒரே திசையில் வலையமைப்பி லிருந்து விடுபட்டுச் செல்கிற அலையைக் குறிப்பீடு