பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 கைலோபோடா

402 கைலோபோடா இணைக் காலகளிரண்டும் கூர்மையான முள்கள் போல அமைந்துள்ளன. தலைப் பகுதியின் கீழ்ப் பக்கத்தில் காணப்படும் இந்த அமைப்புகளுக்குத் தாடைக் கால்கள் அல்லது நச்சுத் தாடைகள் அல்லது நச்சுக் கூர்நகங்கள் என்று பெயர். இந்நச்சுத் தாடைகளின் அகலமான அடிப்பகுதிகள் இணைந் துள்ளதால் இவை கீழுதடாகச் செயல்படுகின்றன. இவற்றின் அகலமான அடிப்பகுதியில் நச்சுச் சுரப்பிகள் உள்ளன. நச்சுத் தாடைகள் பற்றுறுப்பாகவும் செயல்படுகின்றன. கைலோபோடாவில் உள்ளடங்கும் உயிரிகள் அனைத்தும் ஊனு ண்ணிகளாகும். கைலோபோடாக்களின் உணவுப் பாதையை, ஏனைய கணுக்காலிகளின் உணவுப்பாதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது பூச்சிகளின் உணவுப் பாதையைப் போலக் காணப்படுகிறது. உணவுப் பாதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கக் கூடிய ஒரு நீண்ட குழாயாகும். அவை முன்குடல், நடுக்குடல், பின்குடல் ஆகும். ஓர் இணை உமிழ்நீர்ச் சுரப்பியும், ஓர் இணை மால்பிஜியன் நுண்குழாயும் சில இனங் களில் ஓர் ணை முட்டுக் குழாயும் உணவுப் பாதை யுடன் ணைந்துள்ளன. கைலோபோடாக்களின் சுவாசக் குழாய்கள் பூச்சிகளின் சுவாசக் குழாய்களைப் போன்றவையே. இக்குழாய்கள் கிளையாகப் பிரிபடாமலோ பிரிந்தோ காணப்படுகின்றன. கிளைகளாகப் பிரிந்துள்ளபோது அக்கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டோ பின்னிக் கொள்ளாமலோ உள்ளன. சுவாசத் துளை கள் உடலின் மருங்குத் தகடுகளில் காணப்படுகின்றன. கைலோபோடாக்களின் இரத்தத்தில் பிளாஸ்மா என்னும் நீர்மப் பகுதியும், அதில் மிதந்து கொண்டி ருக்கும் இரத்தச் செல்களும் காணப்படுகின்றன. இனப்பெருக்கப் புழைகள் பொதுவாக இறுதிக் கண்டத்திற்கு முன் கண்டத்தில் காணப்படுகின்றன. பிற விலங்குகளைத் தாக்கும் உறுப்புகள், இவ் வகை உறுப்புகளும், அமைப்புகளும் சிறு விலங்கு களைக் கொல்லவும், செயலிழக்கச் செய்யவும் உதவு கின்றன. நச்சுச் சுரப்பிகளுடன் இணைந்துள்ள அமைப்புகள் நச்சுக் கூர்நகங்களாகவும், நச்சுப் பற் களாகவும் உள்ளன. எல்லா கைலோபோடாக்களிலும் முதல் இணைக் கால்கள் நச்சுக் கூர் நகங்கள் அல்லது நச்சுத் தாடைகளாக மாறியுள்ளன. இத்தாடைகளின் அமைப்புப் பொதுவாக எல்லாக் கைலோபோடாக் களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஜியோபிலிமார்ஃ பாக்களின் நச்சுச் சுரப்பிகள் 12-18 உடற்கண்டம் வரை பின்பக்கம் நீண்டுள்ளன.பிற கைலோபோடாக் களில் இணையான சிறிய வடிவமுள்ள நச்சுச் சுரப்பி கள் நச்சுக் கூர்நகங்களில் அமைந்துள்ளன. நச்சுச் சுரப்பியின் நடுவில் உள்ள தடித்த கைட்டினச் சுவருடைய நச்சுக் குழாய் கூர் நகத்தின் நுனியிலுள்ள நச்சுப் புழையில் முடிவடைகிறது. உணவாகப் பயன்படும் ஏனைய சிறு கணுக்காலி களைக் கொல்லும் ஆற்றல் பூரான்களின் நச்சுப் பொருள்களுக்கு உண்டு. சில சிறிய முதுகெலும்பிகள் கூட இந்நச்சுப் பொருளால் மடிந்து போகின்றன. ஸ்கோலாபெண்ட்ரா என்னும் பெரிய பூரான் சிறு பல்லிகளை அவற்றின் கழுத்துப் பகுதியில் கடித்து விரைவில் கொன்று விடுகிறது. சிறு பூரான்களின் நச்சு வீரியம் குறைவானது. தன் எதிரிகளுக்கு ஊறுவிளைவிக்கப் பயன்படு பவை தற்காப்பு உறுப்புகளாகும். கிரிப்டாஸ் என்னும் பூரானின் இறுதி இணைக் கால்களின் டிபியா, டார்சஸ் என்னும் இரு கணுக்களின் உள் விளிம்பில் பல பற்களுள்ளன. இவ்விரு சுணுக்களும் சுத்தியைப் போல ஒன்றின் மேலொன்றாக மடக்கப்படுகின்றன. இவற்றின் உதவியால் பூரான் சிறு பூச்சிகளைப் பற்றி பிடிக்கிறது. இந்த அமைப்பு இரையைப் பிடிக்கவும் தற்காத்துக் கொள்ளவும் உதவுகின்றது. ஸ்கோலோபெண்ட்ரா மார்சிடன்ஸ் என்னும் பூரானின் நச்சுப் பொருள் காடித் தன்மை யுடையது. ஃபார்மிக் அமிலம் போன்ற பல நொதிகள் இந்தச்சுப் பொருளில் உள்ளன. ஒளிரும் தன்மை. ஒரிக்ஸ் பார்பாரிக்கா என்னும் பூரானின் உடலின் கீழ்ப்பக்கம் முழுமையும் இருளில் ஒளிவிடுகிறது. சாதாரண அழுத்த உணர்வு கள் ஒளிர்தலைத் தூண்டு விடுகின்றன. விடுகின்றன. அழுத்த உணர்வு காரணமாகத் தோன்றும் ஒளிர்தல் உடலின் கீழ்ப்பக்கம் முழுமையுமோ தூண்டப்பட்ட பகுதியில் மட்டுமோ வட்டமாகத் தோன்றுகிறது. ஒளிர்தல் வயிற்றுப்புறத் தகடுகளிலும் மேல் தோலின் முன், பின் தகடுகளிலும் காணப்படுகிறது. ஓர் உருப் பெருக்கிக் கண்ணாடி உதவியால் உதவியால் இப்பகுதிகளைக் கூர்ந்து பார்த்தால் அங்கு நுண்ணிய உள்தோல் துளைகள் இருப்பது தெரியும். பூரானைத் தொட்டுத் தூண்டினால் இத்துளைகளிலிருந்து ஒரு தனி மண முடைய. பிசுபிசுப்பான மஞ்சள் நிறமுடைய பொருள் வெளிவருகிறது. காடித் தன்மையுடைய இப் பொருள் ஆல்கஹாலில் கரைவதில்லை. இந்தப் பொருள் ஒளிரும் தன்மையுடையது. இதிலிருந்து இடைவிடாத நீலப் பச்சை நிறமுடைய செறிந்த ஒளி வெளிப்படுகிறது. பிசுபிசுப்புத் தன்மை பெற்றுள்ள தால் இப்பொருள் எளிதாக ஏனைய பொருள்களின் மேல் ஒட்டிக்கொண்டு அவற்றை ஒளிரச் செய்கிறது. இதன் ஒளியை வெளிப்படுத்தும் தன்மை பாஸ்ஃ பரசின் ஒளிர் தன்மையைப் போன்றுள்ளது. தற்பகுதியிழத்தல் (autotcmy). விரும்பத்தகாத தூண்டல்களால் தூண்டப்படும்போது அல்லது தன்னைத் தாக்கும் எதிரியிடமிருந்து தப்பிச்செல்ல முயலும்போது பல கைலோபோடாக்கள் (எ.கா: பூரான்) தம் காலில் ஒன்றை முறித்துக் கொண்டு ஓடிச் செல்கின்றன. அவற்றின் கால்களில் காக்சா, டிரோகாண்டர் ஆகிய கணுக்களுக்கு