கை வர்க்கச் சோதனை 403
கிடையே ஒரு மெலிந்த ணைப்புப் பகுதி உண்டு. இந்த இணைப்பில்தான் கால்கள் முறிகின்றன. இந்த டத்தில் மிகக் குறைவான காயம் ஏற்படுகிறது. இரத்தம் உறைந்து உடலில் உள்ள இரத்தம் சேதப் படாமல் பாதுகாக்கப்படுகிறது. முறிந்து விழுந்த கால் தன் போக்கில் சற்று நேரம் அசைந்து பின்பு நின்று விடும். இது பல்லிகளின் வால் அசைவுக்கு ஒப்பானது. பெரிய பூரான்கள் பொதுவாகத் தம் கால்களை இழப்பதில்லை. ஆனால் கிரிப்டாப்ஸ் என்னும் பெரிய பூரானில் இறுதிக் கால்களும், சில பின் பகுதிக் கால் களும் முறிந்து விழுகின்றன. பெரிய தட்டையான கால்களையுடைய அலிபெஸ் குரோடாலெஸ் என்னும் பூரானின் கால்கள மிக எளிதாகக் காக்சாவுக்கும், டிரோகாண்டருக்கும் இடையில் ஒடிந்து விடுகின்றன. மிகச் சிறிய புழுப் போன்ற உருவமுடைய ஜியோ பிலோ மார்ஃபாக்களில் இறுதி இணைக் கால்களைத் தவிர ஏனையவை ஒடிந்து விழுவதில்லை. இரா.ஜேம்ஸ் நூலோதி. Adam Sedgwick, A Text Book of Zoology, Vol III, Macmillan & Co., Fifth Edition, 1956. கைலோஸ்டோமேட்டா க் கூட்டு உயிரினங்கள் எக்டோப்ரொக்ட் ப்ரையோ சோவன்களின் (ectoproct bryozoans) வரிசையையும், ஜிம்னோலேமேட்டா (gymnolaemat? ) எனும் பிரிவை யையும் சார்ந்தவையாகும். பெரும்பான்மையாக உவர் நீரின் அடிப்பகுதியில் காணப்படும். கைலோஸ்டோமேட்டாக்களில் (cheilostomata) உள்ள உயிரிகளுக்குச் சூசியா (zooecia) எனப் பெயர். இவ்வுயிரிகள் சில வேளைகளில் நெருக்கமாகவும், சில வேளைகளில் நெருக்கமின்றியும் காணப்படும். பல வடிவங்களில் காணப்படும் இவ்வுயிரிகளின் உடலின் மேல் சுண்ணாம்புப் பொருளாலான தட்டும், உறையும் காணப்படும். உடலில் உள்ள துளைகள் (aperture) மூடியால் மூடபட்டிருக்கும். அமைப்பியல் ( morphology). ஒன்றுக்கொன்று பிரித்தறிய முடியாத கூட்டு வாழ்க்கை வாழும் கைலோஸ்டோமேட்டாக்களில் தண்டுகள் (stolons) மேக்குலா முதலியன காணப்படுவதில்லை. சில உயிரி களில் ரைசாயிடுகள் (rhizoids) காணப்படும். பெரும் பாலான கூட்டுயிரிகளின் ஓரப்பகுதிகளில் இனப் பெருக்க அறைகள் காணப்படும். கைலோஸ்டோ மேட்டாவின் கூட்டுயிரிகள் இருவகை இளம் உயிரி களைக் கொண்டு (heterozooids) காணப்படும். ஏவி குலேரியாவில் கீழ்த்தாடை (mandible) அசையக் கூடியது.விப்ராகுலேரியாவின் உடலில் தோல் சுனை காணப்படும். அ. க.9-26 அ கை வர்க்கச் சோதனை 403 வாழ்க்கைச் சுழற்சி. கைலோஸ்டோமேட்டாவின் சுரு முட்டைகள் வெவ்வேறு வகைகளில் பாதுகாக்கப் படுகின்றன. கரு முட்டையிலிருந்து வெளிவரும் இளவுயிரிகள் தன்னிச்சையாக நீரில் நீந்தித் திரியும். ஆனால் ஒரேநாளில் முதிர் உயிரியாக கூட்டுயிரி மாறும். வேறுசில வகை உயிரிகளில் கருமுட்டையி லிருந்து நேரடியாக நீரில் விடப்படுகிறது. அதற்குப் பிறகு நீண்ட நாள் கழித்து முதிர் உயிரியாக மாறும். எ.கா. சைஃபோ நாட்டிஸ். வாழ்க்கை வரலாறும், வகைப்பாடும். கைலோ ஸ்டோம்கள் டீனோஸ்டோம்களிலிருந்து உரு வாகியிருக்கலாம். ஜுராசியக் காலத்தில் தோன்றி, கிரிடேசியக் காலத்தில் விரிவடைந்து இப்போது அது சேர்ந்துள்ள சீனோசுவாயிக் யுகத்தில்தான் உச்ச நிலையை அடைந்துள்ளது. படி மலர்ச்சியில் கைலோஸ்டேமேட்டாக்கள் மூன்று வகைகளில் பிரிந்து வளர்ந்துள்ளன. முதலில் தோன்றிய அனாஸ் கான் கைலோஸ்டோம்களில் (Anascan cheilostomes) வளையக்கூடிய சவ்வு காணப்படும். கைட்டி னால் ஆன சுவர் திறந்து காணப்படும். இரண்டாவ தாகத் தோன்றிய கிரிப்பிரிமாஃர்ப் கைலோஸ்டோம் கள் (Giribrimorph cheilostomes) வளையக் கூடிய மென்மையான உயிரிகளாகும். முன்பக்கச் சுவர்கள் ஒரு பகுதியில் இணைந்தும், முள்களுடனும் காணப் படும். மூன்றாவதாக உள்ள அஸ்கோஃபோரான் (Ascophoran cheilostomes) கைலோஸ்டோம்கள் ஏனைய இரண்டை யும் விட மிகவும் வளர்ச்சியடைந் தவையாகும். சுண்ணாம்பாலான முன்பக்கச் சுவர் களுக்குக் கீழ்ப் பகுதியில் காற்றழுத்தத்தைச் (hydrostatic pressure சமநிலைப்படுத்தும் கருவி device) காணப்படுகிறது. இது உணர் நீட்சிகளை உள்ளிழுத்து, வெளியே நீட்டப் பயன்படுகிறது. அ. சிவானந்தம் கை வர்க்கச் சோதனை ஒரு நாணயத்தை 50 முறை வீசும்போது நிகழ்தகவுக் கொள்கையின்படி 25 தலைகளையும், 25 பூக்களை யும் எதிர்பார்க்கலாம். ஆனால் நாணயத்தை 50 முறை வீசும்போது து கிடைக்கும் தலை, பூக்களின் எண்ணிக்கை, கணக்கியல் மதிப்புகளுக்கு முற்றிலும் பொருந்துவதில்லை. இவை முறையே 28. ஆகவும் அல்லது 20.30 ஆகவும் இருக்கலாம். எதிர்பார்க்கப்படும் நிகழ்வெண் E எனவும், நேரில் காணும் நிகழ்வெண் எனவும் கொண்டால் (0 - E) 2 X' = ≥ [ ° E Σ [10] 2 என்று கை வர்க்கத்தை வரையறுக்கலாம். கைவர்க்கச் சோதனைக்கான தற்கோள்கள். எதிர்