408 கைனோரிங்க்கா
408 கைளோரிங்க்கா கூம்பு முகத்தை உள்ளுக்கிழுத்தும், வெளியே நீட்டி யும் இப்புழுக்கள் இடம் பெயர்வதைக் கருத்தில் கொண்டு இவற்றிற்குப் பொருத்தமாகக் கைனோ ரிங்க்கா (kinorhyncha) என்று பெயரிட்டார். இவ் வுயிரினங்களைப் பற்றி ஜெலிங்க்கா, ரமானே, பிரான் முதலானோர் ஆய்ந்தறிந்து பல தகவல்களைத் தந் துள்ளனர். வாழிடமும் வாழ்க்கை முறையும், கைனோரிங்க் காக்கள் உலகில் உள்ள கடல்களில், ஆழமற்ற பகுதி களில் கடலடி மண், மணல், பாசி, முதலியவற்றில் வாழ்கின்றன. டயாடம், நுண் பாசி, மட்கும் பொருள் முதலியவற்றை உறிஞ்சி உண்டு வாழ் கின்றன. நீரில் நீந்த முடியாத இவ்வுயிரிகள் புழுக் களைப் போல நெளிந்து, ஊர்ந்து கடலடிப் பரப்பில் நகர்கின்றன. மனிதத் தொடர்பில்லாமல் ஒதுக்க மான இடங்களில் வாழ்வனவாகவும், அளவில் மிகச் சிறியனவாகவும், அமைப்பு. வாழ்க்கைமுறை இவற்றில் எளிமையாகவும், வகை, எண்ணிக்கைகளில் குறைவாகவும், பொருளாதார முக்கியத்துவம் இல் லாதவையாகவும் இருப்பதால் இப்புழுக்களின் தொகுப்பு ஒரு முக்கியத்துவம் குறைந்த சிறு தொகுதியாகக் கருதப்படுகிறது. உடல் அமைப்பும் உடற்செயல்களும். ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுடைய இப்புழுக்களின் உடல் தலை, கழுத்து, உடல் என மூன்று பகுதி களாகவும் 13 அல்லது 14 கணுக்களைக் கொண்ட தாகவும் உள்ளது. இந்த இணைப்புகள் வளைதசைப் புழுக்கள். கணுக்காலிகள் போன்றவற்றில் உள்ள உள்ளும் புறமும் அமைந்த, முழுமையான கணுக்கள் அல்லது கண்டங்கள் அல்ல; முள் தலைப்புழுக்கள் (acanthocephala) அல்லது உருளைப்புழுக்களில் (nematoda) காணப்படுவதைப் போன்ற புறத்தே மட்டும் அமைந்த எளிய இணைப்புகளாகும். எனவே இக்கண்டங்களை ஜோனைட்டுகள் என்பர். இவற்றின் உடல்முள்களால் ஆன பலவளையங்களையும், வரிசை களையும் தாங்கிய தடித்த கியூட்டிகிளால் போர்த்தப் பட்டுள்ளது. கணுக்காலிகளைப் போலவே இவற்றின் உடலில் குற்றிழைகள் இல்லை. கைனோரிங்க்காக்களின் உடலில் முதல் ணைப்பு உருண்டையான தலை ஆகும். இதன் மீது பின்பக்கமாகச் சாய்ந்த, நீண்ட முள்களால் ஆன 5-7 முள்வளையங்கள் அமைந்துள்ளன. இவற்றிற்கு ஸ்கேலிட் எனப் பெயர். இந்தத் தலையும் முள் வளையங்களும், பின்னால் அமைந்துள்ள கழுத்து இணைப்புக்குள்ளும், அடுத்த மூன்றாம் இணைப்புக் குள்ளும் உள்ளுக்கு இழுத்துக் கொள்ளக்கூடியவை. இவ்வாறு தலைப்பகுதி உள்ளுக்கு இழுத்துக் கொள்ளப் படும்பொழுது. கழுத்து ஜோனைட்டில் அமை யும். பிளாசிட்கள் எனும் தடித்த பட்டைகள் மூடி போல இணைந்து பாதுகாப்பைத் தருகின்றன. கைனோரிங்கா தலை முழுதுமாக வெளியே நீட்டப்படும்போது அதன் முன்பகுதி கூம்புமுகமாக அமைந்துள்ளது. அதன் நுனியில் வாய்த்துளையும் அதைச் சுற்றி வாய் முள் வளையமும் உள்ளன. கழுத்துக்குப் பின்னே 11 அல்லது 12 இணைப்புகளாலான உடற்பகுதி உள்ளது. இதன் மேற்பக்கம் வளைந்தும், கீழ்ப்பரப்பு தட்டை வடிவிலும், பின்பகுதி வால் போல் கூராக நீண்டும் உள்ளன. உடற்பகுதியின் மேற்பக்க நடுவிலும். பக்கங்களிலும் முள்வரிசைகள் அமைந்துள்ளன. இறுதி ஜோனைட்டின நுனியில் மலப்புழையும் இரண்டு அல்லது நான்கு நீண்ட வால் போன்ற முள்களும் அமைந்துள்ளன