414 கொக்கிப் புழு
414 கொக்கிப்புழு வதற்கும் இக் குறிமுள்கள் பயன்படுகின்றன. ஆண் புழுவின் புணர்ச்சிக் குழிவின் நடுவில் புணர்ச்சிக் கூம்பு ஒன்று உள்ளது. இப்பகுதியின் நுனியில் காணப்படும் பொதுப்புழை வழியாக மலம், விந்து . வெளியேறுகின்றன. ஆகியவை சுமார் வெளி சூலுற்ற பெண்புழு நாளொன்றுக்குச் 10,000-20.000 கருவுற்ற முட்டைகளை யேற்றுகிறது. கொக்கிப்புழுவின் முட்டை உருண் டைப் புழுவின் முட்டையைப் போன்றது. முட்டை யின் உறை மூன்று அடுக்குகளால் ஆனது. அவற்றில் கொழுப்பாலான உள்ளுறை மெல்லியதாகவும், கைட்டின் என்ற கடினமான பொருளாலான நடுவுறை தடித்த ஓடாகவும், புரதத்தாலான வெளியுறை மெல்லியதாகவும் உள்ளன. முட்டைகள். முட்டைகள் மலத்துடன் வெளியேற் றப்படுகின்றன. முட்டைகள் முட்டைகள் 65 A நீளம், 40 அகலம் கொண்ட நீள வட்ட வடிவம் கொண்டவை; நிறமற்றவை; வை கண்ணாடி போன்று ஒளி ஊடுருவு தன்மை கொண்ட சவ்வுத் திரளால் மூடப் பட்டுள்ளன. ஒவ்வொரு முட்டையிலும் வரையறுக் கப்பட்ட நான்கு அண்டகோசங்கள் (blastomere) உள்ளன. செறிவடைந்த உப்புக் கரைசலில் இம்முட் டைகள் மிதக்கின்றன. முட்டை புதிதாக இடப்பட்ட நிலையில் அதில் காணப்படும் அண்ட கோசங்கள் இறுதியாக்கப்படாத நிலையில் உள்ளன. முட்டை பெருங்குடல் வழியே மலத்துடன் வெளிவரும் நிலையில் மேற்கூறிய அண்டகோசங்கள் வளர்ச்சி அடைந்து இறுதி வடிவம் பெறுகின்றன. மேற்கூறிய இனப்பெருக்கச் சேர்க்கை, கொக் கிப்புழு சிறுகுடலில் இருக்கும்போது நடைபெறுகிறது. பிறகு பெண்புழு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் கருவுற்ற முட்டைகளை ஓம்புயிரியின் உணவுக் குழாயில் இடுகிறது. இம் முட்டைகள் மலத்தோடு சேர்ந்து மனிதனின் உடலை விட்டு வெளியேறு கின்றன. அப்போது முட்டையில் உள்ள கரு நான்கு செல் பருவத்தில் இருக்கும். இக்கரு மேலும் வளர்ச் சியடைய ஈரப்பதமுடைய, ஆக்சிஜன் நிறைந்த. மணற்பாங்கான சூழல் தேவைப்படுகிறது. இவ்வகைச் சூழலில் கருவளர்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று 24 மணி நேரத்தில் முட்டைகளிலிருந்து இளவுயிரிகள் (rhabditiform larva) வெளிவருகின்றன. ஒவ்வொன் றும் சுமார் 0.25-0.30மி.மீ ஆகும். இது நீளமான தொண்டைப்பகுதியையும் அதன் இறுதியில் இலே சாகப் புடைத்த தொண்டைக் குமிழையும் கொண்டி ருக்கும். நிலத்தில் காணப்படும் பாக்டீரியாக் களையும், மட்கிய துணுக்குகளையும் உண்டு தன் னிச்சையாக வாழும். இப்பருவத்தில் இது மனிதனைத் தொற்றிக்கொள்ளும் தன்மை பெறுகிறது. அதிக வெப்பமும், ஈரப்பதமும் உள்ள மண்ணில் 4-8 வாரங்கள் வரை, குளிர்ந்த, ஈரப்பதமுள்ள மண்ணில் சுமார் ஆறு மாதங்கள் வரை இந்த இள வுயிரி மனிதனைப் பற்றும் தன்மையை இழக்காமல் வாழும். நிலப்பரப்புக்குச் செங்குத்தாகத் தன் உடலை வைத்துக் கொண்டு மனிதனை எதிர்நோக்கி யிருக்கும். மனித உடலின் எப்பகுதியாயினும். தோட்ட உடனேயே தோலைத் துளைத்துக் கொண்டு மிக விரைவில் உடலுக்குள் நுழைந்துவிடும். பொதுவாக, கை மற்றும் காலின் தோல் வழி யாகவே இது மனித உடலுக்குள் நுழைகிறது. தோலின் அடிமட்டத்தை அடைந்தவுடன் அப்பகுதி யில் காணப்படும் நுண்ணிய இரத்தக் குழாய் களையோ நிணநீர்க் குழாய்களையோ துளைத்துக் கொண்டு இரத்தத்திலோ நிணநீரிலோ கலந்து விடுகிறது. பின்பு அங்கிருந்து இக்குழாய்களின் மூலமாக இதயத்திற்குச் செல்லும். அங்கிருந்து நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்கு வரும். பின்னர் நுரையீரல் தந்துகிகளைத் துளைத்து வெளிவந்து நுரையீரல் சுவாசச் சிற்றறைக்குள் நுழையும். அங்கிருந்து வளைந்து நெளிந்த முன் னேறி நுரையீரல் சுவாசச் சிறுகுழாய், சுவாசப் பெருங்குழாய் வழியாகத் தொண்டை மூச்சுக் குழாயை அடையும். அப்போது தொண்டையில் ஏற்படும் உறுத்தலின் காரணமாக ஏற்படும் இருமலின் போது மூச்சுக் குழாயிலிருந்து உணவுக்குழாயை அடைந்து மனிதனால் விழுங்கப்படுகிறது. பின்பு வயிற்றின் வழியாகச் சிறுகுடலை அடைகிறது. அங்கு, குடல் உறிஞ்சிகளுக்கு இடையிலுள்ள தசைப் பகுதியில் துளை ஏற்படுத்தி அதில் தங்குகிறது. அப்போது இப்புழு மூன்றாம் முறையாகத் தோலு ரித்துப் பெரிதாகிறது. மனித உடலில் நுழைந்த ஐந்தாம் நாளில் தோலுரிப்பு நடைபெறுகிறது. பிறகு இளவுயிரி குடலின் உட்பகுதியில் முதலில் குறிப்பிட்ட 9 வாறு பற்றிக்கொண்டு வளர்ச்சியடைகிறது. தொடர்ந்து ஒரு வாரத்தில் நான்காம் முறையாக இறுதித் தோலுரிப்பு நடைபெறுகிறது. இது நிசுழ்ந்த பின் முழு வளர்ச்சியடைந்த கொக்கிப்புழுவாகிறது. முழு வாழ்க்கைச் சுழற்சியும் ஆறு வாரங்களில் முடி வடைகிறது. மனித உடலில் கொக்கிப்புழு சுமார் ஐந்து ஆண்டுகள் வாழவல்லது. கொக்கிப்புழுவால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் புறத்தோல் பாதிப்புகள் புறத்தோல் அழற்சி (dermatitis). நோய்ப் புழு. புறத் தோலைத் துளைத்து உடலில் புகும்போது இது காணப்படும். இரு விரல்களுக்கிடையே காணப்படும் மென் தோல், காலின் மேற்புறத்தோல், பாதத்தின் உட்புறத் தோல் ஆகியவை கொக்கிப்புழு அழற்சி யால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இது, தோன்றிய 1-2 வாரங்களில் மறைகிறது. திடீரெனத் தோலில் தோன்றும் செம்படர்த்