424 கொட்டை
424 கொட்டை 1 3 2 3 5 6 படம் 3. தென்னைமரத்தின் நுளித் தண்டு. கிளைக்காத 1.நீண்ட இலைக்காம்பு 2. இனங்களி (இளநீரி) 3. சிறகு வடிவக் கூட்டிலை 4: முதிர்ந்த கனி தேங்காய் 5. தண்டு 6. ஸ்பேடிக்ஸ் (மஞ்சரி.) மஞ்சள் அல்லது சிவப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட பேரி வடிவக் சுனி, பழச்சாற்றைப் பெரு மளவில் கொண்டிருத்தலால், இவற்றை முந்திரி ஆப்பிள் என்றும் குறிப்பர். (படம்-2) குறிப்பர்.(படம்-2) உண்மையி லேயே, மஞ்சரியின் காம்பு மற்றும் மலரின் வட்ட வடிவத் தட்டு உப்பிய பகுதியே முந்திரி ஆப்பிள் ஆகும். எனவே. உண்மையான கனி என்பது ஆப்பி ளின் நுனியில் வெளியே சிறிய சிறுநீரக வடிவில் உள்ளது. கொட்டை என்று குறிப்பிடும் பகுதி இதுவேயாகும். கொழுப்புச் சத்து நிறைந்த இதன் பருப்பு, மணம் கொண்டது. இவற்றிலிருந்து உணவு எண்ணெயும் எடுக்கப்படுகிறது. முதிர்ச்சியுற்றுப் பழுத்த கனி ஒரு வித நறுமணத்தைக் கொண்டிருப்ப தால் பல நாடுகளில் இதை உணவாக உட்கொள் கின்றனர். புளிக்க லைத்த இதன் சாற்றை மதுவாக அருந்தலாம். தேங்காய் (Cocos nucifera). உலகின் மிக முக்கிய மான பொருளாதாரப் பயிரான தேங்காய் மக்களின் படம் 4 தேங்காய், குறுக்கு வெட்டுத்தோற்றம் 1. இளங்குருத்து 3. நார்ப்பகுதி 5. தேங்காய்ப்பருப்பு 8. வழவழப்பான களியின் வெளியுறை கல் போன்ற கடினமான உட்பகுதி முளை அன்றாட வாழ்க்கையில் சிறந்த பங்கு பெறுகிறது. மலேய ஆர்ச்சிபெலாகோவைத் (Malay archipelago) தாயகமாகக் கொண்ட இம்மரம் கடலுக்கருகிலும் கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம் கொண்ட மலைகளிலும் நன்கு வளர்கிறது. கிளைகளற்ற பருத்த அடிப்பகுதியைக் கொண்ட இம்மரத்தின் நுனியில் பல நீண்ட 1.8-3.6மீ., அகன்ற (48-50 செ.மீ) சிறகு வடிவக் கூட்டிலைகள் உள்ளன. (படம் 3.) ஸ்பேடிக்ஸ் எனும் சிறப்பு வகை மஞ்சரியில் உள்ள பூக்கள், மூன்று பக்கமுடைய மூன்று கனியுறை கொண்ட உலர்ந்த உள்ஒட்டுச் சதைக் கனி (drupe) வகைகளைத் தோற்றுவிக்கும் (படங்கள் 3, 4). இவற்றின் புறப் பகுதியிலிருந்து (mesocarp) நார் பிரித்தெடுக்கப்பட்டுக் கயிறு திரிக்கப்படுகிறது. கடினமான மேல் ஓட்டுப் (endocarp) பகுதியை எரிக்க வும் பாத்திரம் செய்யவும் பயன்படுத்துகின்றனர். அவற்றின் உள்ளிருக்கும் நீர் சுவையாகவும், சத்துள் ளதாகவுமிருப்பதால் அதையும் அருந்துவர். தேங்