பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கொடி எலுமிச்சை

426 கொடி ஏலுமிச்சை செஸ்ட் நட் மரத்தின் கனியுடன் கூடிய கிளை. 1. லை. 2.கணி (முன்போன்ற வட்டப் பூவடிச் செதில் கனியைச் சுற்றியுள்ளது) 3. கிளை. கே.சடைவா (C. sativa-European chestnut) என்னும் ஐரோப்பிய வகையின் கொட்டைகளையும் பச்சையாகவோ, வறுத்தோ. வேகவைத்தோ, அரைத்தோபயன்படுத்துவர். கே. கிரெனேடாலின் கொட்டைகளை உருளைகிழங்கு சமைப்பது போலச் சமைத்து உண்பர். த. முருகேசன் நூலோதி.F.Hill, Economic Botany, McGraw Hill Book Company, New York, 1952. கொடி எலுமிச்சை கொழுமிச்சை எனப்படும் கொடி எலுமிச்சை பொதுவாக வெப்ப மித வெப்ப மண்டலங்களில் 1600 மீ வரை உயரமான பகுதிகளில் நன்கு வளர்ந்து பயன் கொடுக்கும். இதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா என ஆய்வாளர் கருதுகின்றனர். கி.பி.1000-1200 ஆண்டுகளில் அராபியர்களால் மத்திய தரைக் கடற்கரைப் பகுதிகளில் புகுத்தப் மண்டல பட்டது. இன்று அனைத்து மித வெப்ப நாடுகளிலும் மிகுதியான பரப்பளவில் பயிரிடப்படு கிறது. ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரிஸ் போன்ற நாடுகளிலும் அமெரிக்காவில் கலிஃ போர்னியாவிலும் மிகுதியான அளவில் பயிரிடப்படு கிறது. இந்தியாவில் குறைந்த பரப்பளவிலேயே பயிரிடப்படுகிறது. கொடி எலுமிச்சையின் தாவரவியல் பெயர் சிட்ரஸ் லைமோன் (ciris limon) ஆகும். இத் தாவரம் ரூட்டேசி என்னும் இருவித்திலைக் குடும் பத்தைச் சார்ந்தது. வளரியல்பு. இத்தாவரம் புதர்ச்செடி (அமைப் புடையது. படர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். பெரிய இறக்கையற்ற இலைகள். பூக்கள் வெள்ளை நிறம் கொண்டவை. பழங்கள் எலுமிச்சையை விடப் பெரியவையாகப் பழக்காம்புடன் அமையும். பழத்தின் மேல்தோல் கெட்டியாக இருக்கும், சதைப் பகுதி இளமஞ்சள் நிறத்தில் அமையும். வகைகள். கொடி எலுமிச்சையில் விதையற்ற வகை, உருண்டை வகை நேப்பாளி, நீண்ட வகை நேப்பாளி, த்தாலி மால்ட்டா எனும் வகைகள் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் வின்பன், வில்லாபிராங்கா, யூரேகா போன்ற வகை களும் சாகுபடி செய்யப்படுகின் ன்றன. சாகுபடி முறைகள். நல்ல வடிகால் வசதியும். அரைமீட்டர் ஆழமுமுள்ள மண்ணும், காற்றுத் தடுப்புகளும் இதற்குத் தேவை. முதலில் 7 மீட்டர் டைவெளிவிட்டு 1 மீட்டர் கன அளவுள்ள குழிகள் தோண்டி நன்கு ஆறப்போட வேண்டும். பின்பு தொழு உரத்தையும் மண்ணையும் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். பதியம் போட்ட செடிகளை ஜுலை - ஆகஸ்டு மாதங்களில் குழிக்கு ஒன்றாக நட்டு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். ஓராண்டு நிரம்பிய செடிகளுக்குத் தொழு உரம் 10 கிலோ. சாம்பல் 2 கிலோ. சூப்பர் பாஸ்ஃபேட் கிலோ, பிண்ணாக்கு 1 கிலோ என்ற அளவில் போட வேண்டும். ஐந்து ஆண்டு நிரம்பிய செடி களுக்கு மேற் கூறிய அளவைப் போன்று இருமடங்கு உரம் இடுதல் வேண்டும். செடிகள் நட்டு இரண்டு முறை நீர் விட்ட பிறகு, கோடையில் வாரம் ஒரு முறையும் பிற காலங்களில் மண்ணிற்கும் பருவத் திற்கும் ஏற்றவாறு 15 நாளுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சுவது சிறந்தது. } பூக்கும் காலத்திலும் பிஞ்சுண்டாகும் காலத்திலும் உரமிடும் காலத்திலும் செடிகளுக்கு மிகுதியாக நீர் பாய்ச்சுவதால் விளைச்சலை உயர்த்தமுடியும். செடி