குவாண்டம் கோட்பாடு (வெப்பக் கொள்ளளவு) 45
Ye To Te Yo → Yo இங்கு Y. இவற்றில் அனுமதிக்கப்பட்டது. (17) அனுமதிக்கப்படாதது. ஒற்றைநிலை அவைச்சார்பு (மு. even) இரட்டைநிலை அலைச்சார்பு (Vodd ) ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கான தேர்வு நிபந்தனைகள் An = +1, +2, +3 = +1 எனக் காட்டலாம். மேலும் குறிப்பிட்ட நிலைகளுக்குச் சிறப்புத் தேர்வு நிபந்தனைகள் உண்டு. இத்தேர்வு நிபந்தனைகள் அலைச்சார்பின் பண்பில் இருக்கவேண்டிய ஒழுக்க நிபந்தனைகளால் தோன்றுகின்றன. ஹைட்ரஜன் அணுவுக்கு இத்தேர்வு நிபந்தனைகள் கொண்டு சமன்பாடு 5-ஐத் தருவிக்க முடியும். அட்டவணை 1இல் கொடுக்கப்பட்ட நிறமாலை வரிகள் முழுதும் ச்சமன்பாடு கொண்டு விளக்கப்பட்டன. மூலக்கூறு நிறமாலை வகைகள் மூலக்கூறுகளில் ஏற்படும் நிறமாலைகளைப் பின்வருமாறு வகைப் படுத்தலாம். அவை சுழற்சி நிறமாலை (rotation spectra}, அதிர்வு நிறமாலை (vibration spectra), எலெக்ட்ரான் நிறமாலை (electronic spectra) என்பன. இதனால் ஒரு மூலக்கூறின் மொத்த ஆற்றலை (ET) Erot + Eyib + E¢ + ET என எழுதலாம். Erot சுழற்சி ஆற்றல் Eyib அதிர்வு ஆற்றல் E. எலெக்ட்ரான் ஆற்றல் (18) இவ்வாறே மூலக்கூறின் மொத்த அலைச்சார்பையும் y = Wrot ¥vib fe என எழுதலாம். (19) ஒவ்வொரு மூலக்கூறிலும் ஹாமில்ட்டோனியன் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு வகைக்கும் உரிய ஆற்றலைத் தீர்வு மூலம் காணலாம். இத்துடன் தேர்வு நிபந்தனைகளைக் கணக்கில் கொண்டு நிறமாலையைத் துல்லியமாகவும் கணக்கிடலாம். குவாண்டம் கோட்பாடு (வெப்பக் கொள்ளளவு) 25 பொதுவாக, ஒரு மூலக்கூறின் நிறமாலை பல வரிநிறமாலைகளின் தொகுப்பாக இருக்கும். எனவே மொத்த நிறமாலை அனைத்தின் புள்ளிவிவரம் மொத்தமாக இருக்கும். ஒரு நிறமாலை வரியின் செறிவு, தொடர்புடைய ஆற்றல் நிலைகளில் உள்ள தொகையைப் பொறுத்து எலெக்ட்ரான்களின் . இருக்கும். இதனைக் கணிக்க, புள்ளிவிவர (statistical mechanics) பயன்படுகிறது. யங்கியல் அணுநிறமாலை (atomic spectra), மூலக்கூறு நிறமாலை ஆகியவை தவிர, பல சிறப்பு நிறமாலைத் தோற்றங்களையும் குவாண்டம் எந்திரவியல் கொண்டு விளக்கலாம். அணுக்கருக் காந்த ஒத்திசை நிறமாலை (nuclear magnetic resonance spectrum), அணுக்கரு நான்கு உருவ ஒத்திசைவு (nuclear quadrupole resonance T சைவு நிறமாலை spectrum), spectrum). மாஸ்பாயர் நிறமாலை (Mossbauer லெக்ட்ரான் தற்சுழற்சி நிறமாலை (electron spin resonance spectrum), மைக்ரோ அலை நிறமாலை (micro wave spectrum), அகச்சிவப்பு மற்றும் ராமன் நிறமாலை; infra-red and Raman | spectrum). அணுக்களின் மின்னணு நிறமாலை (electronic spcctrum of atoms), ஈர்ணுமூலக்கூறுகளின் மின்னணு நிறமாலை (clectronic spectra ofdiatomic molecules), பல்லணு மூலக்கூறுகளின் மின்னணு நிறமாலை (electronic spectra of polyatomic molecules) போன்ற வற்றின் கோட்பாடுகள், சோதனை நுண் அமைப்புகள் (experimental techniques) பயன்கள் ஆகியவை நோக்கீடு 2 இல் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. வெ. ஜோசப் குவாண்டம் கோட்பாடு (வெப்பக் கொள்ளளவு) ஒரு பொருளின் (திண்ம, நீர்ம, வளிம) வெப்பக் கொள்ளளவு என்பது, ஓரலகு நிறையளவுடைய அப் பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது கெல்வின் உயர்த்துவதற்குத் தேவையான வெப்பம் என வரை யறுக்கலாம். வெப்பக் கொள்ளளவை ஜூல்/கிலோ கிராம்/ கெல்வின் என்ற அலகால் மதிப்பிடுவார்கள். பொருள்களுள் நீரே உயரளவான வெப்பக் கொள் ளளவு கொண்டது. அதன் மதிப்பு 4185 ஜூல்/கி.கி./ கெல்வின் ஆகும். பொருள்களின் வெப்பக் கொள்ளளவு பற்றிய உண்மைகளை, வெப்பவியல் கொள்கை மூலம் ஓரளவு அறிந்து கொள்ள முடியும். ஒரு பொருளுக்கு dQ அளவு வெப்பத்தை ஊட்டினால், இதிலொரு பங்கு (du) பொருளின் அக ஆற்றலை அதிகரித்து அதன் வெப்பநிலையை உயர்த்துவதற்கும், எஞ்சிய பங்கு (dw) வெப்பஞ்சார்ந்த பெருக்கத்திற்கான