432 கொடுக்கிணைப்புச் சேர்மங்கள்
432 சொடுக்கிணைப்புச் சேர்மங்கள் 72+ H,O H₂O OH₂ OH2 H2Q NH2 CH2 CH2 H,O NH ㄠㄠㄠˋ 72+ OH2 H₂O NH2 CH, -CH |H20 NH2 படம் 1 மூலக்கூறுகளே சிறந்தலை என அறியப்பட்டுள்ளது. உலோக அயனிகளின் வினைத்திறனைக் குறைத்து. அவற்றின் குறுக்கீட்டைத் தவிர்ப்பதற்குக் கொடுக்கி ணைப்பு வினைப்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன. கடின நீரை மென்னீராக்குவதற்கும், கொதிகலன் உட்சுவரின் மீது தோன்றும் உப்புப் படிவங்களை உலோக அகற்றுவதற்கும், மண்ணில் நுண்ணூட்ட அயனிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும். உணவுப் பாதுகாப்பிற்கும் எத்திலீன் டைஅமீன் டெட்ரா அசெட்டிக் அமிலம் (EDTA) எனும வினைப் பொருள் பயன்படுகிறது. EDIA ஓர் அறுபல்லிணைவுப் (hexadentate) பொருளாகும். உயிரியல் அமைப்புகளில் உலோக அயனிச் செறிவை நிலைப்படுத்தும் தாங்கல் கரைசல் களில் கொடுக்கிணைப்பு வினைப்பொருள்கள் இடம் பெறுகின்றன. அமில-கார நிறங்காட்டிக் கரைசல் களின் pH மதிப்பைப் பொறுத்து எவ்வாறு நிற் வேறுபாடு காண்கின்றனவோ, அவ்வாறே சில கொடுக்கிணைப்பு வகை ஈனிகள் கரைசலில் உலோக அயனியின் செறிவைப் பொறுத்தும் நிறமாற்றம் அடைகின்றன. இவ்வுண்மையைப் பகுப்பாய்வு வேதியியலில் உலோக அயனிச் செறிவைக் கண்டறி வதற்குப் பயன்படுத்தலாம். மேலும், கரிமக் கரைப் பான்களில் பெரும்பாலான கொடுக்கிணைப்பு ஈனிகளும் சேர்மங்களும் கரைவதால் நீரியக் கரைசல் களிலிருந்து கரைப்பான் வழிச்சாறு இறக்கல் முறை மூலம் கரிமக் கரைப்பான்களைப் பயன்படுத்தி உலோக அணைவுகளைப் பிரிக்கலாம். வணிக அளவில் முதன்மை வாய்ந்த சாயங்களும் ஏனைய நிறப்பொருள்களும் கொடுக்கிணைப்புச் சேர் மங்களேயாகும். எ.கா. தாமிரத் தாலோசயனீன்களும் இயற்கை நீர்நிலைகளில் உலோக அயனிகளின் அளவைக் கட்டுப்படுத்தும் கொடுக்கிணைப்புப் பொருள்களாக, தாவரச் சிதைவுப் பொருள்களான ஃபுல்விக் அமிலமும், ஹீயூமிக் அமிலமும் பயன்படு கின்றன. கொடுக் டிரைபாலிபாஸ்ஃபேட் எனும் கிணைப்புப் பொருள் மலினம் மிக்கதாகவும் நச்சுத் தன்மை குறைந்ததாகவும் உள்ளதால் தொகுப்புச் சலவைத் தூள்களில் பயன்படுகிறது. இச்சேர்மம் நீரில் கரைந்துள்ள கால்சியம் போன்ற உலோக அயனிகளுடன் கொடுக்கிணைப்புற்று, நீரின் கடினத் H, CH2 தன்மையை நீக்குகிறது. தொகுப்பு முறையில் தயாரிக்கப்படும் அயனிப் பரிமாற்றிகளும், சியோ லைட் என்ற கனிம வகைப் பொருளும் நீரின் கடினத் தன்மை நீக்குவதற்குப் பகுப்பாய்வில் பயன்படு கின்றன. எளிதில் கொடுக்கிணைப்பில் சிக்காத கார உலோகங்களையும், காரமண் உலோகங்களையும் அணைவேற்றம் அடையச் செய்யவல்ல மகுட ஈதர்கள் (crown ethers) சிறந்த கொடுக்கிணைப்புப் பொருள்களாகும். கொடுக்கிணைப்புப் பொருள்களின் தன்மைகளுள் முதன்மையானது அவற்றின் நிலைத்தன்மையாகும். இந்நோக்கில் அவை அரோமாட்டிக் வளையங்களை ஒத்தவை, சான்றாக, பெரிலியம் அசெட்டைல் அசெட் டோனேட் 270°C இல் சிதைவுறாது கொதிக்கிறது. ஸ்கேன்டியம் அசெட் டைல் அசெட்டோனேட் 370°C வரை சிதைவுறுவதில்லை. அசெட்டைல் அசெட் டோனில் ஈனால் வடிவத்திலுள்ள ஹைட்ரஜன் அயனி உலோக அயனியால் எளிதில் பதிவீடாவதே இதற்கு அடிப்படைக் காரணமாகும் (படம் 2). மாறாக, அசெட்டோன் போன்ற ஒற்றைப்பல் ஈனிகளின் ஈதல் சேர்மங்கள் நிலையற்றவை. HC R, M படம் 2 R₂ R₁ CH கரைசலில் வெப்ப இயக்கவகை நிலைத்தன்மை கூடுவதால், கொடுக்கிணைப்பு வினைப் பொருள்கள் உலோக அயனிகளின் மாற்ற நடைமுறைகளை வல்லன. நீரில் கரைதிறனே அற்ற இரும்பு (III) ஹைட்ராக்சைடு, காரம் கலந்த டிரை எத்தனால் அமீனில் கரைந்துவிடுகிறது. ஏறக்குறைய கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் பயனாகக் கொடுக்