கொத்துமல்லி 451
Sesheania aculeata) எனப்படும் ஒருவகை அகத்தி இனத்திலிருந்து கோந்து தயாரிக்கப்படுகிறது. நோய். கொத்தவரை அசுவினி, இலைப்பேன், புழு முதலியவற்றால் தாக்கப்படலாம். இலைப்புள்ளி மற்றும் சாம்பல் நோய் தோன்றுவதுண்டு. இவற்றைக் கட்டுப்படுத்த விதைத்த 20 மற்றும் 40 நாளில் 300 மி.லி. மாலத்தியான், 400 கிராம் டைத்தேன் முதலிய வற்றை 200 மி.லி. நீரில் கலந்து தெளிக்கலாம். தி. ஸ்ரீகணேசன் நூலோதி. S.L. Katyal, Vegetable growing in India, Oxford & 1B H Publishing Co., New Delhi, 1977; S.L Kochchar, Economic Botany in the Tropies, Macmillan India Ltd., Madras. 1981. கொத்து மல்லி . தன் தாவரவியல் பெயர் கோரியேண்ட்ரம் சடைவம் (Coriandrum sativumi ஆகும். இது ஏபியேசி அல்லது அம்பல்லிஃபொரே எனப்படும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. கோரியேண்ட்ரம் என்ற சொல் கிரேக்சுத் தழுவல். இது மூட்டைப்பூச்சியைக் குறிப்பதாகும். மல்லியின் இளம் காய்கள் மூட்டைப் பூச்சியின் நாற்றத்தைக் கொண்டிருக்கும். காய்கள் முற்றினால் இந்தக் கெடு நாற்றம் மாறிவிடும். கொத்து மல்லிக்கு, மல்லி, தனியா என்ற வட்டாரப் பெயர்களும் உண்டு. தோற்றம். மல்லி, மத்திய தரைக்கடல் பகுதி யைத் தாயகமாகக் கொண்டது. எகிப்து, சூடான் போன்ற இடங்களில் இன்று மல்லிச்செடி, பகுதி- காட்டுச் செடியாக வளர்கிறது. கி.மு. 5000 ஆண்டு களுக்கு முன்னரே இது பயன்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறைகளில் மல்லி விதைகள் காணப் படுகின்றன. இந்தியா, துருக்கி, சோவியத் ஒன்றியக் குடியரசு, பால்கள், மொராக்கோ போன்ற நாடுகளில் இது பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. வளரியல்பு. மல்லி 30-100 செ.மீ. வளரும் ஒரு பருவச் செடியாகும். தண்டு உருண்டையாகக் குழல் போலிருக்கும். இலைகள் மாற்றிலையடுக்கமைப் புடையவை. இலைக்காம்பின் கீழ்ப்பகுதி பட்டையாக இருக்கும். ஒவ்வோர் இலைக்கும் 2 இலையடிச் செதில் களுண்டு. இச்செடியில் வளர்ச்சி ஏற்படும்போது, மாறுபட்ட இலை அமைப்புக் காணப்படும். முன் தோன்றும் கீழிலைகள் அகலமாக, வளைந்த ஓர களுடனிருக்கும். பின்தோன்றும் இளம் இலைகள் நீண்ட, குறுகிய சிற்றிலைகளோடு கூடிய கைவடிவக் கூட்டிலைகளாக இருக்கும். மஞ்சரித் தண்டு, நுனி அல்லது இலைக்கோணக் கூட்டுக் குடை மஞ்சரியாகும். . . கொத்து மல்லி 451 பூக்காம்பு மஞ்சரிக் காம்பு 3-5 கதிர்களாகக் கிளைத்திருக்கும். ஒவ்வொரு கதிரிலும் 8-15 சிறு மலர்கள் உண்டு. மலர்கள் பூவடிச் செதிலற்றவை, வெள்ளை அல்லது ளம் சிவப்பு நிறச்செதில் களுடையது. மஞ்சரியின் விளிம்பில் மலர்கள் பெரியவையாக ஒழுங்கற்று, பூக்களாக இருக்கும். மஞ்சரி நடுவில் காணப்படும் மலர்கள் ஒழுங்கான, ஆரச்சமச்சீர் கொண்ட, பால் மலர்களாகும். காணப்படும் ஒருபால் சூலகம். 2 சூலிலைகள் இணைந்த இரு சூலறை காண்ட கீழ்மட்டச் சூல்பை. ஒவ்வொரு சூல்றை யிலும் 1 சூல் தொங்கு ஒட்டுமுறையில் இருக்கும். சூலகத்தண்டு இரண்டு. சுரப்பி கூம்புபோல் சூலகத் தண்டையொட்டி (stylopodium) இருக்கும். காய், உலர்கணி {cremocarp); கோளவடிவம்; பழுப்பு- மஞ்சள் நிறம்; நீள்போக்கில் வரிகளைக் கொண்டது. 3 மி.மீ, குறுக்களவு கொண்டது. 3 A சாகுபடி. அக்டோபர் 1 நவம்பர் மாதத்தில் விதைத்துப் பயிரிடுவார்கள். செடி முதிர்ச்சியடைய 31 மாதங்களாகும். கர்நாடக மாநிலத்தில் நெல் பயிரிடப் போதுமான ஈரமில்லாதபோது, மல்லி பயிரிடுவது வழக்கம். விதைகளைப் பரவலாக அல்லது பாத்தி கட்டி வரிசையாகப் போடுவதுண்டு, விதைகள் முளைக்க 10 நாள் ஆகும். முழுக் காய் களைக் கால்களால் மிதித்து இரண்டாக உடைப் பார்கள். ஹெக்டேருக்கு 10-15 கி. விதை தேவை. விதைகள் முளைத்தவுடன் கொத்திக் கிளறி விட வேண்டும். இரண்டு மாதங்களில் பூக்கத் தொடங்கும். பிறகு ஆறு வாரங்களில் காய்கள் முதிர்ச்சியடையும். இந்தியாவில் பெருவாரியான வீட்டுத் தோட்டத்தில் சிறு அளவில் கொத்துமல்லி பயிர் செய்வது வழக்கம். செடியில் காய்கள் முற்றினவுடன் வேரோடு பிடுங்கி அறுவடை செய்வர். செடிகளைக் கால்களால் மிதித்தும் கால்நடைகளைக் காண்டும் தானியத் தைப் பிரித்தெடுப்பர் . பிறகு காற்றில் தூற்றி வெயிலில் காய வைப்பர். . வெப்ப மண்டல நாடுகளின் சமவெளிகளில் பயி ரிட்டால் செடிகள் காய்ப்பதில்லை. சோவியத் ஒன்றி யக் குடியரசு. மத்திய ஐரோப்பா, மொராக்கோ, அர்ஜன்டீனா, அமெரிக்கா, இந்தியா, ருமேனியா முதலிய நாடுகள் மல்லியை ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பயிரிடப் பட்டாலும் ஆந்திரப் பிரதேசம், மத்தியபிரதேசம், ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், அஸ்ஸாம், தமிழ்நாடு முதலியன முக்கிய ஏற்றுமதி மாநிலங்களாகும். இந்தியா ஆண்டுக்கு ஏறத்தாழ 80,000 டன் மல்லியை 2.5 லட்சம் ஹெக்டேரில் உற்பத்தி செய் கிறது. இதில் 800 டன்தான் ஏற்றுமதியாகிறது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் ஏக்சு