பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொத்து வேலை 457

நல்ல செங்கல் ஒன்றின் நீளம் 20செ.மீ., அகலம் 10 செ.மீ., உயரம் 10 செ.மீ. இருக்கும். களிமண், மணல், நீர் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து செய்யப்படும் கலவை, அச்சுகளின் மூலம் செங்கல் களாகச் செய்யப்பட்டு உலர்ந்த பின் சூளைகளில் வேகவைக்கப்பட்ட பின்னர் கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது. சில செங்கல் அளவில் சிறிய தாகச் சுவர்களில் தகடுகள் போல ஒட்ட வைக்கப் பயன்படுகிறது. ஓடு எனப்படுவதும் கூடு போல உள்பகுதியில் மண் நீக்கப்பட்ட அச்சுச் செங்கல்களே. சுவர்களில் ஒட்ட வைக்கப் பயன்படுத்தும் சிறிய தகடுகளும் ஓடுகள் ஆகும். இவை செங்கற்கள் போலவே தயாரிக் கப்படுகின்றன. அச்சுப் பதித்த தட்டு ஓடுகள் தயாரிக் கப்படும்போது விரும்பிய உருவங்களை அச்சுகளாகப் பதித்துத் தயாரிக்கலாம். இவை கலை நோக்குடன் கட்டடம் சுட்டப் பயன்படும். அழகான தோற்றம் உருவாக்கவும் பயன்படும். சிமெண்ட் அச்சுகளைக் கற் காரையைப் பயன்படுத்தித் தேவையான அளவுகளில் செய்து கொள்ளலாம். கட்டியான செங்கல்களாகவும் கூடு போன்ற அச்சுகளாகவும் செய்யலாம். பெரிய அளவில் கட்டடங்கள் கட்ட மிகுந்த எண்ணிக்கையில் இவற்றைச் செய்யும்போது மலிவாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். நல்லதொரு மின் கடத்தாப் பொருளாகவும், ஓசையைக் குறைக்கும் தன்மையதா சுவும் பயன்படும். அனைத்துக் காலநிலைக்கும் ஏற்றது: தீப் பற்றாதது; பட்ட புற வடிவங்களில் தயாரிக்கவும் ஏற்றது. மாறு அழகுபடுத்தப் பயன்படும் அச்சுகள் எந்திரங் களின் உதவியால் செய்யப்படுகின்றன. திரை போன்று பயன்படும் அச்சுகளும் உண்டு. இவை வெளிச்சத்தையும், நிழலையும் ஏற்படுத்தக் கூடியவை. ஓசையைக் குறைக்கும் அச்சுகளாக உருவாக்கப்பட்டுக் கூட்டுப்பகுதிக்குள் ஓசை உறிஞ்சப்படும் வகையில் அறுக்கப்பட்ட இடைவெளிகள் கொண்டனவாகவும் இருக்கும். இவை விளையாட்டு அரங்கம், எந்திரங் கள் இருக்கும் அறைகள், சுரங்கப் பாதைகள், திரைப்பட அரங்கம் ஆகியவற்றில் மானப் பொருளாகப் பயன்படும். சுண்ணாம்பும் சேர்ந்த செங்கல் சாதாரண செங்கல் போலவே தயாரிக்கப்படுகிறது. அளவில் மணலும் சுண்ணாம்பும் நீரும் சேர்த்து உரு வாக்கப்படும். ஆனால் இதை நெருப்பில் வேக வைப்பது ல்லை. இது மிகக் குறைந்த அளவு வலிமை உடையது. குனறந்த செலவில் கட்டப்படும் கட்டடங்களுக்குப் பயன்படுத்தக்கூடியது. கட்டு மணலும் களிமண் சரியான கண்ணாடி அச்சுகள். உள்ளீடற்ற, காற்று வெளி யேற்றப்பட்ட பெட்டி போன்ற கண்ணாடி அச்சுகள் கட்டடச் சுவர்கள் கட்டப் பயன்படுகின்றன. இரு பகுதிகளாகச் செய்யப்பட்டு இவை பொருத்தப்படும். காற்று வெளியேற்றப்படுவதால் இவை மின் கடத் கொத்து வேலை 457 தாப் பகுதியாகச் செயல்படும். மேலும் பராமரிப்புச் செலவும் இல்லை. தூசிகள் உள்ளே வாராமல் வெளிச்சம் மட்டும் கொடுக்க வை உதவுகின்ற றன, கற்கள். இவை கற்பாறைகளிலிருந்து உடைத்து எடுக்கப்படுகின்றன. கரடுமுரடான, சீராக்கப்படாத கற்கள் ஒருவகை; சீராக வெட்டப்பட்டு ஒரே அளவில் தயாரிக்கப்படும் கற்கள் மற்றொரு வகை; ரம்பத்தின் உதவியால் வெட்டப்பட்டுத் தேவையான பரிமாணங் களில், மரங்களைப் போல உருவாக்கப்படுவது அழகு படுத்தப்பட்ட ஒரு வகையாகும்; வை அச்சுகளைப் போல் படி, நிலை, மேடை ஆகிய கலைநயம் காட்டும் இடங்களில் பயன்படக் கூடியவை. பிடிமானக் கம்பிகள், இழு கம்பிகள், இணைப்புக் கம்பிகள் என்பவை கற்காரைக் கட்டுமானத்திலும், உள்ளீடற்ற சுவர்களிலும் குறுக்காகச் சுவர்களை ணைக்கும் பகுதிகளிலும் வலுவூட்டிகளாக, பாரம் தாங்கிகளாக, ணைப்புப் பொருள்களாகப் பயன் படுகின்றன. இவை அதிர்வு, வெட்டு விசை, இழுவிசை ஆகியவற்றிலிருந்து கட்டடங்களைப் பாதுகாக்கின்றன. சாந்து. சாந்து, கட்டடத்தின் பிணைப்புப் பொரு ளாகப் பயன்படுகிறது. இது கட்டுமானப் பொருள் களை ஒருங்கிணைத்து உறுதியான, இறுக்கமாகப் பின்னிப் பிணைந்த கட்டடத்தை உருவாக்குகிறது. எல்லாப் பகுதியையும் பாதுகாக்கிறது. நான்கு வழி களில் பணியாற்றுகிறது. கட்டுமானப் பொருள்களை ணைத்து இடைவெளிகளை நிரப்பிப் பிணைப்பு ஏற்படுத்துகிறது. செங்கல், கல் ஆகியவற்றில் உள்ள அளவு வேறுபாட்டைச் சீர் செய்ய இது ஒரு நிரப்புப் பொருளாகப் பயன்படுகிறது. இரும்புக் கம்பி, வலு வூட்டி இவற்றுடன் எளிதில் பிணைப்பு ஏற்படுத்து கிறது. காண்பதற்கு அழகாகத் தோற்றம் கொடுக்க வல்ல கோடுகளையும் நிறங்களையும் அளிச்சு வல்லது. அதன் வலிமையைப் பொறுத்துச் சாந்தைத் தரம் பிரிக்கலாம். வேலை செய்வதற்கு ஏற்ற நல்ல சாந்து மென்மையாகவும், குழைவாகவும், எளிதில் பிரியாத கலவையாகவும் இருக்கும். அது கட்டுமானப் பொருள்களுடன் உடனடியாக ஒட்டிக் கொள்ளக் கூடியது. பயன்படுத்தும்போதும் சுவரில் ட்டும். போதும் கீழே வழிந்து விழாது. ஆய்வுகள் மற்றும் பண்டங்களின் தர நிர்ணயத் திற்கென நிறுவப்பட்ட அமெரிக்கன் சொசைட்டி என்ற நிறுவனம், சாந்து, செங்கல், ஓடு முதலிய வற்றின் தேவையான தகுதிகளையும் தரத்தையும் நிர்ணயம் செய்து கொடுத்துள்ளது. சாந்து இணைப்புகளை நிறைவு செய்யச் சாந்துக் கரண்டியைப் பயன்படுத்தி மிகுதியாக உள்ள சாந்தை வெட்டி எடுத்து விட்டு அழுத்திப் பூசுவதும் உண்டு. அல்லது இணைப்புகளை அழுத்தி, ஒரே வடிவத்தில்