பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொதிகல நீர்‌ 459

கொண்டு நீரின் அளவும் மட்டமும் திட்டமிட்டவாறு இருக்கும்படி இயங்குகிறது. கே.ஆர்.கோவிந்தன் நூலோதி. Baumeister, A. Avallone and Baumeister III. Mark's Standard Hand Book for Mechanical Engineers, Eigth Edition, Edition, McGraw-Hill Book Company, New York, 1978. கொதிகல நீர் அனல் மின்நிலையங்களின் நீராவி ஆற்றலைப் பயன் படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீரைக் கொதிகலன்களின் வாயிலாகச் சூடேற்றி நீராவி உண்டாக்கப்படுகிறது. கொதிகலன்களில் பயன்படும் நீருக்குக் கொதிகல நீர் (boiler water) என்று பெயர். கொதிநீர் தயாரிக்கும் முறை. புவியிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் நீர் தூயது அன்று. இதில், சுரைந்த வளிமங்கள், திண்மப்பொருள்கள் போன்றவை காணப்படுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு: வினை நீரில் கரைந்துள்ள வளிமங்கள், நீரில் பெரும் பாலும் ஆக்சிஜன் ஒரு மில்லியனுக்கு 10 பகுதி என்ற அளவில் கரைந்துள்ளது. வளி மண்டல நைட்ரஜன் நீரில் கரையக் கூடியதாக இருந்தாலும் எவ்வித வினையையும் ஏற்படுத்துவதில்லை. கார (alkaline reaction) உண்டாக்கக்கூடிய அம்மோனியா, கரிமப் பொருள்களின் வேதிப் பிரிவின் மூலம் வெளிப் பட்டு நீரில் கரைந்து காணப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து கார்போனிக் அமிலம் உண்டாகிறது. இவ்வமிலம் சுண்ணாம்பைக் கரைத்துக் கால்சியம் பை கார்பனேட்டை உண்டாக்குகிறது. இது நீருடன் பெரும்பாலும் காணப்படும் பொரு ளாகும். கடின உப்புகள். கால்சியம், மக்னீசியம் போன்ற வற்றின் உப்புகள், நீரில் பை கார்பனேட்டுகளாகவும். குளோரைடுகளாகவும், சல்பேட்டுகளாவும் காணப் படுவதுடன் நீரையும் கடினத்தன்மை அடையச் செய்கின்றன. கடினத்தன்மையற்ற உப்புகள், சோடியம் குளோ ரைடு, சோடியம் சல்ஃபேட், சோடியம் நைட்ரேட் ஆகியவை நீரில் கரைந்து காணப்படும். புவியிலிருந்து கிடைக்கும் நீரை அப்படியே தூய்மை செய்யாமல் கொதிகலன்களில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கடினமான பாறை போன்ற அடுக்குகள் கொதி கவனின் பக்கங்களில் படிய ஏதுவாகும். இவை கொதிகலத்தின் வெப்பம் கட டத்தும் தன்மையைக் குறைக்கின்றன. இதனால் கொதிகலன் குழாய்களால் கொதிகல நீர் 459 வெப்பத்தை நீரில் கடத்த முடியாமல் போக அதிக அழுத்தத்தின் காரணமாக அவை உடையவும் கூடும். மேலும் சிலிகா, மிகமிகக் கடினமான பாறை போன்ற எடுப்பதற்கு கடினமான அடுக்குகளைப் படியச் செய்வதோடு மட்டுமன்றி உயர் அழுத்த நீராவியில் ஆவியாகக் கலந்து செல்வதால் கொதி கலத்தைப் பழுதடையவும் செய்கிறது. நீராவியின் அழுத்தம் 56.75 கி.கி/ச.செ.மீ. க்கு மேல் செல்லும் போது நிலைமை மேலும் சீர்கெடும். எனவே 85-106 கி.கி./ச.செ.மீ. அழுத்தமுள்ள கொதிகலன்களில் சிலிகாவின் அளவை மில்லியனுக்கு 3 பகுதி என்ற விகிதத்தில் குறைச்சு வேண்டியுள்ளது. எனவே கடினநீரைக் கொதிசுலத்திற்கு அனுப்புமுன் மென்னீ ராக மாற்ற வேண்டியுள்ளது. இதற்குப் பின்வரும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. படியவைத்தல். இம்முறையில் வேதிப் பொருளை நீரில் கலந்து கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றை அதன் கூட்டுப் பொருள்களாக மாற்றிப் வைத்துப் பிரித்தெடுக்க முடியும். சுண்ணாம்பு நீர் முறை இதன் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படிய ஆவியாக்குதல். இம்முறையில் நீரை ஆவியாக்கி அதில் கலந்துள்ள திண்மப் பொருள்கள் பிரித்தெடுக் கப்படுகின்றன. ஆற்றலையிழந்த நீராவியைக் குளிர வைத்து நீராக்கி மீண்டும் அந்நீரைப் பயன்படுத்த இம்முறை பின்பற்றப்படுகிறது. மின்னணுப் பரிமாற்று முறை (ion-exchange process). இம்முறையில் நீரின் கடினத் தன்மை. ஸியோலைட் (zeoiite) அல்லது செயற்கை ரெசின் (synthetic resin) கொண்ட படுகைகளின் வழியாகச் செலுத்தி நீக்கப்படுகிறது. மேற்சொன்ன முறைகளால் 100% தூய்மைப்படுத்த முடியாமையால் மேலும் இந் நீர் சீர்படுத்தப்படுகிறது. நீரைச் சீர்படுத்தும் முறை. இம்முறையில் நீருடன் தாழ் அழுத்தக் கொதிகலத்தில் சோடியம் கார்ப் னேட்டும் உயர் அழுத்தக் கொதிகலன்களில் சோடியம் ஹெக்ஸாமெட்டா பாஸ்ஃபேட்டும் கார சோடா போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. இவற்றின் உதவி யால் நீரில் உள்ள கடினப் பொருள்கள் சேறு போன்ற பொருள்களாக மாற்றப்பட்டு வெளி யேற்றப்படுகின்றன. நீரில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு வளிமங்கள் காற்று நீக்கும் முறை (deaeration) மூல மாக வெளியேற்றப்படுகின்றன. உயர் அழுத்தக் கொதிகலன்களில் ஆக்சிஜனைப் பிரிக்க ஹைட்ரசீன் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கொதிநீரைக் கொண்டு கொதிகலன்களின் மூலமாக ஆவியாக்கி, அதன் ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கே. சிவராஜன்