பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 கொதி நிலையும்‌ உருகுநிலையும்‌

468 கொதிநிலையும் உருகுநிலையும் தூய நீர்மங்களுக்குக் கொதிநிலையும், பனிநிலை யும் (dew point) ஒன்றே. (பணி நிலை என்பது ஆவியைக் குளிர்விக்கையில் முதல் நீர்மத் திவலை தோன்றும் வெப்பநிலையாகும். கொதிநிலையில் முதல் ஆவிக் குமிழ் தோன்றும்). கரைசல்களுக்கு இவ்விரண்டு வெப்பநிலைகளும் வெவ்வேறாகும். கொதிநிலையும் (Tb) உள்ளுறை (AH ஆவி/M) Kb RTb M 1000 H ஆவி வெப்பமும் என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்பு கொண் டுள்ளன. இங்கு Kb என்பது மோலால் கொதிநிலை உயர்வு மாறிலியாகும். கொதிநிலை, சூழ்வெளியின் அழுத்தத்தால் பாதிக்கப்படும் பண்பாதலால் சூழலின் அழுத்தத்தை வெற்றிட இறைப்பியினால் (vacuum pumb) குறைத் தால், கொதிநிலையைக் குறைத்து, நீர்மத்தை அறை வெப்பநிலையிலேயே கொதிக்கச் செய்யலாம். கொதி நிலைக்குக் கீழான வெப்பநிலைகளிலேயே சிதை வுறும் நீர்மங்களைத் தூய்மையாக்க இம்முறை சிறந்த தாகும். கொதிநிலை பற்றிய அறிவின் பயன்கள். சூழ் வெளி அழுத்தத்தை 17 மி.மீ ஆகக் குறைத்தால் நீரை அறை வெப்பநிலையிலேயே கொதிக்கச் செய்ய லாம். மலையுச்சியில் வசிப்போர் உணவைச் சமைப் பதற்கு சற்றே அல்லலுறுவர். ஏனெனில் மலை போன்ற உயர்ந்த பகுதிகளில் நீர் குறைந்த வெப்ப நிலையிலேயே கொதிக்கத் தொடங்கும். எனவே உணவு வேகத் தேவையான வெப்பம் கிடைப்ப தில்லை வேகவைத்தல் தொடர்பான வேதிவினைகள் மெல்ல நிகழ்கின்றன, எனவே, உணவு தயாரிப்பதற்கு நேரமாகும். மாறாக அழுத்தமேற்கும் சமையல் சுலத்தின் (pressure cooker) அழுத்தத்தால் நீரின் கொதிநிலை உயர்த்தப்படுகிறது. வெப்பநிலை உயர் வதால் சமையல் தொடர்பான வினைகளும் விரை வாக நிகழ்கின்றன. ஒரு நீர்மம் அதன் இயல்பான கொதிநிலையில் கொதிக்க வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. நீர் சலனமற்றிருந்தாலோ, அதன் மேற் பரப்பில் ஒரு மெல்லிய எண்ணெய்ப் படலம் மூடி யிருந்தாலோ, நீரின் வெப்பநிலையை 100°Cஐ விடத் தேவைக்கேற்ப உயர்த்தினாலும் கொதித்தல் நிகழ்லதில்லை. ஆனால், இச்சூழ்நிலையில் சற்றே மாற்றம் தோன்றிடின் வெடிப்பது போன்று நீர் கொதிக்கும். இவ்வாறு மீச்சூடடைவதைத் தடுப் பதற்குக் கொதிகலன்களில் நீர்மத்துடன் விளிம்புகளும் மூலைகளும் கொண்ட, நீர்மத்துடன் வினையுறாத பீங்கான் சில்லுகளை இட்டுவைத்தல் வழக்கம். இச்சில்லுகளின் மூலைகளில் ஆவியின் குமிழ்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உருவாகிறது. கூரான 4 ஒருசில நீர் இரட்டைகள் கொதிநிலை மாறாக் கலவையை (azetropes) உருவாக்கவல்லவை. ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் அமைந்துள்ள நீர்மக் கலவை தனி நீர்மத்தைப் போன்று செயல்பட்டால் அக் கலவை, கொதிநிலை மாறாக் கலவை எனப்படும். கலவையின் கொதிநிலை அதன் உட்கூறுகளின் கொதிநிலைகளுடன் தொடர்பற்றிருக்கும். நீர் எத்தில் ஆல்கஹால், HCI - H,O ஆகிய கலவைகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். எத்தில் ஆல்கஹால்- நீர்-பென்சீன் கல்வை ஒரு மூலக்கூறு கொதிநிலை மாறாக் கலவையாகும். கொதிநிலை மாறாக் கலவையின் தோற்றம் ரௌல்ட் விதியிலிருந்து வழுவுவதால் நேர்கிறது. உருகு நிலை. ஒரு பொருள் திண்ம நிலையி லிருந்து நீர்ம நிலைக்கு மாறும் வெப்ப நிலை, உருகு நிலை (melting point) எனப்படுகிறது. திண்மையான பொருள்களை வெப்பப்படுத்தும்போது வெப்ப ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மப் பொருள்கள் நீர்ம நிலைக்கு மாறுதலடைகின்றன. ஆனால் அயோடின் போன்ற சில பொருள்கள் வெப்பநிலை அதிகரிப்பின்போது உரு காமல் நேரிடையாக வளிமநிலைக்கு மாறிவிடுகின் றன. இத்தகைய நேரடி ஆவியாக்கலுக்குப் பதங்க மாதல் (sublimation) என்று பெயர். வளி பொதுவாக உருகுநிலைகள் யாவும் ஒரு மண்டல அழுத்தத்திலேயே கணக்கிடப்படுகின்றன. தனி உருகுநிலைக்கான (absolute melting temperature Tm)கிளேப்ரான் சமன்பாட்டின்படி (Clapcyron equa tion), TmAV F AHF AV H d Tm d p = உருகுநிலையின்போது ஏற்கப்படும் வெப்பம் P = அழுத்தத்தின் அளவு F கன அளவு மாறுதல் உருகுநிலையின்போது அனைத்துப்பொருள்களும் வெப்பத்தை ஏற்று விரிவடைகின்றன. எனவே. அழுத்தம் அதிகரித்தால் உருகுநிலையும் அதிகரிக் கிறது. ஆனால் சில பொருள்கள் (எ கா: நீர்) உருகு நிலையின்போது சுருங்குகின்றன. 0*C இல் இருக்கும் பனிக்கட்டியின் மீது அழுத்தம் செலுத்தப்படும்போது உருகுகிறது. உருகுநிலையில் மாறுதலை ஏற்படுத்த அழுத்தத்தில் அதிச மாறுதல் இருக்கவேண்டும். 10 வளிமண்டல அழுத்தத்தில் பனிக்கட்டியின் உருகு நிலையில் 0.075°C அளவு மட்டுமே வெப்பநிலையில் வேறுபாடு அடைகிறது. வெப்பநிலை குறையும்போது சாதாரண அழுத் தத்தில் எல்லாப் பொருள்களும் உறைந்து திண்மங்