பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொந்தளிப்பு 469

களாகின்றன. மிகவும் குறைந்த உருகுநிலையைக் கொண்டது வூட்ரஜன் (14 K) ; ரீனியம் அதிக உருகுநிலையைக் (3700 K) கொண்டுள்ளது ஹீலியத்தை 25 வளிமண்டல அழுத்தத்திற்குட்படுத் தும்போது அது திண்மமாகிறது. . நீர்ம கரைசல்களின் உறைநிலைக்கும், தனித்த கரைப் பானின் உறைநிலைக்குமுள்ள வேறுபாட்டைக் கொண்டு கரைந்துள்ள கரைபொருளின் (solute) மூலக்கூறு எடையைக் கணக்கிடலாம். ஏனெனில், கரைசலின் உறைநிலை தனித்த கரைப்பானின் உறை நிலையைவிடக் குறைவாகும். மே. ரா. பாலசுப்பிரமணியன் த.தெய்வீகன் கொந்தளிப்பு 469 கொந்தளிப்பு பாய்பொருள்களின் இயக்கம் (motion of fluids) பற்றிக் கூறும்பொழுது சீரான இயக்கத்தை மீறிய பண்பைக் கொந்தளிப்பு (vortex) என்பர். பாய் பொருள்களின் அத்தகைய இயக்கத்தைக் கொந்த ளிப்பு ஓட்டம் என்று கூறுவர். பாய் பொருள்களின் சீரான இயக்கத்தை வரிச் சீரியக்கம் அல்லது இழைவரி இயக்கம் என்று கூறுவர். கிடைமட்ட நுண்புழைக் குழாயில் புற அழுத்த முசுட்டின் (external pressurc hcud) உதவியால் நீர்பு ஓட்டம் நிகழ்வதாகக் கொள்ளலாம். இந்நீர்ம ஓட் டத்தில் நுண்புழைக் குழாயின் சுவரைத் தொட்டுக் கொண்டிருக்கும் நீர்ம அடுக்கு அமைதி நிளையில் இருக்கும். அந்நீர்ம அடுக்கின் திசைவேகம் கழி ஆகும். நுண்புழைக் குழாயின் அச்சுப் பகுதியிலுள்ள நீர்ம அடுக்கின் திசைவேகம் பெரும் அளவைத் கொண்டிருக்கும். இவ்விரு அடுக்குகளுக்கு இடைப் பட்ட நீர்ம அடுக்குகளின் திசைவேகங்கள் இடைப் பட்ட அளவில் உள்ளன. நுண்புழைக் குழாயின் ஆரமும் புற அழுத்த முகட்டின் அளவும் குறை வாக இருக்கும்பொழுது நுண்புழைக் குழாயில் நீர்ம ஓட்டம் இழைவரி இயக்கமாகவிருக்கும். நீர்மத் துகள் செல்லும் பாதையைக் குறிப்பது சீரோட்டவரி அல்லது இழைவரி எனப்படும். இவ்விழைவரிகள் நேர்கோடுகளாகவோ வளைகோடுகளாகவோ இருக் கலாம். இவ்வரிகள் படம்- 1 இல் காட்டியவாறு இணையாகவுள்ளன. இழைவரியில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலும் நீர்மத்தின் திசைவேக அளவு ஒரே அள வாகவிருக்கும். இக்கருத்தைப் படம்-2 விளக்குகிறது. ABC என்ற கோட்டின்மேல் நீர்மத்துகள் ஒன்று செல்வதாகக் கொள்ளலாம். A என்ற புள்ளியைச் சேரும்பொழுது அதன் திசைவேகம் VA என்றிருக்க லாம். A என்ற புள்ளியில் வரையப்பட்ட தொடு படம் 1 கோட்டின் திசையில் VA இயங்கும். B என்ற புள்ளி யைச் சேரும்பொழுது அதன் திசைவேகம் VB அப் புள்ளியின் தொடுகோட்டுப் பாதையில் அமையும். அதுபோலவே ( என்ற புள்ளியில் Vc என்ற அள வைப் பெறுகிறது. Vas Va, Vc ஆகிய மூன்று அளவுகளின் எண் மதிப்புகள் சமமாக இருக்க வேண் டியதில்லை. ABC என்ற கோட்டுப் பாதையில் செல்லும் ஒவ்வொரு துகளின் திசைவேகம் A யைச் சேரும்பொழுது VA அளவையும், B யைச் சேரும் பாழுது Ve அளவையும், c யைச் சேரும் ழுது Vc அளவையும் பெறும். இவ்வகை இயக்கமே இழைவரி இயக்கம் எனப்படும். பொ YA படம் 2 VC நீர்மத்தின் புற அழுத்த முசுட்டின் அளவு அதிகரிக்கும்பொழுது நீர்மத் துகள்களின் திசை வேகங்கள் அதிகரிக்கின்றன. நீர்மத்தின் அழுத்த முகட்டின் அளவை அதிகரித்துக்கொ காண்டு செல்லும் பொழுது நீர்மத்தின் ஒரு குறிப்பிட்ட திசை வகத்திற்கு மேல் இழைவரி இயக்கம் மறைந்து கலங்கிய அல்லது கொந்தளிப்பு யக்கமாக மாறுபடுகிறது. எந்தக் குறிப்பிட்ட திசைவேகத் திற்கு மேல் இழைவரி இயக்கம் கொந்தளிப்பு இயக்க