480 கொம்புகள்
480 கொம்புகள் இருந்தது. நெற்றியிலுள்ள இரத்த நுன் குழிகள் இங்கும் பரளியிருந்தன. இந்த எலும்புத்தண்டைச் சுற்றி மேல்தோல் அடுக்கிலிருந்து தோன்றும் கொம்புப் பொருளாலான வெளிப்பகுதி றிலையாகக் காணப்பட்டது. கொம்பின் அடிப்பகுதியின் வெளிப் புறம் வளர்ச்சியடைவதால் கொம்பு நீண்டு வளரும். இதனால் கொம்புகளின் அடிப்பகுதியில் வளர்ச்சி வளையங்களைக் காணலாம். இவற்றின் கொம்புகள் அடிப்பகுதியில் தொடர்ந்து சேர்க்கப்படும் பொருளால் வளர்ச்சி யடைவதால் இவற்றின் வடிவத்தை மாற்ற முடி யாது. இவ்வகையில் இவை கூர்நகம், தந்தம். மெல்லுடலிகளின் ஓடு ஆகியவற்றைப் போன் றுள்ளன. இவ்வகைக் கொம்புகளில் மிகு வளர்ச்சி இடம், குறை வளர்ச்சி இடத்துக்கு நேர் எதிர்ப்புறம் இருக்குமாயின் கொம்பு ஒரே திசையில் வளைந்து வளரும்.எ.கா:காண்டாமிருகக் கொம்பு, மிகு குறை வளர்ச்சி முனைகள் எதிரெதிர்ப்புறங்களில் அமையா விட்டால் கொம்பு சுருள் திருகு வடிவம் பெறும். எ.கா: செம்மறியாட்டுக் கொம்பு. கொம்புகள் அமைப்பிலும், வேதி இயைபிலும், பண்பிலும் மாறுபட்டிருக்கின்றன. ஆடு, மாடுகள் இரலை ஆகியவற்றின் கொம்புகளின் நடுப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகுந்துள்ள எலும்புப் பொருள், அசு வயிரம் போல அமைந்தும் அதற்கு மேல் கெட்டியான கொம்புப் பொருள் உறை மூடியும் இருக்கும். ஒட்டகச்சிவிங்கியின் கொம்பின் உள்ளே எலும்:புப்பகுதியும் அதை கொம்பு போல மூடிக்கொண்டு SS (கலைமான்} முதல் துண்டில் கிளையற்ற குச்சி போலவும் ஆண்டுதோறும் விழுந்து முளைக்கும் போது புதிய கிளைகருடமும் கொம்பு காணப்படும் நிலை தோலுமிருக்கும். மான்கொம்பு வளரும்போது உள்ளே எலும்பும், மேலே இரத்தக் குழாய்கள் நிறைந்த தோலுமாக இருந்து, வளர்ந்து முதிர்ச்சி யுற்ற பிறகு, வெறும் எலும்புப் பொருளாக மாறும். மான் கொம்பு, கலைகள் (tines) எனப்படும் கிளை களைக் கொண்டது. கலைகள் இருப்பதாலேயே மானின் கொம்புகள் கலைக் கொம்புகள் (antlers) எனப்படுகின்றன. இது ஆண்டுதோறும் உதிர்ந்து, புதியன முளைக்கும் முட்கொம்பி என்று பொருள்படும். ஆன்டிலோ கேப்ரா என்னும் வட அமெரிக்க விலங்கின் கொம்பு. மாட்டின் கொம்பைப் போன்றது. மான் கொம்பில் இருப்பது போல இதன் கொம்பில் ஒரு கிளையும் இருக்கும். இது முள் எனப்படும். மானின் கொம்பைப் போல முழுதும் உதிராமல் வெளியே உள்ள கொம்புப் பொருளாலான உறை மட்டும் உதிரும். இவ்விலங்குகள் இரட்டைக் கொம்பு வரிசையைச் சேர்ந்தவை. ஒற்றைக் குளம்பி வரிசையைச் சேர்ந்த காண்டா மிருகத்தின் மூக்கின் நடுக்கொட்டில் கொம்புகள் ஒன்றோ இரண்டோ உண்டு. இவை முற்றிலும் கொம்புப் பொருளாலானவை, வெறும் மேல் தோலி லிருந்து வளர்ந்துள்ள உறுப்பு, தோலிலுள்ள மயிர்க் குருத்துக்களிலிருந்து கொம்புப்பொருள் மிகை வளர்ச்சி யுற்று (hypertropay) ஒரு போக்காக அமைத்துள்ள நார் போன்ற பகுதிகளாக வளர்ந்து அனைத்தும் கெட்டியாக நெருங்கி ஒன்றாக ஒட்டிக் சொண்டிருக் கும். மேற்கூறிய நான்கு வகைக் கொம்புகளுக்கும் ஏற்ப நான்கு குடும்பங்கள் அமைந்துள்ளன. அவை 1 3 4 5 6 கலைமான் கொம்புகளின் படிமலாசசி (எளிமையிலிருந்து சிக்கலான அமைப்பைப் பெறுதல்) 1,2. நடுமயோசின் காலம் 3. மேல் மயோசின் காவம் 4. மேல்மயோசிள்பிளியோசின் காலங்கள் 5. பிரியோசின் காலம் 6.பிளிஸ்ட்டோசிக் காலம்