பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொராசிஃபார்மிஸ்‌ 491

கொராசிஃபார்மிஸ் 491 நூலோதி. A. De Candolie, Origin of Cultivated plants, Hafner Publishing Co., New York, 1967; A.F. Hill, Econo.nic Botany, McGraw-Hill Book Co.. London, 1952. கொராசிஃபார்மிஸ் பனங்காடை, பஞ்சுருட்டான் எனப்படும் வண்டுண்ணி. கொண்டலாத்தி (Hoopoes), இருவாயன் ஆகி யவை உள்ளடங்கிய பறவை வரிசையில் கொரா சிஃபார்மிஸ் மீன் கொத்திகள் அடங்கும். இவை தோற்றத்திலும், பழக்க வழக்கத்திலும் பெரிதும் மாறுபட்டுள்ள போதும் ஒரு சில பண்புகள் பொது வாகக் காணப்படுகின்றன. இவை தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ற தகவமைப்புப் பெற்றுள்ளன. இவற்றின் முதல் 3 விரல்கள் பெரும்பாலும் இணைந் துள்ளன. வெப்ப மண்டலங்களிலும் தென்னிந்தியா விலும் காணப்படும் இவற்றின் கூரிய அலகுகள் மீன் பிடிப்பதற்கு ஏற்றவாறு நீண்டும், தடித்தும் இருக் கும். அழகிய வண்ணமுடையன. இவை மீன் பிடிக்கும் முறை குறிப்பிடத்தக்கது. நீர்ப்பரப்பின்மேல் 10 மீ உயரத்தில் இறக்கை களை வேகமாக அடித்துக்கொண்டு அந்தரத்தில் நின்றவாறே நீர்பரப்பை ஆராயும். நீரில் மீன் தென் பட்டவுடன் இறக்கைகளை மடக்கிக் கொண்டு செங்குத்தாக நீரில் பாய்ந்து தம் நீண்ட அலகில் மீனுடன் வெளிப்படும். இவற்றின் குறி பெரும்பாலும் தப்புவதில்லை. மீன்,தலளை, நீர் வாழ் புழு, பூச்சி முதலியவற்றையும் உணவாகக் கொள்ளும். இவை நீர் நிலைகளின் கரைகளில் செங்குத்தான சுரங்கம் போன்ற கூடு அமைத்து 5-7 முட்டைகளிட்டுக் குஞ்சுகள் பொரிக்கும். பனங்காடை. புறா போன்று இப்பறவைகள் பல அழகிய வண்ண அமைப்புடையன. மீன் கொத்தி களைப் போலவே விரல் அமைப்பும் வாழிடமும் கொண்ட இவற்றின் அலகுகள் பக்கவாட்டில் சற்றுத் தடித்தும் நீண்டும் இருக்கும். பூச்சி, வண்டு, ஓணான். சிறு பறவைக் குஞ்சு முதலியவற்றை உணவாகக் கொள்ளும் பனங்காடை, மரப் பொந்துகளிலும் கட்டடப் பொந்துகளிலும் வைக்கோல், புல் முதலிய வற்றைப் பரப்பி மென்மையான இருக்கை செய் முட்டையிடும். து முழுவதும் கொண்டலாத்தி, தென்னிந்தியா காணப்படும் இவற்றின் தலையில் கரும் சிவப்பு இறகு களாலான விசிறி போன்றதொரு கொண்டை உண்டு. க்கொண்டை அடிக்கடி மடிக்கவும், விரியவும் வாய்ப்பாக இருக்கும். கரும் சிவப்பு உடலும் நீண்டு மெலிந்த அலகும் கொண்டவை. இவை மண்ணைக் கிளறி புழு, பூச்சிகளைத் தேடி எடுத்து உண்ணும். மரங்கள், சுவர்களிலுள்ள பொந்துகளில் வைக்கோல் போன்றவற்றைப் பரப்பி மென்மையாக்கி முட்டை யிடும். பஞ்சுருட்டான் (Indian bee enter). சிட்டுக் குருவி அளவில் இருக்கும் இப்பறலைகள் தென்னிந்தியா முழுதும் காணப்படுகின்றன. நீண்டு, மெலிந்து, பெரிய கறுப்பு வெள்ளை இருவாயன் கேரள வெள்ளை மீன் கொத்தி பனங்காடை