கொல்சிசீன் 499
கொல்சிசீன் 499 சால் உண்டாகும் இவ்வழற்சியில் கோழைச் சுரப்பிகள் லிருந்து உண்டாகும் சளி முதலில் நீர்மமாக இருக்கும். சில நாள்களில் பாக்டீரியாத் தொற்றினால் அழற்சி தீவிரமாகிக் கெட்டிச்சளியாகும். தகுந்த மருத்துவம் செய்யாவிடில் கோழைப் படலச் சீழ் உண்டாகும். காற்றில் வரும் மகரந்தத் துகள்களாலோ, தூசி யாலோ ஏற்படும் ஒவ்வாமையால் முதலில் தும்மல் தொடங்கி மூக்குக் கோழைப் படலம் பாதிக்கப்படு கிறது. விழித் திரைப்படலமும் பாதிக்கப்படலாம். ஒவ்வாமையால் ஹிஸ்டமின் உடலில் உண்டாகிறது. இதன் அறிகுறியே தும்மல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, கண்களில் நீர் வடிதல் முதலியன. ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள் நல்ல பயனளிக்கும். படை கோழைப் படல அழற்சியால் தொடக்கத்தில் நீர் போன்ற சளி ஒழுகத் தொடங்குகிறது. கோழைப் படல் மேலணித் திசுக்கள் தனியாகவோ. யாகவோ சிதைவுறுவதாலும், கீழுள்ள நாளங்களில் ஏற்படும் கசிவுகளாலும், நீர் போன்ற சளி இறுகிக் கெட்டியாகும். தொற்றின் தீவிரம் குறைந்தால் மேலணித் திசுக்கள் விரைவில் பெருகி அழற்சி நீங்கும். தகுந்த மருத்துவம் செய்யாவிடில் திசுக்களின் சிதைவு அதிகமாகி நார்த்தன்மை, துகள்தன்மை போன்றன ஏற்பட்டு வேறு பல சிக்கல்கள் உண்டாகக்கூடும். கொல்சிசீன் இந்த ஆல்கலாய்டு கொல்ச்சிகம் ஆடம்னேல் எனும் ஒருவித்திலைத் தாவரத்தின் வைக்கப்பட்ட வேரிலிருந்து பெறப்படுகிறது. வில்லியேசி குடும் பத்தைச் சார்ந்த கொல்ச்சிகம் ஆடம்னேல், லின் (colchicum autumnale, Jinn) எனும் இப்பேரினம் 65 சிற்றினங்களைக் கொண்டது. தோற்றம், ஐரோப்பாவையும் வட ஆஃப்ரிக்கா வையும் தாயகமாகக் கொண்ட கொல்சிசீன் தற் போது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வளர் கிறது.மேலும், வெப்ப மிதவெப்ப மிதமான குளிர்ச்சி மண்டல நாடுகளில் இச்செடி மிகவும் செழிப்புடன் வளர்கிறது. வளரியல்பு. பல்லாண்டு வரை நிலைத்து வாழும் இக் குறுஞ்செடி தரையின் கீழ் குமிழ் போன்ற கந்தத்தைக் (corm) கொண்டுள்ளது. இப்பூண்டைப் புல்வெளிக் குங்குமப்பூ (meadow saffron) என்றும் கூறுவர். இலைகள். காம்பற்ற, இணைபோக்கான நரம் பமைப்பைக்(parallel venation) கொண்ட இலைகள், பொதுவாக, தரையின் கீழ்த்தண்டில் வட்ட அடுக்கு (whorled) அல்லது சுற்று முறையில் அமைந்திருக்கும். அ.க.932 அ மஞ்சரி. ஒன்று அல்லது அரிதாகச் சில மலர் களைக் கொண்டது. மஞ்சரி இலைக் கோணத்திலோ தண்டின் நுனியிலோ இருக்கும். ஒழுங்காக ஆரச் சமச்சீருடைய மேல் மட்டச் சூல்பைகொண்ட இரு பால் மலர்கள். பூவிதழ் வட்டம் (perianth). பொதுவாக 3 + 3 பெரிதாயும், அழகாயும் இருக்கும். அரிதாக 4 + 4 இருக்கும். உள்வட்டத்தில் மூன்றும், வெளிவட்டத் தில் மூன்றுமாக 6 பூவிதழ்கள் உண்டு. அளவிலும், அமைப்பிலும் ஒத்துள்ளமையால் புல்லி இதழ்கள் (sepals). அல்லி இதழ்கள் (petals) என்று பிரித்தறிய இயலாது, பூவிதழ்கள் சூல்பையிடமிருந்து தனித்தே காணப்படும். வெளி இதழ்கள் யாவும் தொடு இதழ் ஒழுங்கமைப்பிலும் (valvate aestiva- tion) உள் வட்ட இதழ்கள் அடுக்கிதழ் (imbricate aestivation) அமைப்பிலும் உள்ளன. நிலைத்திருப் பவை; இதழ்கள் பசுமையாகவோ கரு மஞ்சள் நிறத் துடனோ இருக்கும். மகரந்தத்தாள் வட்டம். பொதுவாக 6. அரி தாக 3 மகரந்தத் தான்கள் மட்டும் இருக்கும். மகரந்தத் தாள்கள் யாவும் சூலகத்திற்கு மேல் மட் டத்திலோ பூவிதழ் வட்டத்தின் மீதோ காணப்படும். மகரந்தக்கம்பிகள் தனித்தோ இணைந்தோ இருக் கும். இரண்டு ஈட்டிவடிவ மசுரந்தப்பைகள் நுனியில் பிளவுற்று உள்நோக்கி இருக்கும். நீள் போக்கில் வெடிப்பவை. சூலக வட்டம். மேல் மட்டச் சூல்பை, மூன்று சூலக இவைகள் இணைந்து உருவாகும். மூன்று சூல் அறைகளைக் கொண்டது. ஒவ்வோர் அறையிலும் இரண்டு அல்லது இதற்கு மேற்பட்ட சூல்கள் அவற் றின் உட்கோணத்தை நோக்கி அமைந்திருக்கும். சூல்கள் அனட்ரோபஸ் (anatropus) வகையைச் சார்ந்தவை. சூல்தண்டு தனித்து, நீண்டு, கம்பி போன்றது. சூல்முடி மூன்று பிரிவுகளைக் கொண்டது. கனி. அறை அல்லது சுவர் வெடி கனி. மூன்று அறைகளைக் கொண்டது. விதை விதைகள் பல. ஒவ்வொரு விதையும் பெருமளவிலான முளைசூழ்தசையைக் (endosperm) கொண்டது; கரு சிறியது. மருத்துவப்பண்புகள். மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, கீழ்வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களை விரைவில் குணப்படுத்த கொல்சிசீன் பெரிதும் பயன்படுகிறது. மரபியல் ஆய்வுகளில், தாவரங்களில் இயற்கை யாகவே உள்ள குரோமசோம்களின் எண்ணிக் கையைச் செயற்கை முறையில் இருமய மும்மய அல்லது நான்குமய அல்லது கொல்சிசீன் தற்போது அல்லது பன்மயமாக்க, பெரிதும்