502 கொலம்பஸ்
502 கொலம்பஸ் விழந்து. மனவளர்ச்சி குன்றி,40-45 வயதை நெருங்கும்போது இறப்பு ஏற்படுகிறது. பிறப்புடன் ஒட்டிய தோல் அழற்சி (congenital ichthyosis) நோய் ஓடுங்கிய நிலைக் கொல்லி ஜீன் களால் நிகழ்கிறது. இந்நோய் தாக்கிய குழந்தை களின் தோல் வெடித்து இரத்தம் பீறிடும். பழ ஈக்களில் (fruit flies) வெண்ணிறக்கண்கள், இறகுகளின் தன்மை ஆகியவை கொல்லி ஜீன் களால் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் பறக்கும் தன்மை குறைந்து இறப்பு அதிகரிக்கும். கொலம்பஸ், கிறிஸ்டோஃபர் -ஜி.எம்.நடராஜன் இவர் ஸ்பெயின் நாட்டின் ஜெனோவா (Genoa ) என்னும் நகரத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை டொமினிகோ கொலம்போ ஒரு நெசவாளி ஆவார். கொலம்பஸ் கிறிஸ்டோஃபர் இளம் பருவத்தில் தந்தையின் தொழிலையே மேற்கொண்டார். பின்னர் பல கடல் வழிப்பயணங்களை மேற்கொண்டார். ப்பயணங்களால் இவர் வரலாற்றாய்வாளரால் இன்றும் புகழப்படுகிறார். புதிய கடல் வழிப் பயணம். பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் கடல்வழிப் பயணம் ஆபத்தாக இருந்தது. அந்நூற்றாண்டில் ஓரளவு பாதுகாப்பான கடல் வழிப் பயணத்தில் பயன்படும் மாலுமியின் திசைகாட்டும் கருவிகளான (mariner's compass), அஸ்ட்ரோலேப் கிராஸ் ஸ்டாஃப் முதலான வற்றை மாலுமிகள் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் கப்பல் கட்டும் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் போர்ச்சுகல் நாட்டில் மிக உறுதி யான வணிகக் கப்பல்கள் கட்டப்பட்டன. இவை பாதுகாப்பான கடல்வழிப் பயணத்திற்கு உதவின. கடல்வழிப் பயணக் காரணங்கள். 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய கடல் வழிகளையும் நிலப் பகுதிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐரோப்பி யர்கள் ஈடுபட்டார்கள். அம்முயற்சியில் வியக்கத்தகு வெற்றியைப் பெற்றவர்களில் கொலம்பசும் ஒருவர். ஐரோப்பியர்கள் வளம் கொழிக்கும் ஆசிய நாடு களைக் காணவும் அங்கு வணிகம் செய்யவும் ஆர்வம் கொண்டார்கள். திருச்சபையைச் சார்ந்த கிறித்துவக் குருமார் சிலர் மதத்தைப் பரப்பவும், தொண்டு செய்யவும் விரும்பி ஆசிய நாடுகளுக்கும் வேறு புதிய நிலப்பகுதிகளுக்கும் செல்ல ஆர்வம் கொண்டனர். கொலம்பசின் கடல் வழிப் பயணங்கள். மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் செல்ல முடியும் என்று கொலம்பஸ் நம்பினார். இக்காலக் கட்டத்தில்தான் உலகம் கோள வடிவமுடையது என்ற கருத்து ஐரோப்பியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மேற்காகவோ கிழக்கா கவோ பயணம் செய்தால் மீண்டும் அதே இடத்திற்கு வர முடியும் என்ற கருத்தை அவர்கள் உறுதியாக நம்பினார்கள். பிலிப்பா கொலம்பஸ் 1478 ஆம் ஆண்டு மோனிஷ் என்ற போர்ச்சுகீசியப் பெண்ணை மணந்து, லிஸ்பான் (Lisbon) நகரத்தில் குடியேறினார். தம் கடல்வழிப் பயணத்திற்கு முதலில் போர்ச்சுகல் நாட்டு அரசரின் உதவியை நாடினார். ஆனால் அவர் உதவி செய்ய மறுத்து விட்டார். ஆகவே. 1484 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிற்கு வந்து அந்நாட்டு அரசர் ஃபெர்டினாண்ட், அரசி சபெல்லா ஆகியோரின் உதவியை நாடினார். ஆனால் அந்த நேரத்தில் அரசரும், அரசியும் ஸ்பெயினில் உள்ள கிரானடா விலிருந்து மூர்களை விரட்டியடிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தனர். அதனால் உடனடியாக அவர்கள் கொலம்பசுக்கு உதவி செய்ய முன் வரவில்லை. எனினும் மூர்களுக்கு எதிரான போர் முடிவடை ந்த பின்னர், அரசரும் அரசியும் 1492 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினேழாம் நாள் உதவி செய்ய முன் வந்தனர். 1492 ஆம் ஆண்டு ஆகஸ்டு மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை சாந்தமரியா (Santa Maria) என்னும் கொலம்பஸ் சிறிய கப்பலில் நூற்றி இருபதின் மருடன் தம் பயணத்தை இத்தாலியின் பாலோஸ் துறைமுகத்தின் அருகிலுள்ள சால்டஸ் என்னுமிடத்தி லிருந்து தொடங்கினார், அச்சமிகு அப்பயுணம் 69 நாள் நீடித்தது. இறுதியில் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் அவர்கள் நிலப்பகுதியைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர். தாம் ஆசியாவின்