பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலிம்பிஃபார்மிஸ்‌ 505

கொலிம்பிஃபார்மிஸ் 505 யேறும் சிறிய குஞ்சுகள் 4-8 முறை தோலுரித் தலுக்குப்பின் பெரிய பூச்சிகளாக மாறுகின்றன. இப்பூச்சிகளில் வளர் உருமாற்றம் நிகழ்வதில்லை. கொலம்போலா ஒன்பது குடும்பங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. கமார் 1500 இனங்கள் விவரிக் கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 250 இனங்களுக்கு மேல் இங்கிலாந்தில் காணப்படுகின்றன. - எம்.எம்.ஷாகுல் ஹமீது நூலோதி. K.K. Nayar, et, al., General and Applied Entomology, Tata McGraw-Hill publishing Company Ltd., New Delhi, 1979. கொலஸ்ட்ரால் இந்த இது இரத்தத்தில் இருக்கும் கொழுப்புப்புரதங்களின் lipoproteins) ஒரு பகுதியாகும். கொலஸ்ட்ரால் மிகவும் எளிதாகச் செரிக்கப்படும் கொழுப்பு வகை. பெரும்பான்மையான கொலஸ்ட்ரால்கள் கொழுப்பு அமிலங்களின் எஸ்ட்டர்களாக உள்ளன. எஸ்ட்டர். அண்ணீரகப் புறணி, கல்லீரலில் காணப் படுகிறது. மூளையிலும் கொலஸ்ட்ரால் மிகுதியாக உள்ளது. இதன் வேதி அமைப்பில் 27 கார்பன் மூலக் கூறுகள் உள்ளன. இதில் ஒரு ஹைட்ராக்சில் (-OH) மூலக்கூறும், ஓர் இரட்டைப் பிணைப்பும் (double bond) உண்டு. உடலின் அனைத்துத் திசுக்களும் கொலஸ்ட் ராலை உற்பத்தி செய்கின்றன. மேலும், கல்லீரலி லிருந்து கொலஸ்ட்ரால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுப் பிற உறுப்புகளுக்கு அனுப்பப்படு கிறது. உடலின் மொத்த எடையில் 0.2% கொலஸ்ட் ராவாகும். இது பெரும்பாலும் திசுக்கள் அமைப்பின் நரம்பு உருவாக உதவுகிறது. மேலும் எலும்பு, தசைகள் உருவாகவும் ஓரளவிற்குத் தேவைப்படும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலில் சுமார் 10% அண்ணீரகச்சுரப்பியில் காணப்படுகிறது. இது ஹார்மோன் உற்பத்திக்குப் பயன்படுகிறது. மண்டலம் கொலஸ்ட்ரால் உடலின் தமனிக்குழாய்த் தடிப்பு (atherosclerosis) நோய் உண்டாவதற்கு ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. கொலஸ்ட்ரால், உடலில் தேவைக்கு மேல் இருந்தால் தீங்கு நேரிடும். மனி தனின் வளரும் பருவத்தில் திசுக்களின் வளர்ச்சிக்கும் ஹார்மோன்களின் சுரப்பிற்கும் கொலஸ்ட்ரால் மிகுதியாகத் தேவைப்படுகிறது. ஆனால் வயது மிகும் போது திசு வளர்ச்சியின் வேகம் குறைவதால் உடலில் தோன்றும் கொலஸ்ட்ரால் முழுமையாகப் பயன்படுவதில்லை. தன் விளைவாக, கொலஸ்ட் ரால் சுவர்களில் இரத்தத்தில் மிகுந்து இரத்தக் குழாய்களின் சிறிது சிறிதாகப் படிகிறது. இரத்தக் குழாய்களின் உள் சுற் றளவு. இரத்த ஓட்டம் மற்றும் இரத்தக் குழாய் களின் சுருங்கி விரியும் (elasticity) தன்மை குறையும். இவற்றால் இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைதல், இரத்த ஓட்டத்தடை, இதயத்தசைச் சிதைவு. பெரு மூளை இரத்த ஒழுக்கு (cerebral haemorrhage) முதலிய அஞ்சத்தக்க சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்காக இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவேண்டும். முக்கிய முதியவர்கள் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். மாக உள்ள கொழுப்பு மிகுந்துள்ள இறைச்சி, பால் ஆகிய வற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புக் குறைவாக உள்ள சூரியகாந்தி எண்ணெய், நல்லெண் ணெய் போன்ற தாவர வகை எண்ணெயைப் பயன் படுத்தலாம். குளோஃபைப்ரேட், நிகோடினிக் அமிலம் போன்ற மருந்துகளாலும் கொலஸ்ட்ராலின் அளவைக் றைக்கலாம். கு கொலஸ்ட்ரால் குறை இரத்தம் ச.ஆதித்தன் காண்க: இரத்தக் கொலஸ்ட்ரால் குறை நிலை கொலிம்பிஃபார்மிஸ் இவ்வரிசையில் வரும் பறவைகள் மூழ்கும் பறவை கள் எனப்படுகின்றன. கொலிம்பிஃபார்மிஸ் (colym - byformes) நியார்னித்திஸ் துணை வகுப்பில் நியோ னேத்தே மேல் வரிசையில் வகைப்படுத்தப்படும். எல்லாப் பறவைகளுமே கடல் பகுதியில் காணப் படும். இப்பறவைகள் பிற வரிசைப் பறவைகளை விட பல முறைகளில் மாறுபட்டுக் காணப்படு கின்றன. உணவைப் நீண்டு காணப்படும் கழுத்துப் பகுதி பிடித்து உண்பதற்கு ஏதுவாக உள்ளது. வால் பகுதியில் உள்ள சிறகுகள் குட்டையாகவும், இறக்கை சுள் சிறியவையாகவும் காணப்படும். கபாலம் ஷைசோநேத்தஸ் (schizognathous) வகையைச் சார்ந்தது; இதில் பேசிப்டெரிகாய்டு நீட்சிகள் காணப் படா.அலகு நேராகவும் கூர்மையாகவும் உறுதியாக வும் இறுக்கமாகவும் காணப்படும். சிறப்புப் பண் பாகக் கால்களின் விரல்களுக்கிடையில் விரலிடைச் சவ்வுகள் (web) காணப்படுகின்றன. இவை நீந்து F