கொழுகொம்புத் தாவரங்கள் 511
ஆடுகளின் மயிர்களில் ஒட்டிக் கொள்வது கம்பளி நெசவுக்கு இடையூறாகக் கருதப்படுகிறது. தி. ஸ்ரீகணேசன் நூலோதி. N. L. Bor, The grasses of Burma, Ceylon, India & Pakistan, Pergamon Press, Oxford, London, 1960. கொழுகொம்புத் தாவரங்கள் பெரும்பான்மையான தாவரங்களின் தண்டுகள் வலிமையும் உரமும் கொண்டுள்ளமையால் நிலத்திற்கு மேல் நிமிர்ந்து வளர்கின்றன. எனவே இவற்றை நிமிர் தண்டுத் தாவரங்கள் எனலாம். ஓங்கி உயர்ந்து, பரந்து விரிந்த கிளைகளைக் கொண்ட மரங்களும், புதர்ச்செடிகளும், கொளுஞ்சி,ஆவாரை சிறு செடிகளும் போன்ற இதற்கு எடுத்துக்காட்டாகும். இவற்றைத் தவிர வேறு சில தாவரங்களின் தண்டு கள் நிமிர்ந்து நிற்கும் திறன் அற்றவையாக உள்ளன. இவற்றுள் கிடைமட்டமான தண்டுடைய தாவரங் களின் தண்டுகள் நிமிர்ந்து நிற்கத் திறன் இல்லாமல் தரையைப் பற்றிக் கொண்டு கிடைமட்டமாக வளர் கின்றன. இவற்றுள் நெருஞ்சி போன்ற நிலம் படிந்த சிறு செடிகளும், வாடாமல்லி போன்று நுனிநிமிர் படர் தாவரங்களும், வல்லாரை போன்ற ஓடு தண்டு களும், செவ்வரளி போன்ற நுனி ஓடு தண்டுகளும், ஆகாயத்தாமரை போன்ற குட்டை ஒடுதண்டுகளும், சிலந்தி போன்ற தரை ஓடு தண்டுகளும் அடங்கும். இவ்வகையுள் அடங்காத மெலிந்த தண்டுகளுடைய தாவரங்களைக் கொழுகொம்பைப் பற்றிக் கொண்டு ஏறும் தாவரங்கள் என்று கூறலாம். வை தாங்கியை அல்லது மற்றொரு தாவரத்தைக் கொழு கொம்பாகக் கொண்டு பற்றி ஏறி வாழ்கின்றன. இவற்றுள் பின்னுங்கொடிகள் கொழுகொம்பைச் சுற்றிப் படரும். இக் கொழுகொம்பு உயிருள்ள மற்றொரு தாவரமாகவும் இருக்கலாம்; அல்லது உயிரற்றதாகவும் இருக்கலாம். வீட்டில் வளர்க்கும் அவரை, புடல், பீர்க்குப் போன்ற கொடிகள் படரத்தக்க பந்தலை அமைத்து அதன் மேல் படர வசதி செய்து தருவர். பின்னுங் காடி டிகளின் நுனிகள் மிகுதியும் தொடு உணர்ச்சி யைப் பெற்றவை. கொடியின் நுனி ஒரு சுற்று அசைவு அல்லது ஒரு சுழல் இயக்கத்தை உண்டாக்கு கிறது. இதன் அருகே ஒரு கொழுகொம்பு கிடைத் தால் கொடியின் நுனி அதைச் சுற்றிப் படரத் தொடங்கும். முதலில் இளகிய சுற்றுகளாக இருந்து, பிறகு வளர்ச்சியின் போக்கில் சுற்றுகள் இறுகிக் கொழுகொம்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு படருகின்றன. கொடிகளின் சுற்றுகள் இடப் பக்கமாக இருந்தால் இடப்பக்கப் பின்னுங்கொடி கொழுகொம்புத் தாவரங்கள் 511 என்று சொல்லப்படும். எ.கா: சங்குப்பூ: கொடி யின் சுற்றுக்கள் வலப்பக்கமாக இருந்தால் வலப் பக்கப் பின்னுங்கொடி எனப்படும். எ.டு: அவரைக் கொடி. இவற்றைத் தவிர கொடிகள் பற்றிப் படர் உள்ள வதற்கென்று தனியே சில உறுப்புகளின் உதவியால் பற்றி ஏறும் கொடிகளை, ஏறுகொடி கள் என்பர். மெல்லிய கம்பிச் சுருள் போன்று வளைந்த, மிகுதி யான தொடு உணர்ச்சியோடு கூடிய கொடிகளின் சிறப்பு உறுப்புகளுக்குப் பற்றுக் கம்பிகள் என்று பெயர். இக்கம்பிகளின் உதவியால் பிரண்டை, இனிப்புப் பட்டாணி, பட்டாணி, பீர்க்கு, புடல் போன்ற கொடிகள் கொழுகொம்பைப் பற்றிப் படரு கின்றன. மந்தாரை, மனோரஞ்சிதம் போன்ற கொடி களில் மெலிந்த பற்றுக் கம்பிகளுக்குப் பதிலாக வலிமையான கொக்கிகள் உள்ளன. இவற்றின் உதவி இத்தாவரங்கள் கொழுகொம்பைப் பற்றிப் படருகின்றன. ரோஜா, லான்டானா பிரம்புப்போன்ற வற்றில் வளைந்த முள்கள் கொழுகொம்புகளைச் சுற்றிப் படர உதவுகின்றன. இவை முள்கொடிகள் எனப்படும். யால் 1 மிளகு, வெற்றிலை போன்ற கொடிகளின் வேற்றிட வெளிவேர்கள் கொழுகொம்புகளைப் பற்றிக்கொண்டு ஏறி வாழ்கின்றன. சிறப்பு உறுப்புகள் எதுவும் இல்லாமல் பெரும் கொடிகளின் வேர்கள் நிலத்தில் பதிந்து. அவற்றின் தண்டுகள் ஓங்கி உயர்ந்து வளரும் பெரிய மரங்களைக் கொழுகொம்பு களாகப் பற்றி ஏறுகின்றன. கொழுகொம்புத் தாவரங்களின் உச்சியில்தான் இவற்றின் இலை, பூ, கனி காணப்படுகின்றன. கொழுகொம்புகளைப் பற்றிப் படரும் கொடிகளின் வளர் உருவத்திற்கான காரணத்தை ஆராய்ந்தால், அவை யாவும் தம் இலை களைச் சூரிய ஒளி பெரும அளவில் படுவதற்குச் செய்யப்படும் முயற்சிகளின் விளைவுகளே என்பதை அறியலாம்.- சேர்க்கை மகரந்தச் நிறைவுறும் வகையில், அவற்றின் பூக்கள் பூச்சிகளின் கண்களுக்குத் தெளி வாகத் தெரியும் விதத்தில் அமைய வேண்டும். அப் பொழுதுதான் மகரந்தச் சேர்க்கை உறுத் தியாக க நடை பெற்றுப் பூக்கள் காயாகிக் கனியாகும். கனிகளும், விதைகளும் எளிதில் பரவும் விதத்தில் அவற்றைத் தாங்கிப் பிடிக்கவும் படரும் கொடிகள் கொழுகொம்புத் தாவரங்களைத் படருகின்றன. தமக்கேற்ற தேடிப் கொழுகொம்புத் தாவரங்கள் தம் உள்ளமைப் பியலைப் படர்கொடிகளுக்காக மாற்றிக் கொள்ளும் தேவை ஏற்படுவதில்லை. மாறாக, படரும் கொடி களின் உள்ளமைப்பியல் அவை பற்றி ஏறுவதற் கேற்ற வகையில் மாறிக் காணப்படும்.பெரும்பாலான படர்கொடி களில் கொழுகொம்பைப்பற்றும் இடத்தில் 1